கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை மருத்துவருக்கு கத்திக்குத்து..!

“சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு நான்கு பேர் சிகிச்சைக்காக இன்று வந்துள்ளனர். அங்கு புற்றுநோய் பிரிவில் சிகிச்சையளித்து வந்த மருத்துவர் பாலாஜி என்பவரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நான்கு பேர் சிகிச்சைக்காக வந்துள்ளனர். அங்கு புற்றுநோய் பிரிவில் சிகிச்சையளித்து வந்த மருத்துவர் பாலாஜி என்பவரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்பார்கள் என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு இன்று வழக்கம்போல் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்தனர். இம்மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவின் சிறப்பு மருத்துவர் பாலாஜி பணியில் இருந்தார்.

இந்நிலையில், மருத்துவமனைக்கு வந்த சிலர் மருத்துவர் பாலாஜியிடம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக, அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவர் பாலாஜியை குத்தி தாக்குதல் நடத்தியதில் ரத்தவெள்ளத்தில் மருத்துவர் பாலாஜி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகம் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து கிண்டி காவல்துறைக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மருத்துவர் பாலாஜியை தாக்கிய நபர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் சீனிவாசன்: உதயநிதியின் தாத்தாவே எம்ஜிஆர் தயவில்தான் முதல்வரானார்..!

அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜசேகர் தலைமை வகிக்க, முன்னாள் மேயர் மருதராஜ் முன்னிலை வகிக்க திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்து விடமுடியாது. திமுகவில் மூத்த தலைவர்கள் பலர் இருக்கும்போது, உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி தந்தது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதற்கு, `யார் காலில் விழுந்து முதலமைச்சர் ஆனீர்கள்? என்று உதயநிதி கேட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்தபிறகு தற்காலிகமாக ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் பதவியேற்க வைத்தனர். அதன்பிறகு, நானே முதல்வராகப் பதவி ஏற்கிறேன் என வி.கே. சசிகலா தெரிவித்தார். அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், தெய்வம் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், நீதிமன்றத்தில் வி.கே. சசிகலாவுக்கு சிறை தண்டனை விதித்துவிட்டனர். அதன்பிறகு யார் முதலமைச்சர் என்ற கேள்வி எழுந்தது.

உண்மையில் முதலமைச்சர் பதவிக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டவர் வி.கே. சசிகலாதான். நீதிமன்றம் தண்டனை விதித்ததால்தான், அவரால் முதலமைச்சராக முடியவில்லை. அவருக்கு கடவுள் அருள் இல்லை. அதன்பிறகு, கடவுள் அருளால் அதிமுகவில் அனைத்து எம்எல்ஏக்களும் ஒரு மனதாக பழனிசாமியை முதலமைச்சர் பதவிக்கு தேர்வு செய்தோம். அவர் காலில் விழுந்து முதலமைச்சர் பதவிக்கு வரவில்லை.

ஒரு பதவிக்கு வரும்போது, மூத்தவர் காலில் விழுவது தவறில்லை. ஆனால், இதை தவறு என்கிறார் உதயநிதி. வயதுக்கு தகுந்தாற்போல அவர் பேச வேண்டும். அவரது தாத்தாவே எம்ஜிஆர் தயவில்தான் முதல்வரானார் என திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

தி.மு.க முப்பெரும் விழாவை முன்னிட்டு மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, நல உதவிகள் வழங்கல்

திராவிட கழகத்தை நிறுவிய பெரியாருடன் தொடக்கக் காலத்தில் பெரியாருடன் இணைந்து அண்ணாவும் திராவிடர் கழகத்திலேயே பயணித்து வந்தார். 1940-களின் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அண்ணா 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினர்.

அண்ணா தனிக்கட்சி தொடங்கினாலும் கூட பெரியார் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். இதனால் திமுகவில் தலைவர் பதவி பெரியாருக்காக காலியாக விடப்படும் என்று அறிவித்துவிட்டு, கடைசி வரை பொதுச் செயலாளராகவே அண்ணா இருந்தார்.

இந்நிலையில் தி.மு.க.வின் தாய் கழகமான திராவிட இயக்கங்களின் தந்தையாகக் கருதப்படும் பெரியாரின் பிறந்த நாள் செப்டம்பர் 17 கொண்டாடப்படுகிறது.  அதேபோல அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே, திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாட்களை முன்னிட்டு முப்பெரும் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

தி.மு.க முப்பெரும் விழாவை முன்னிட்டு இன்று கொளத்தூர் – ஜி.கே.எம் காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழக மூத்த முன்னோடிகளான 260 கழக உடன் பிறப்புகளின் உழைப்பை பாராட்டி பொற்கிழி, நல உதவிகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  சிறப்பித்தார்.

திமுகவிற்கு சவால் விடும் அண்ணாமலை — தங்கமகன் நீரஜ் சோப்ரா — கலைஞரின் கொங்கு மண்டல கனவை நனவாக்கிய ஸ்டாலின்

திமுகவிற்கு சவால் விடும் அண்ணாமலை — தங்கமகன் நீரஜ் சோப்ரா — கலைஞரின் கொங்கு மண்டல கனவை நனவாக்கிய ஸ்டாலின்

கலைஞரின் 3-ம் ஆண்டு நினைவஞ்சலி தனபால் திருப்பூர் தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் உடுமலைப்பேட்டை


கலைஞரின் 3-ம் ஆண்டு நினைவஞ்சலி தனபால் திருப்பூர் தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் உடுமலைப்பேட்டை

கலைஞரின் 3-ம் ஆண்டு நினைவஞ்சலி கிருஷ்ணவேணி சரவணா பெருமாள் உடுமலைப்பேட்டை திருப்பூர்

கலைஞரின் 3-ம் ஆண்டு நினைவஞ்சலி கிருஷ்ணவேணி சரவணா பெருமாள் உடுமலைப்பேட்டை திருப்பூர்

கலைஞரின் 3-ம் ஆண்டு நினைவஞ்சலி கிருஷ்ணவேணி செல்வராஜ் பலபாளையம் குருக்கபுரம் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம்

கலைஞரின் 3-ம் ஆண்டு நினைவஞ்சலி கிருஷ்ணவேணி செல்வராஜ் பலபாளையம் குருக்கபுரம் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம்

கலைஞரின்: கொங்கு மண்டல கனவை நனவாக்கிய ஸ்டாலின்

அறம் பிறழ்கிந்தபோது நான் இவ்வுலகில் அவதரிப்பேன் என்று உரைத்த பகவான் கிருஷ்ணர்

ரிஷப ராசிக்கு உரித்தான தனி தன்மைகளை எடுத்து காட்டுகிறது
1967 ல் பொதுப் பணித்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் பேருந்துகளை தேசியமயமாகி மூலைமுடுக்கெல்லாம் பேருந்து வசதி

1989 ல் கலைஞர் தேசிய அரசியலில் கணக்கை துவக்கிய மத்தியில் திமுக தயவு இல்லாமை ஆட்சி பிடிக்க முடியாது


கலைஞர் என்ற ஒற்றை சொல்லில் தமிழகத்தையே கட்டு போட்டுருக்கிறார் கலைஞர் இல்லாத இடத்தை காற்றாய் புயலாய் மக்கள் பணியாற்ற

1989 ல் கலைஞர் தேசிய அரசியலில் கணக்கை துவக்கிய மத்தியில் திமுக தயவு இல்லாமை ஆட்சி பிடிக்க முடியாது