கற்காலத்தில் கல்லையும், கல்லையும் உரசி தீயை கண்டுபிடித்த மனிதனின் கண்டுபிடிப்புகள் இன்றுவரை மண்ணுக்கும், விண்ணுக்குமாக வானளாவில் விஞ்ஞானம் வளர்ந்து நிற்கிறது. அதாவது இன்றைய மனிதன் கருவில் தோன்றியதில் இருந்து அவனுடைய ஆயுள் முடியும் வரையும் விஞ்ஞான வளர்ச்சி அளப்பரிய பல செய்து கொண்டுள்ளது. கல்வி தொலைக்காட்சி, வானொலி, கணினி மற்றும் கைபேசி என விஞ்ஞான வளர்ச்சியால் நவீன கற்பித்தலில் கல்வித்துறை ஒரு படி மேல் நோக்கி சென்று கொண்டுள்ளது.
ஆனால், இன்று பலம் படித்தவன் கல்வியை விலை கொடுத்து வாங்கிக் கொள்ள 21- ஆம் நூற்றாண்டிலும் ஏழைக்கு கல்வி எட்டாக்கனியாகவே உள்ளது. ஜாதி, மதம் பாராமல் ஏழை, எளிய மக்கள் அரசு கல்வி கூடங்களை நாட தனியார் பள்ளிகளில் பயிலும் 1000 மாணவர்களுக்கு ஒரு அரசு பள்ளி மாணவன் சாதித்து கொண்டுள்ளான் என்பதே வேதனையான விஷயம்.
இப்படி ஒரு சூழ்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கிரீஷ் குமார். கொரேனாாவால் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களின் கற்றல் திறன் எப்படி உள்ளது? என்பது பற்றி அடிக்கடி பள்ளிகளில் ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில் ஆட்சியர் கிரீஷ் குமார் தனது மாவட்டத்தில் உள்ள அரசு துவக்க பள்ளிக்கு சென்றார். அங்கு அவர் மாணவர்களின் கற்றல் திறனை சோதனை செய்யும் வகையில் சில கேள்விகள் கேட்டார்.
அப்போது மாணவர்களுக்கு வகுத்தல் கணக்கு தெரியவில்லை. இதையடுத்து ஆட்சியர் கிரீஷ் குமார், அந்த வகுப்பின் ஆசிரியையும், தலைமை ஆசிரியையுமான சேனா துருவ் என்பவரிடம் 444யை 4ல் வகுக்கும் வகையில் மாணவர்களுக்கு வகுத்தல் கணக்கு சொல்லிக் கொடுக்கும்படி கூறினார். சேனா துருவிற்கு வகுத்தல் கணக்கு தெரியாததால் தவறாக செய்தார். இதனை கண்டு ஆட்சியர் கிரீஷ் குமார் அதிர்ச்சியடைந்தார். மேலும், ‛‛நீங்களே வகுத்தல் கணக்கு தெரியாமல் இருந்தால் மாணவர்களுக்கு எப்படி சொல்லி கொடுக்க முடியும்” என கேள்வி கேட்டு தலைமையாசிரியை சோனா துருவை கடிந்து கொண்டார்.
அதோடு வகுத்தல் கணக்கு தெரியாத சோனா துருவை தலைமையாசிரியை பொறுப்பில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் எனவும், அவரது ஊதிய உயர்வை ஒருமுறை நிறுத்தி வைக்கவும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். இதற்கிடையே வகுப்பில் மாணவர்கள் முன்பு வகுத்தல் கணக்கு தெரியாமல் இருந்த தலைமையாசிரியை சோனா துருவ் மற்றும் அவரை ஆட்சியர் கடிந்து கொள்ளும் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரப்பாகியுள்ளது.