திராவிட கழகத்தை நிறுவிய பெரியாருடன் தொடக்கக் காலத்தில் பெரியாருடன் இணைந்து அண்ணாவும் திராவிடர் கழகத்திலேயே பயணித்து வந்தார். 1940-களின் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அண்ணா 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினர்.
அண்ணா தனிக்கட்சி தொடங்கினாலும் கூட பெரியார் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். இதனால் திமுகவில் தலைவர் பதவி பெரியாருக்காக காலியாக விடப்படும் என்று அறிவித்துவிட்டு, கடைசி வரை பொதுச் செயலாளராகவே அண்ணா இருந்தார்.
இந்நிலையில் தி.மு.க.வின் தாய் கழகமான திராவிட இயக்கங்களின் தந்தையாகக் கருதப்படும் பெரியாரின் பிறந்த நாள் செப்டம்பர் 17 கொண்டாடப்படுகிறது. அதேபோல அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே, திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாட்களை முன்னிட்டு முப்பெரும் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
தி.மு.க முப்பெரும் விழாவை முன்னிட்டு இன்று கொளத்தூர் – ஜி.கே.எம் காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழக மூத்த முன்னோடிகளான 260 கழக உடன் பிறப்புகளின் உழைப்பை பாராட்டி பொற்கிழி, நல உதவிகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பித்தார்.