பட்டுக்கூடு அங்காடியை சுற்றுலா துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அவர்கள் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பை தொடர்ந்து திமுக தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில், பட்டுக்கூடு அங்காடியை இன்று நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முத்துகாளிப்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமையில் சுற்றுலா துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அவர்கள் திறந்து வைத்தார்.

விபத்தில் சிக்கியர்களுக்கு அமைச்சசர் மா. மதிவேந்தன் அவர்கள் உரிய சிகிச்சை வழங்க உத்தரவு

சுற்றுலா துறை அமைச்சசர் மா. மதிவேந்தன் அவர்கள் இன்று காலை பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாமக்கல்லில் இருந்து இராசிபுரம் சென்று கொண்டிருந்தேன். அப்போது பொம்மைகுட்டைமேடு பகுதியை கடக்கும் பொழுது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஒன்று தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி இருந்தது.

உடனடியாக அமைச்சசர் மா. மதிவேந்தன் அவர்கள் விபத்து தொடர்பாக விசாரித்து, விபத்துகுள்ளானவர்களுக்கு உரிய சிகிச்சையை விரைந்து வழங்க உத்தரவிடடார்.

அர்ச்சகர்களுக்கு கோவிட் -19 நிவாரண நிதி வழங்கல்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தொகுதிக்கு உட்பட்ட இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்வரும் கோயில்களில் பணியாற்றிவரும் மொத்தம் 56 அர்ச்சகர்களுக்கு கோவிட் -19 நிவாரண தொகை ரூ. 4000 மற்றும் 10 கிலோ அரிசி, 15வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் முன்னிலையில் சுற்றுலா துறை அமைச்சர் மா . மதிவேந்தன் வழங்கினார்.

ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர்களுக்கு கோவிட் -19 நிவாரண உதவி வழங்கல்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர்களுக்கு கோவிட் -19 நிவாரண உதவித் தொகையாக ரூ. 4000 மற்றும் பத்து கிலோ அரிசி உள்ளிட்ட நலதிட்ட உதவிகளை இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுற்றுலா துறை அமைச்சர் மா . மதிவேந்தன் வழங்கினார்.

அமைச்சர் மதிவேந்தன் சென்னை தீவுத்திடல் ஆய்வு


சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் சென்னை தீவுத்திடல் மற்றும் ஹோட்டல் தமிழ்நாடு ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் மேம்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆராய்ந்தார்.