நாடாளுமன்ற உறுப்பினர் K. ஈஸ்வரசாமி அவர்கள் சமுதாய நலக்கூடம் கட்டும் பணி பூமி பூஜை செய்து வைத்தார். கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு சிஞ்சுவாடி பஞ்சாயத்து.M.G.R. நகரில் 77. லட்சத்து 89 ஆயிரம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணி பூமி பூஜை இன்று நடைபெற்றது.
இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் இல. பத்மநாபன் அவர்கள் தலைமையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் K. ஈஸ்வரசாமி அவர்கள் மற்றும் பொள்ளாச்சி தெற்கு, மத்திய ஒன்றில் கழக செயலாளர் கமலக்கண்ணன் அவர்கள் ஆகியோர் பூமி பூஜை செய்து வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர்கள், பொள்ளாச்சி வட்டாட்சியர், சிஞ்சிவாடி செயலாளர் ராமகிருஷ்ணன், கூளநாயக்கன்பட்டி ராமராஜ், பனமரத்துப்பாளையம் சந்திரசேகர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.