நிலமற்ற விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய அரசு நிலம் 99 ஆண்டுகள் குத்தகை விட ஏற்பாடு செய்யப்படும் ..!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் பவன் கேரா மற்றும் ஜம்மு-காஷ்மீர் பிராந்திய காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் காரா ஆகியோர் அரசு நிலத்தில் விவசாயம் செய்யும் நிலமற்ற விவசாயிகளுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்பது உள்ளிட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து பேசிய பவன் கேரா, விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.4,000 நிதியுதவி வழங்கப்படவுள்ளது. அரசு நிலத்தில் விவசாயம் செய்யும் நிலமற்ற விவசாயிகளுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். மாவட்ட அளவிலான நீர் பாசன திட்டங்களை மேம்படுத்த ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கப்படும். இதன்மூலம் ஜம்மு-காஷ்மீர் விவசாயிகளுக்கு 100% நீர் பாசனம் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

ஜம்மு-காஷ்மீரில் வேலையில்லா இளைஞர்களுக்கு ஓராண்டுக்கு மட்டும் மாதம் ரூ.3,500 நிதியுதவி வழங்கப்படும். தேர்தலில் வென்று காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியமைத்தால் 1 லட்சம் அரசுப் பணிகளை நிரப்புவதற்கான தேர்வு அட்டவணை 30 நாள்களில் வெளியிடப்படும். அரசுப் பணிகள், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றுக்கான நடைமுறைகள் எளிதாக்கப்படும்.

இந்திய ஒற்றுமை நீதிப்பயணத்தின்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பெண்கள் எடுத்துரைத்தனர். இதையடுத்து, மகளிருக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தை தொடங்கவும் முடிவெடுத்துள்ளோம்.

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் சுகாதார காப்பீடு வழங்கப்படும். ஆட்சி அமைத்த 100 நாள்களில் சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டு அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்.

காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு மறுவாழ்வு அளிப்பது தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படும். மீண்டும் சட்டப்பிரிவு 370-ஐ அமல்படுத்துவது தொடர்பாக காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மக்களின் பிரச்னைகளை அறிந்துகொள்ள 20 மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றின் பரிந்துரையின் அடிப்படையிலேயே இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என பவன் கேரா தெரிவித்தார்.

குத்தகை வீ ட்டை சொந்தமாக்கி தருவதாக மோசடி செய்த இளைஞர் கைது

சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள வீட்டை ரூ.20 லட்சத்துக்கு குத்தகைக்கு எடுத்து அண்ணாதுரை என்பவர் வசித்து வந்தார். இவருக்கு வீட்டின் உரிமையாளருக்கு நன்கு பழக்கமானவர் சென்னை வள்ளுவர் கோட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது அறிமுகம் கிடைத்தது.

இந்நிலையில், குத்தகைக்கு இருக்கும் வீட்டையே ரூ.50 லட்சத்துக்கு சொந்தமாக வாங்கி தருகிறேன் என மாரியப்பன் உறுதி அளித்துள்ளார். இதை நம்பி பல்வேறு தவணைகளில் ரூ.50 லட்சம் கொடுக்கப்பட்டது. இதை பெற்றுக் கொண்ட மாரியப்பன், மியூச்சுவல்ஃபண்டில் முதலீடு செய்தால் மாதம் 2 சதவீத லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையும் உண்மை என நம்பி அண்ணாதுரை ரூ.35 லட்சம் கொடுத்துள்ளார்.

ஆனால், வீட்டை வாங்கி கொடுக்காமலும், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்த பணத்துக்கு வட்டிகூட கொடுக்காமலும் ஏமாற்றி உள்ளார். அதிர்ச்சி அடைந்த அண்ணாதுரை இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதன்படி, சென்னை மத்திய குற்றப் பிரிவு கூடுதல் காவல் ஆணையர் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனர். விசாரணையில் அண்ணாதுரையை ஏமாற்றியது தெரியவந்ததை அடுத்து மாரியப்பன் தலைமறைவு ஆனார். தலைமறைவாகஇருந்த மாரியப்பனை காவல்துறை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றது.