ஜாமின் மனு விசாரணையின்போது நீதிபதி, வழக்கறிஞர்கள் இடையே மோதல்..!

நீதிமன்றத்தில் ஜாமின் மனு விசாரணையின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் நீதிபதி, வழக்கறிஞர்கள் இடையே மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம், ராஜ் நகர் பகுதியில் உள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் நஹர் சிங் யாதவ் நீதிபதியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது.

நஹர் சிங் யாதவ் என்ற வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஜாமீன் வழங்குவதற்கான விசாரணையின் போது நீதிபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வழக்கறிஞருக்கும் நீதிபதிக்கும் இடையே வாக்குவாதம் தீவிரமாகி, இறுதியில் வன்முறையாக மாறியது.

இந்நிலையில், நீதிபதி இருந்த அறையை காலி செய்து காவல்துறை அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இத்தகைய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

‘கூல் லிப்’-யை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என நாடு முழுவதும் தடை செய்யக் கூடாது..!?

நாடு முழுவதும் கூல் லிப் என்பபடும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,  தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நாளுக்கு நாள் போதை பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காவல்துறை அதிரடி சோதனையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் அருகே கூல் லிப் என்பபடும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவது தொடர்பாக பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் கைதானார் ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி பாரத சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் ‘கூல் லிப்’ எனும் போதைப் பொருளுக்கு அதிகம் அடிமையாகியுள்ளனர் என கருத்து தெரிவித்த நீதிபதி, தமிழகத்தில் கூல் லிப் போதைப்பொருளுக்கு தடை விதித்திருந்தாலும் பிற மாநிலங்களில் கூல் லிப் விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய போதைப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது என்று வேதனை தெரிவித்தார்.

மேலும் நீதிபதி பேசுகையில், தற்போது பள்ளி மாணவர்களிடையே பெருகி வரும் வன்முறைக்கு இத்தகைய போதைப்பொருட்கள் பயன்பாடு முக்கிய காரணம். ஆகவே இத்தகைய போதைப் பொருளை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து ஏன் நாடு முழுவதும் தடை செய்யக் கூடாது? என மத்திய , மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 20 -ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

பள்ளி மாணவர்களுக்கு போக்சோ சட்டத்தை விலக்கிய நீதிபதி

ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது .ஆத்தூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பாக இந்த முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமை பொறுப்பை ஏற்று நடத்தியவர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் ராமலிங்கம் நடத்தினார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஆத்தூர் விரைவு நீதிமன்ற நீதிபதி தனலட்சுமி BA,B.L அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு பற்றி எடுத்துரைத்தார். அப்போது அவர் பேசியது மாணவர்கள் எந்த ஒரு தவறு செய்யாமல் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றும் இப்பொழுது அதிகமாக பள்ளி மாணவர்கள் போக்சோ சட்டத்தில் அதிகமாக கைது செய்யப்படுகிறார்கள் பள்ளி மாணவர்கள் உஷாராக இருந்து பள்ளி படிப்பை முடிக்க வேண்டும் என்று கூறினார்.

பெண்களுக்கு 18 வயது முடிந்த பின்பும் ஆண்களுக்கு 21 வயது முடிந்த பின்பு மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வயது வரம்பு மீறி திருமணம் செய்தால் அதிகமாக மாணவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள் அதனால் மாணவர்கள் முக்கியமாக கல்லூரிப் படிப்பு முடிந்த பின்பு நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் தேவையில்லாமல் சட்டத்தை மீறி கொண்டு வாழ்க்கையை வீண்யடிக்க வேண்டாம் என்றும் கூறினார்

அதுமட்டுமில்லாமல் உங்களுக்காக நான் மாதம் மாதம் கூட உங்கள் பள்ளிக்கு வந்து சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்துகிறேன் என்று நீங்கள் நன்றாக படித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்று எடுத்துக் கூறினார் இந்த விழாவில் மூத்த வழக்கறிஞர் ராமதாஸ் வழக்கறிஞர் சங்கத்தின் துணைத் தலைவர் பெரியசாமி சங்கத்தின் செயலாளர் வாசு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் உதயகுமார் அரசு அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரசேகர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ஜவ்வரிசி பளபளப்பாக இருப்பதற்கு வேதிப்பொருட்கள் கலப்படம் குறித்து ஆய்வு

சென்னை உச்ச மன்றத்தில் நடராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஜவ்வரிசி உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருளாக மரவள்ளிக்கிழங்கு நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. ஆனால் ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் பல சேகோ பேக்டரிகள், ஜவ்வரிசி பளபளப்பாக இருப்பதற்கு வேதிப்பொருட்கள் பலவற்றைக் கலந்து தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.

இதை தடுக்க கோரி உணவு பாதுகாப்பு துறைக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்று கடந்த 2015-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. கடைகளில் விற்பனை செய்யப்படும் 3 வகையான ஜவ்வரிசியை நீதிபதி வாங்கி வந்திருந்தார்.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ஜவ்வரிசி மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி 9 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன’ என்று கூறினார். அதையடுத்து, தான் வாங்கி வந்த ஜவ்வரிசி பாக்கெட்டுகளை அரசு வக்கீல் மூலம், மன்றத்தில் ஆஜராகியிருந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் நீதிபதி வழங்கினார்.