உதயநிதி ஸ்டாலின்: தமிழ்நாடு, கேரளா ஒருபோதும் மதவாத சக்திகளுக்கு இடம் அளித்தது இல்லை…!

தமிழ்நாடு மற்றும் கேரளாவும்தான் மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் இடம் அளித்தது இல்லை. பாஜகவின் பாசிசத்துக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரளாவில் இந்திய ஊடகத்துறையின் மூத்த செய்தித்துறை நிறுவனமான மலையாள மனோரமா நடத்திய இலக்கிய கலாச்சார நிகழ்ச்சி யில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டின் திராவிட அரசியல் முன்னெடுப்புகள் என்பது மொழி உணர்வையும், பண்பாட்டு உணர்வையும் மையப்படுத்தியது. தமிழ்நாட்டின் ஆழமிக்க மொழி மற்றும் பண்பாடு அடிப்படையிலான வரலாறு, அதன் சமூக அரசியலுக்கு அடித்தளமாகவும் விளங்கி வருகிறது.

மொழி, இலக்கியம் மற்றும் அரசியலின் அடிப்படையில், தமிழ்நாட்டிற்கும் கேரளத்திற்கும் இணக்கமான வரலாறு உண்டு. 1924-ஆம் ஆண்டு கேரளத்தில் நடந்த வைக்கம் போராட்டத்தை முன்நின்று நடத்தி தந்தை பெரியார் வெற்றி பெற்றார். அதே போல, கேரளாவில் பிறந்த டி.எம்.நாயர், தமிழ்நாட்டில் நீதிக்கட்சியின் தொடக்கப்புள்ளியாக இருந்த தென் இந்திய நல உரிமை சங்கத்தை தொடங்கினார். அது தமிழ்நாட்டில் புது அரசியல் எழுச்சியை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாகவே, தற்போது இந்தியாவின் வளர்ச்சி பெறும் மாநிலங்களில் முன்னணி இடத்தை தமிழ்நாடும், கேரளமும் பெற்று வருகிறது. இரு மாநிலங்களிலும் வெற்றிகரமான முறையில், பாசிச – வகுப்புவாத நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையிடப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முன்பு, தமிழ் இலக்கிய பெருமை என்பது பக்தி, புராணம் சார்ந்ததாக தான் இருந்தது. ஆனால், எங்கள் தலைவர்களான அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்டோரின் முன்னெடுப்புகளால், பகுத்தறிவு மற்றும் அறிவியல் சிந்தனை சார்ந்த தமிழ் இலக்கியங்களின் புகழ் மேலோங்க தொடங்கின.

தமிழ்நாட்டின் திராவிட இயக்கங்கள், தமிழ் மொழியை அடிப்படை அடையாளமாக வைத்து செயல்படத் தொடங்கியதற்கு, தமிழ் மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்ற கருவியாக மட்டுமல்லாமல், பெருமை மிகுந்த தனித்துவத்தை நிலைநாட்டும் வகையிலும் அமைந்துள்ளதே காரணம். அதற்கான எடுத்துக்காட்டு தான் இந்தி திணிப்புக்கு எதிரான நடவடிக்கையாகவும் உள்ளது” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் இந்தி எனும் மொழியை எதிர்க்கவில்லை; இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். இந்தியாவில் மாநில மொழிகள் உயிரோடு இருக்கிறது என்றால் அதற்கு திராவிட இயக்கம்தான் காரணம்.

மாநில மொழிகளின் உரிமையை காப்பதில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் முக்கிய பங்கு வகித்தது. இந்தி திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கம் நடத்திய போராட்டம் மிக முக்கியமானது. முற்போக்கு மற்றும் அறிவியல் கருத்துகளை திராவிட இலக்கியம் வளர்த்தது. மூட நம்பிக்கைகளை களைவதற்கான பணிகளை திராவிட இயக்கம் வளர்த்தெடுத்தது. சமத்துவத்துக்கு எதிராகவும் ஏழை, எளிய மக்களின் நலனுக்கு எதிராகவும் சமஸ்கிருதம் இருந்தது. சமஸ்கிருதம் தெரிந்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை மாற்றியது நீதிக்கட்சிதான்.

சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். இந்தி திணிப்புக்கு எதிராக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தின. தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிரானதாக சமஸ்கிருதம் இருந்தது; சம உரிமையை மறுத்தது. முற்போக்கு கருத்துகளை வளர்த்தெடுப்பதில் தமிழ்த் திரைப்படங்கள் முக்கிய பங்காற்றின. திரைப்படங்கள் மூலமாகவும் சமூக சீர்த்திருத்தங்களை திமுக மேற்கொண்டது. பேரறிஞர் அண்ணா, கலைஞரின் திரை வசனங்கள் சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின.

நீட் நுழைவுத் தேர்வு என்பது மாநில சுயாட்சிக்கு எதிராக உள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பாஜக அரசின் திட்டத்தை தமிழ்நாடும், கேரளாவும் இணைந்து முறியடிக்க வேண்டும். தமிழ்நாடு மற்றும் கேரளாவும்தான் மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் இடம் அளித்தது இல்லை. பாஜகவின் பாசிசத்துக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்: பகுத்தறிவையும் அறிவியல் பூர்வ வளர்ச்சியையும் திராவிட இயக்கம்தான் வளர்த்து வருகிறது..!

திராவிட இயக்கம்தான் பகுத்தறிவையும் அறிவியல் பூர்வ வளர்ச்சியையும் வளர்த்து வருகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரளாவில் இந்திய ஊடகத்துறையின் மூத்த செய்தித்துறை நிறுவனமான மலையாள மனோரமா நடத்திய இலக்கிய கலாச்சார நிகழ்ச்சி யில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டின் திராவிட அரசியல் முன்னெடுப்புகள் என்பது மொழி உணர்வையும், பண்பாட்டு உணர்வையும் மையப்படுத்தியது. தமிழ்நாட்டின் ஆழமிக்க மொழி மற்றும் பண்பாடு அடிப்படையிலான வரலாறு, அதன் சமூக அரசியலுக்கு அடித்தளமாகவும் விளங்கி வருகிறது.

மொழி, இலக்கியம் மற்றும் அரசியலின் அடிப்படையில், தமிழ்நாட்டிற்கும் கேரளத்திற்கும் இணக்கமான வரலாறு உண்டு. 1924-ஆம் ஆண்டு கேரளத்தில் நடந்த வைக்கம் போராட்டத்தை முன்நின்று நடத்தி தந்தை பெரியார் வெற்றி பெற்றார். அதே போல, கேரளாவில் பிறந்த டி.எம்.நாயர், தமிழ்நாட்டில் நீதிக்கட்சியின் தொடக்கப்புள்ளியாக இருந்த தென் இந்திய நல உரிமை சங்கத்தை தொடங்கினார். அது தமிழ்நாட்டில் புது அரசியல் எழுச்சியை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாகவே, தற்போது இந்தியாவின் வளர்ச்சி பெறும் மாநிலங்களில் முன்னணி இடத்தை தமிழ்நாடும், கேரளமும் பெற்று வருகிறது. இரு மாநிலங்களிலும் வெற்றிகரமான முறையில், பாசிச – வகுப்புவாத நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையிடப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முன்பு, தமிழ் இலக்கிய பெருமை என்பது பக்தி, புராணம் சார்ந்ததாக தான் இருந்தது. ஆனால், எங்கள் தலைவர்களான அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்டோரின் முன்னெடுப்புகளால், பகுத்தறிவு மற்றும் அறிவியல் சிந்தனை சார்ந்த தமிழ் இலக்கியங்களின் புகழ் மேலோங்க தொடங்கின.

தமிழ்நாட்டின் திராவிட இயக்கங்கள், தமிழ் மொழியை அடிப்படை அடையாளமாக வைத்து செயல்படத் தொடங்கியதற்கு, தமிழ் மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்ற கருவியாக மட்டுமல்லாமல், பெருமை மிகுந்த தனித்துவத்தை நிலைநாட்டும் வகையிலும் அமைந்துள்ளதே காரணம். அதற்கான எடுத்துக்காட்டு தான் இந்தி திணிப்புக்கு எதிரான நடவடிக்கையாகவும் உள்ளது” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் இந்தி எனும் மொழியை எதிர்க்கவில்லை; இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். இந்தியாவில் மாநில மொழிகள் உயிரோடு இருக்கிறது என்றால் அதற்கு திராவிட இயக்கம்தான் காரணம்.

மாநில மொழிகளின் உரிமையை காப்பதில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் முக்கிய பங்கு வகித்தது. இந்தி திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கம் நடத்திய போராட்டம் மிக முக்கியமானது. முற்போக்கு மற்றும் அறிவியல் கருத்துகளை திராவிட இலக்கியம் வளர்த்தது. மூட நம்பிக்கைகளை களைவதற்கான பணிகளை திராவிட இயக்கம் வளர்த்தெடுத்தது. சமத்துவத்துக்கு எதிராகவும் ஏழை, எளிய மக்களின் நலனுக்கு எதிராகவும் சமஸ்கிருதம் இருந்தது. சமஸ்கிருதம் தெரிந்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை மாற்றியது நீதிக்கட்சிதான்.

சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். இந்தி திணிப்புக்கு எதிராக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தின. தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிரானதாக சமஸ்கிருதம் இருந்தது; சம உரிமையை மறுத்தது. முற்போக்கு கருத்துகளை வளர்த்தெடுப்பதில் தமிழ்த் திரைப்படங்கள் முக்கிய பங்காற்றின. திரைப்படங்கள் மூலமாகவும் சமூக சீர்த்திருத்தங்களை திமுக மேற்கொண்டது. பேரறிஞர் அண்ணா, கலைஞரின் திரை வசனங்கள் சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின.

நீட் நுழைவுத் தேர்வு என்பது மாநில சுயாட்சிக்கு எதிராக உள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பாஜக அரசின் திட்டத்தை தமிழ்நாடும், கேரளாவும் இணைந்து முறியடிக்க வேண்டும். தமிழ்நாடு மற்றும் கேரளாவும்தான் மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் இடம் அளித்தது இல்லை. பாஜகவின் பாசிசத்துக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

கேரள உயர் நீதிமன்றம்: இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதால் இத்தகைய பேரிடர்கள்..!

கேரளாவில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதால் இத்தகைய பேரிடர்கள் ஏற்படுகின்றன என்றும் பேரிடர்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் கேரள அரசு கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்றும் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அம்மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே. ஜெயசங்கரன் நம்பியார், வி.எம். சியாம்குமார் அடங்கிய அமர்வு கூறுகையில், “மனிதனின் அக்கறையின்மை மற்றும் பேராசைக்கு இயற்கையின் எதிர்வினைதான் வயநாடு நிலச்சரிவு. இயற்கை நீண்டகாலத்துக்கு முன்பே நமக்கு எச்சரிக்கை விடுத்தது. கேரள அரசு அதன் வளர்ச்சிக் கொள்கையை மறுபார்வை செய்ய வேண்டும்.

இயற்கை வளங்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், காடுகள், கானுயிர் பாதுகாப்பு, இயற்கை பேரிடர் தடுப்பு, நிலையான வளர்ச்சி இலக்குகள் சார்ந்து மாநில அரசு கொண்டுள்ள கொள்கைகளில் புதிய அணுகுமுறை தேவை. இதுபோன்ற இயற்கைப் பேரிடர் ஏற்படுவதைத் தடுக்க விரிவான கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

கல்விக்கு ஜாதி ஒரு தடையா…? 10 ஆண்டுகளாக போராடும் மாணவி

நமக்கு சுதந்திரம் இருட்டில் கிடைத்ததால் எண்ணமோ.. நாட்டில் வாழும் பல தரப்பட்ட மக்கள் இன்னமும் சுதந்நிரத்தை தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். அவரவருக்கு அகப்பட்டதை அள்ளி சுருட்டி கொள்ள வாழ்வை தேடி அலையும் மக்கள் உணவு, உடை இருப்பிடம் என அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவே பல போராட்டங்களை சந்திக்கின்றனர்.

இதில் கல்வி, மருத்துவம் முதலியன கேள்வி குறியாகவே அமைத்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள எம். நஞ்சப்பனூர் என்ற மலைக்கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன் மகள் சங்கவி என்ற மாணவி ஜாதி சான்றிதழ் பெறவே 2 ஆண்டுகளுக்கு மேலாக போராடி பெற்று இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் வசித்து வரும் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த தீபா மோகன் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் நேனோ அறிவியல் துறையில் மேற்படிப்பை முடித்துள்ளார். மேலும் தீபா மோகன் கடந்த 2011ஆம் ஆண்டு அதே துறையில் முனைவர் படிப்பில் சேர்ந்துள்ளார் (பல்கலைக்கழகத்தில் 2011-இல் எம்.பில் படிப்பில் சேர்ந்துள்ள தீபா மோகன் 2015-ஆம் ஆண்டில் முனைவர் பட்டதிற்கான ஆராய்ச்சியை நிறைவு செய்து பட்டம் பெற்றிருக்க வேண்டிய நிலையில்).

ஆனால் சிறிது நாட்களில் பேராசிரியர் நந்தகுமார் தன்னை ஜாதி பெயரை சொல்லி இழிவாக பேசுவதாகவும் முனைவர் படிப்பை முடிக்க விடாமல் தடுத்து வருவதாகவும் தீபா மோகன் குற்றம் சாட்டினார். அவரது ஆராய்ச்சி பணியை வெற்றிகரமாக நிறைவு செய்து முனைவர் பட்டம் பெறுவதற்கு பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகள் சிலர் தடங்கல்களை ஏற்படுத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டினார். அதோடு அவரை தடுக்கும் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை வேண்டும் என பல்கலைக்கழகத்தின் வாசலில் கடந்த அக்டோபர் 29 அன்று உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினார்.

இதனைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மகாத்மா காந்தி பல்கலைக்கழக துணைவேந்தர் தாமஸ் தெரிவித்தார். ஆனாலும் மாணவி தீபா மோகனால் மேற்படிப்பை தொடங்க முடியவில்லை. இதுகுறித்து மாணவி தீபா மோகன் பேசுகையில் ‘’தனது நீதி கோரி 11 நாள், மழையில் உண்ணாவிதரம் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தேன். போராட்டத்தில் காவல்துறையினர் என்னை தாக்கினார்கள்.

அதுமட்டுமல்லாமல், நான் ஒரு இதய நோயாளி. போராட்டதிற்கு பிறகு, கட்டாயமாக முழு நேர ஓய்வில் இருக்க வேண்டும். அதனால் எனது உடல் நிலை சற்று மோசமான நிலையில் உள்ளது. என்னுடைய மேற்படிப்பை தொடர கல்லூரி நிர்வாகம் என்னை அனுமதிக்க வேண்டும். இதற்காக, எதுவரை வேண்டுமாலும் நான் போராட தயாராக இருக்கிறேன் என தெரிவித்தார்.

கல்லூரி வளாகத்தில் மாணவி கழுத்து அறுத்து கொலை செய்த கொடூர மாணவன்

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கோம் தலயோழபரம்பை சேர்ந்த நிதினா மோல் எனற மாணவன் பால நகரில் அமைந்துள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியில் படித்து வருகிறார். இன்று தேர்வு எழுதுவதற்காக நிதினா மோல் கல்லூரி சென்றுள்ளார்.

அப்போது நிதினா மோலுடன் படித்து வரும் வள்ளிச்சீராவைச் சேர்ந்த அபிஷேக் என்பவரும் தேர்வு எழுத வந்து உள்ளார். இருவரும் கல்லூரி மண்டபத்தில் பேசிக்கொண்டிருந்த போது அது சண்டையாக மாறியது. பின்னர் திடீரென அபிஷேக் பேப்பர்கட்டரை கொண்டு நிதினா மோல் கழுத்தை அறுத்து விட்டார்.

உடனடியாக மற்ற மாணவ மாணவிகள் நிதினாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.

ஜிகா வைரஸ் என்றால் என்ன? எப்படி பரவும்? அறிகுறிகள் என்னென்ன?

கொரோனா வைரஸின் 2ம் அலை பாதிப்பு தணிந்து வரும் நிலையில், கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. தமிழ் நாடு – கேரள எல்லையான செறுவாரக்கோணத்தை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த ஜூன் 7ம் தேதி குழந்தை பிறந்த நிலையில், ஜூன் 28ம் தேதி அவருக்கு ஜிகா வைரசுக்கான அறிகுறிகள் தென்பட்டன. மொத்தம் 1 9 பேருக்கு அறிகுறிகள் ஏற்பட்டதால், அவர்களது சளி, ரத்த மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில், அண்மையில் குழந்தை பெற்றெடுத்த பெண் உட்பட 15 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏ.டி.எஸ் வகை கொசுக்கள் மூலமாகவே ஜிகா வைரஸ் பரவுகிறது. அதிகாலை, பிற்பகல் மற்றும் மாலை வேளைகளில் இந்த கொசுக்கள் மனிதர்களை கடிக்கும் என்றும், இந்த கொசுக்கள் டெங்கு, சிக்குன்குனியா, மஞ்சள் காய்ச்சலை பரப்பும் தன்மை கொண்டவை எனவும், உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கர்ப்பிணிகள் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டால், கருவும் பாதிக்கப்படும் என்றும், இதனால் கருச்சிதைவு மற்றும் குறை பிரசவம் ஏற்படலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள் வரை உடலில் இருக்கும் என தெரிவிக்கும் மருத்துவர்கள், 2 முதல் 7வது நாளில் அறிகுறிகள் தென்படும் எனவும் கூறியுள்ளனர்.

ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், காய்ச்சல்,தலைவலி, தோலில் நமைச்சல், மூட்டுகளில் வலி போன்ற அறிகுறிகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நோய்க்கென பிரத்யேக சிகிச்சை, தடுப்பூசிகள் இல்லை என தெரிவிக்கின்றனர்.