பாஜகவின் கொள்கை சார்ந்த விவகாரங்களில் கருத்துக்களை வெளியிட கங்கனாவுக்கு அதிகாரம் இல்லை..!

கடந்த பாஜக ஆட்சியில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. இது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார் அந்த வகையில் அண்மையில் விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியதற்காக பெண் காவலரிடம் அறை வாங்கிய கங்கனா ரனாவத் அளித்த பேட்டியில், ‘விவசாயிகள் போராட்டத்தின் பொழுது பல்வேறு குற்றச் செயல்கள் அரங்கேறின. பாலியல் தொல்லைகளும் கொலைகளும் அரங்கேறின. மத்திய அரசு வேளாண் சட்டங்களை ஒருவேளை திரும்பப் பெறவில்லை என்றால் போராட்டக்காரர்கள் நாட்டில் எதையும் செய்திருக்கக்கூடும்.

தேசத்தின் தலைமை வலுவாக இல்லாமல் போயிருந்தால் பஞ்சாப் மாநிலத்தை வங்கதேசமாக மாற்றி இருப்பார்கள். விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்கள் குறித்து இந்த தேசம் அறியாது. அங்கு படுகொலை செய்யப்பட்டு பலர் தூக்கில் ஏற்றப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தது” என கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாஜகவின் கொள்கை சார்ந்த விவகாரங்களில் கருத்துக்களை வெளியிட கங்கனாவுக்கு அதிகாரம் தரப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கங்கனா ரனாவத் விமர்சனம்: “ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர்..விஷமி… !”

அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில் செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் பங்குகளை வைத்துள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியது. இந்நிலையில், ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், “இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடப்பதாக வைத்துக் கொள்வோம்.

போட்டியில் நடுவர் சமரசம் செய்கிறார் என்பது, போட்டியைப் பார்க்கும் ஒவ்வொரு நபருக்கும், போட்டியை விளையாடுபவர்களுக்கும் தெரிகிறது என்றால், அந்த போட்டி என்னவாகும்? போட்டியின் நேர்மை மற்றும் முடிவு என்னவாக இருக்கும்? போட்டியில் பங்கேற்கும் ஒருவராக நீங்கள் அதை எப்படி உணருவீர்கள்? இதுதான் இந்திய பங்குச்சந்தையில் நடக்கிறது.

செபி தலைவர் மாதாபி பூரி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால், அதற்கு யார் பொறுப்பு? பிரதமர் மோடியா? செபி தலைவரா அல்லது கவுதம் அதானியா? கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இதனை விசாரிக்குமா?

சில்லறை முதலீட்டாளர்களின் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள செபியின் நேர்மை, அதன் தலைவர் மீதான குற்றச்சாட்டுகளால் கடும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் இவ்வளவு பயப்படுகிறார் என்பதும், அந்த விசாரணையில் என்ன தெரியவரும் என்பதும் இப்போது தெளிவாகத் தெரிகிறது” என ராகுல் காந்தி விமர்சித்து இருந்தார்.

இந்த விமர்சனத்துக்கு பதிலடியாக கங்கனா ரனாவத் ராகுல் காந்தியை சாடியுள்ளார். இதுதொடர்பாக கங்கனா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர். விஷமி. அழிவுகரமானவர். அவரால் பிரதமராக முடியாவிட்டால் இந்த தேசத்தை அழித்துவிடலாம் என்பதே அவரது செயல்திட்டமாக உள்ளது.

நமது பங்குச் சந்தையை குறிவைத்து வெளியிடப்பட்ட ஹிண்டன்பெர்க் அறிக்கை, ராகுல் காந்தி ஆதரவுடன் வெளியானது என்பது நேற்றிரவு உறுதியானது. இந்த தேசத்தின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க ராகுல் காந்தி எல்லா முயற்சிகளையும் செய்கிறார். ராகுல் காந்தி அவர்களே, உங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்க்கட்சியில் அமர தயாராகுங்கள். நாட்டு மக்கள் உங்களை ஒருபோதும் பிரதமராக்க மாட்டார்கள். நீங்கள் ஓர் அவமானம்.” என கடுமையாக சாடியுள்ளார்.

Kangana Ranaut “நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை..!”

இமாச்சல பிரதேசத்திலுள்ள மண்டி தொகுதியிலிருந்து பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் நடிகை கங்கனா போட்டியிடுகிறார். இதற்காக மண்டி தொகுதியில் அவர் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், மகாராஷ்டிரா காங்கிரஸ் பிரமுகர் விஜய் வடேட்டிவார் காட்சிரோலியில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், கங்கனா ரனாவத் ஒரு முறை எக்ஸ் தளத்தில் தனக்கு மாட்டிறைச்சி பிடிக்கும். அதைச் சாப்பிட்டுள்ளேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார் என பேசினார்.

இது தொடர்பாக கங்கனா ரனாவத் தனது எக்ஸ் தளத்தில் “நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த வகையான சிவப்பு இறைச்சியையும் சாப்பிடுவதில்லை, என்னைப் பற்றி முற்றிலும் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவது வெட்கக்கேடானது, நான் பல தசாப்தங்களாக யோக மற்றும் ஆயுர்வேத வாழ்க்கை முறையை ஆதரித்து, ஊக்குவித்து வருகிறேன். என் படம். என் மக்களுக்கு என்னைத் தெரியும், நான் ஒரு பெருமைமிக்க இந்து என்பது அவர்களுக்குத் தெரியும், அவர்களை எதுவும் தவறாக வழிநடத்த முடியாது, ஜெய் ஸ்ரீ ராம்.” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கங்கனா ரனாவத்: `சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..!’

இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் கங்கான ரனாவத் தேர்தலை போட்டியிடுகிறார். கங்கான ரனாவத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். வரவிருக்கும் தேர்தல் ஒரு தர்ம யுத்தம். மலையகப் பெண்கள் என்னைத் தேர்ந்தெடுத்து பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்துவதன் மூலம் தகுந்த பதிலைக் கொடுப்பார்கள். மக்களுக்குச் சேவை செய்யவே அரசியலுக்கு வந்தேன். நான் ஏற்கனவே சினிமா துறையில் வெற்றி பெற்றுள்ளேன், அரசியலிலும் வெற்றி பெறுவேன்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு டைம்ஸ் நவ் பேட்டியளித்த அப்போது,`சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்….?” எனக் கேள்வி எழுப்பினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

இழிவான கருத்துக்களை பதிவு செய்ததாக நடிகை கங்கனா ரனாத் மீது புகார்

நடிகை கங்கனா ரனாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவசாயிகளின் போராட்டம் குறித்து ‘விவசாயிகளின் போராட்டம் காலிஸ்தான் நடவடிக்கை போன்றது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டதற்காக டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை குழு, நடிகை கங்கனா ரனாத் மீது காவல்துறையில் மும்பை நகர கூடுதல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளது. அந்த புகாரில் சமூக ஊடகங்களில் தேசத்துரோக மற்றும் இழிவான கருத்துக்களை நடிகை கங்கனா ரனாத் பதிவு செய்ததாக குறிப்பிட்டுள்ளனர்.