ஜெய்ராம் ரமேஷ் கேள்வி: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு என்ன..?

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் அமெரிக்காவின் பங்கு என்ன என ஜெய்ராம் ரமேஷ் எழுப்பியுள்ளார். தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சி எம்.பி.யான ஜெய்ராம் ரமேஷ் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏன் அறிவித்தார் என கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சி கேட்டு வருகிறது. இது முதல் முறையாக நடக்கிறது. பிரதமர் மோடி இது குறித்து எதுவும் கூறவில்லை.

அமெரிக்காவின் பங்கு மிகவும் முக்கியமானது, அவர்களால்தான் இந்தப் போர் நின்றது என அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ கூறுகிறார். வெளியுறவு மந்திரி டாக்டர் ஜெய்சங்கர் இதற்குப் பதிலளிக்கவில்லை. அமெரிக்காவின் பங்கு என்ன என்பது குறித்து பிரதமர் மோடியும், வெளியுறவு மந்திரியும் இதுவரை ஏன் இதுவரை ஏன் பதிலளிக்கவில்லை என நாங்கள் தொடர்ந்து கேட்டு வருகிறோம் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

இந்தியாவில் பிறந்து பாகிஸ்தான் குடியுரிமை பெற்ற.முதியவருக்கு வந்த சோதனை …!

இந்தியாவில் பிறந்த ஹம்சா, கடந்த 1965-ஆம் ஆண்டு வேலை தேடி பாகிஸ்தானுக்கு சென்ற பாகிஸ்தான் குடியுரிமை பெற்ற.முதியவர் ஹம்சா இங்கேயே இறக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ஆம் பிற்பகல் 3 மணி அளவில் சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சவூதியில் இருந்து நாடு திரும்பிய பிரதமர் மோடி உடனடியாக டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சிந்து நதி இனி பாகிஸ்தானிற்குள் பாயாது… இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும்,  வாகா-அட்டாரி எல்லைகளை மூடல் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள்,  இந்தியாவை விட்டு ஒரு வாரத்தில் வெளியேற வேண்டும். – பாகிஸ்தானியர்களுக்கு இனி சார்க் விசா வழங்கப்படமாட்டாது. – இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்தில் வெளியேற கெடு பாகிஸ்தானின் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை 55-ல் இருந்து 30 ஆக குறைப்பு போன்ற அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. கேரள மாநிலத்தில் 104 பாகிஸ்தானியர்கள் உள்ளனர். இவர்களை வெளியேற்ற நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதில் கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டியை சேர்ந்த 79 வயதான ஹம்சா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கோழிக்கோடு காவல்துறை தெரிவித்தனர்.

ஆனால் இதனை ஏற்க மறுத்த ஹம்சா, நான் பிறந்த இடம் இது தான். இங்கேயே என் இறுதி மூச்சை விட விரும்புகிறேன் என தெரிவித்தார். கேரளாவில் பிறந்த ஹம்சா, கடந்த 1965-ஆம் ஆண்டு வேலை தேடி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். கராச்சியில் தனது சகோதரருடன் கடை நடத்திய அவர், 1972-ஆம் ஆண்டு வங்கதேச விடுதலை போருக்கு பிறகு இந்தியா திரும்ப, பாகிஸ்தான் குடியுரிமையை பெற்றாராம். 2007-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து கேரளா திரும்பிய அவர், அதன்பிறகு இங்கேயே வசித்து வந்துள்ளார். இவர் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்த போதும் அது வழங்கப்படவில்லை. அவரது நீண்ட கால விசா காலாவதியான நிலையில், கேரள ஐகோர்ட்டு உத்தரவின் படி ஹம்சா கேரளாவில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டாரி வாகா எல்லை மூடல் எதிரொலி- இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா அறிவுறுத்தல்

அட்டாரி வாகா எல்லை மூடல் எதிரொலி- இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமான ஜம்மு – காஷ்மீர் பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டுள்ளனர்.

இதில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர். இதனிடையே பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி உடனடியாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும், மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு தான் பஹல்காம் தாக்குதலுக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதலை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அட்டாரி வாகா எல்லை மூடப்பட்டதை சுட்டிக்காட்டி இந்தியாவிற்கான பயண ஆலோசனையை கனடா புதுப்பித்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதி கொந்தளிப்புடன் உள்ளதால் பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது.

மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு இந்தியா காரணமா..!?

இந்தியாவின் யுரேசிய பிளேட்டும் மியான்மரின் டெக்டானிக் பிளேட்டும் ஒன்றுக்கொன்று பக்கவாட்டில் உரசிக்கொண்டதே மியான்மரில் அதிபயங்கர நிநடுக்கத்திற்கு காரணம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது. மியான்மர், தாய்லாந்தில் பூகம்பத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. 1600-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய அரசு ‘ஆபரேஷன் பர்மா’ என்ற பெயரில் உணவு, கூடாரங்கள், அத்தியாவசிய மருந்துகள் என 15 டன் அளவிலான பொருட்களை இந்திய விமானப் படையின் C130J விமானம் மூலம் மியான்மருக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்த்துள்ளது.

இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “மியான்மர் ராணுவத் தலைவர் சீனியர் ஜெனரல் மின் ஆங் ஹ்ளெய்ங்குடன் பேசினேன். பூகம்பத்தால் ஏற்பட்ட உயிரிழிப்புகளுக்காக ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்து கொண்டேன். மியான்மரின் நட்பு தேசம், அண்டை நாடு என்ற வகையில் இந்தக் கடினமான நேரத்தில் இந்தியா மியான்மர் மக்களுடன் தோளோடு தோள் நிற்கும் என்று உறுதியளித்தேன்.” என நரேந்திர மோடி எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் மோனிவா நகருக்கு அருகே நேற்று காலை 11.50 மணி அளவில் 7.7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அந்த நாட்டின் பல்வேறு நகரங்களிலுள்ள கட்டிடங்கள் குலுங்கின. அடுத்த 10 நிமிடத்தில் அங்கு .8 ரிக்டர் அளவில் மீண்டும் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து அதிர்வுகள் ஏற்பட்டதால், மியான்மரின் மண்டலே நகரில் உள்ள மசூதிகள், வீடுகள் இடிந்து விழுந்தன. இங்குள்ள பழமையான அரண்மனையும் இடிந்து விழுந்தது. இந்நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. 1600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் தென்கிழக்கு ஆசிய பகுதியிலுள்ள தாய்லாந்து, மலேசியா, லாவோஸ், வங்கதேசம், சீனா மட்டுமின்றி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது. இதை அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் புவியியல் ஆய்வு அமைப்புகள் உறுதி செய்தன. தாய்லாந்தில் இதுவரை 10 பேரின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாங்காக் நகரின் அடுக்குமாடி கட்டிடம் கட்டுமானப் பணியிடத்தில் 100-க்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் அங்கு பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

மியான்மரில் ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கும் இந்தியாவுக்கும் புவி அமைப்பு அடிப்படையில் ஒரு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், மியான்மர் இரண்டு டெக்டானிக் பிளேட்டுகளுக்கு இடையே உள்ளது. அதாவது, இந்தியா மற்றும் யுரேசிய பிளேட்டுகளுக்கு இடையில் அமைந்து இருக்கிறது. இதனால், இந்த நாடு நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் அபாயம் மிக்க பகுதிகளில் இருக்கிறது.

இந்தியா மற்றும் யுரேசிய பிளேட்கள் ஒன்றுக்கொன்று பக்கவாட்டில் உரசிக்கொண்டதே மியான்மரில் நேற்றைய தினம் ஏற்பட்ட அதிபயங்கர நிநடுக்கத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது என அமெரிக்க புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் யுரேசிய பிளேட்டும் மியான்மரின் டெக்டானிக் பிளேட்டும் ஒன்றுக்கொன்று பக்கவாட்டில் உரசிக்கொண்டதே மியான்மரில் அதிபயங்கர நிநடுக்கத்திற்கு காரணம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

IND VS AUS: ICC 14 ஆண்டு சோகத்திற்கு முடிவுரை… ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா…! இறுதிக்கு முன்னேற்றம்!!

ICC தொடரின் நாக் அவுட் சுற்றில் 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியாத சோகத்துக்கு இந்திய கிரிக்கெட் முடிவுரை எழுதி உள்ளது. ICC சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. எதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் கூப்பர் கோனோலி களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் எடுத்த நிலையில் 2.6 ஓவரில் 7 பந்துகளை சந்தித்த கூப்பர் கோனோலி ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து, டிராவிஸ் ஹெட் 39, மார்னஸ் லபுஸ்சேஞ்ச் 29, ஜோஷ் இங்கிலிஸ் 11 ரன் எடுத்தது நடை கட்டினர்.

ஒருபுறம் சிறப்பாக விளையாடி கேப்டன் ஸ்மித் 73 ரன், அலெக்ஸ் கேரி 61 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் 264 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய பந்து வீச்சில் முகமது ஷமி 3, வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜடேஜா தலா 2, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 265 ரன் இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரராக இறங்கிய சும்பன் கில் 8 ரன்னிலும், கேப்டன் ரோகித் சர்மா 28 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 3 விக்கெட்டுக்கு விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர்.

விராட் கோலி 74 -வது அரை சதத்தை கடந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அக்சர் பட்டேலும் 27 ரன்னில் ஆட்டமிழக்க தொடர்ந்து சிறப்பாக விளையாடி விராட் கோலி 84 ரன்னில் வெளியேற, கடைசியில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியாவும் 28 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

இதையடுத்து, கே.எல்.ராகுல், ஜடேஜா ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. 48.1 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 267 ரன் எடுத்து இந்தியா அணி வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 42 ரன்னிலும், ஜடேஜா 2 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியா பந்துவீச்சில் ஆடம் ஜாம்பா, நாதன் எலீஸ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

IND VS AUS: ICC சாம்பியன்ஸ் கோப்பை முதல் அரையிறுதி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பைனலில் இந்தியா முன்னியது..!

ICC சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. எதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் கூப்பர் கோனோலி களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் எடுத்த நிலையில் 2.6 ஓவரில் 7 பந்துகளை சந்தித்த கூப்பர் கோனோலி ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து, டிராவிஸ் ஹெட் 39, மார்னஸ் லபுஸ்சேஞ்ச் 29, ஜோஷ் இங்கிலிஸ் 11 ரன் எடுத்தது நடை கட்டினர்.

ஒருபுறம் சிறப்பாக விளையாடி கேப்டன் ஸ்மித் 73 ரன், அலெக்ஸ் கேரி 61 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் 264 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய பந்து வீச்சில் முகமது ஷமி 3, வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜடேஜா தலா 2, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 265 ரன் இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.

தொடக்க வீரராக இறங்கிய சும்பன் கில் 8 ரன்னிலும், கேப்டன் ரோகித் சர்மா 28 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 3 விக்கெட்டுக்கு விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். விராட் கோலி 74 -வது அரை சதத்தை கடந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அக்சர் பட்டேலும் 27 ரன்னில் ஆட்டமிழக்க தொடர்ந்து சிறப்பாக விளையாடி விராட் கோலி 84 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

கடைசியில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியாவும் 28 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து, கே.எல்.ராகுல், ஜடேஜா ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. 48.1 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 267 ரன் எடுத்து இந்தியா அணி வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 42 ரன்னிலும், ஜடேஜா 2 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியா பந்துவீச்சில் ஆடம் ஜாம்பா, நாதன் எலீஸ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

மத்திய அரசு வேலை வாங்கித்தருவதாக பல லட்சம் மோசடி.. பாஜக பிரமுகர் மனைவியுடன் தலைமறைவு..!

விளையாட்டுத்துறை ஒதுக்கீட்டில் மத்திய அரசு வேலை வாங்கித்தருவதாக பல லட்சம் வசூல் செய்து மோசடி செய்த பாஜக பிரமுகர் ஜெயராம் என்பவர் மனைவியுடன் தலைமறைவான நிலையில், காவல்துறையினர் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 32 வயதான லோகேஷ்குமார் என்பவர் முதுகலை பட்டதாரி விளையாட்டில் ஆர்வம் கொண்ட லோகேஷ்குமார், மாநில, மத்திய அரசின் விளையாட்டு துறைக்கான ஒதுக்கீட்டில் அரசு வேலை பெற விரும்பியுள்ளார். அதற்காக கடந்த 2022-ஆம் ஆண்டு ஆன்லைன் மூலம் ‘யங் ஸ்போர்ட்ஸ் ஆப் இந்தியா’ என்ற நிறுவனத்தை தொடர்பு கொண்டார்.

அப்போது பேசிய யங் ஸ்போர்ட்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயராம் என்பவர், சென்னை பம்மலை அடுத்த பொழிச்சலூர் பாலாஜி நகரில் தனக்கு அலுவலகம் இருப்பதாகவும் அங்கு நேரில் வந்து விவரத்தை கேட்டு தெரிந்துக் கொள்ளுமாறு கூறினார். இதை உண்மை என்று நம்பிய லோகேஷ்குமார் அந்த அலுவலகத்திற்கு நேரில் சென்றபோது, அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர் விவரங்களை கூறியுள்ளார்.

பின்னர் லோகேஷ்குமார் அந்த நிறுவனத்தில் இணைந்து சிலம்பம் கற்று சான்றிதழும் பெற்றுள்ளார் அந்த சமயத்தில், தான் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட விளையாட்டு பிரிவு துணை தலைவர் பொறுப்பில் உள்ளதாக கூறிய ஜெயராம், தனக்கு தெரிந்த மத்திய அமைச்சர்கள் இருப்பதாகவும் லோகேஷ் குமாரிடம் கூறியுள்ளார். அவர்கள் மூலம் விளையாட்டு துறை ஒதுக்கீட்டில், மத்திய அரசு வேலை வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளதாக தெரிகிறது.

அவரது ஆசை வார்த்தைகளை உண்மை என நம்பிய லோகேஷ்குமார், தனக்கும் வேலை வாங்கி தருமாறு கேட்டதுடன், தன்னுடைய சான்றிதழ்களை, ஜெயராமனிடம் கொடுத்துள்ளார். அப்போது மத்திய அரசு வேலை வாங்கித்தர ரூ.17 லட்சம் ரூபாய் செலவாகும் என ஜெயராம் கூறியுள்ளார். இதை நம்பிய லோகேஷ்குமார், பல தவணைகளாக வங்கி கணக்கு மூலம், 16 லட்சம் ரூபாய், செல்போன் செயலி மூலம் 1 லட்சம் ரூபாய் என, 17 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சொன்னபடி ஜெயராம் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதையறிந்த பின்னர் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த லோகேஷ்குமார் கடந்த ஜனவரி மாதம், தாம்பரம் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அப்புகாரை சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தாம்பரம் மாநகரா காவல் துறை துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து சங்கர் நகர் காவல்துறை ஜெயராம், அவரது மனைவி அஸ்வினி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அவர்களை தேடி வருகிறார்கள்.

அரசு மருத்துவக் கல்லூரியில் தீ விபத்தில் 10 குழந்தைகள் பலி..! 16 பேருக்கு தீவிர சிகிச்சை..!

உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியிலுள்ள மகாராணி லட்சுமிபாய் கல்லூரியின் பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் 16 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மற்றவர்களின் நிலை குறித்து ஆராயப்பட்டு வருகிறது. NICU-வில் மீட்புப் பணிகள் நள்ளிரவு 1 மணியளவில் முடிந்துவிட்டன என தகவல்கள் வெளிவந்துள்ளன.

1968 -ல் தனது சேவைகளைத் தொடங்கி உத்தரபிரதேசத்தின் பண்டேல்கண்ட் பகுதியிலுள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றாக மகாராணி லட்சுமிபாய் கல்லூரியின் பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் 52 முதல் 54 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 10.45 மணி அளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பேசிய மாவட்ட ஆட்சியர் அவினாஷ் குமார், மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரியில் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று இரவு 10.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. Neonatal Intensive Care Unit (NICU)-ன் வெளிப் பகுதியில் இருந்த குழந்தைகளும், உள் பகுதியில் இருந்த சில குழந்தைகளும் மீட்கப்பட்டனர். 10 குழந்தைகள் இறந்ததாக முதல்கட்டத் தகவல் வெளியாகி உள்ளது.

NICU-ன் வெளிப்புறப் பிரிவில் குறைவான குழந்தைகளே அனுமதிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில் மிகவும் முக்கியமான நோயாளிகள் உள் பகுதியில் வைக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார். இருப்பினும், இந்த தீ விபத்திற்கு காரணம் என்ன, யாருடைய மெத்தனத்தால் இது நடந்தது என்பதை அறிய விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 10 குழந்தைகள் இறந்தபோதும், மற்றவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். NICU-ல் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

சீமான் வலியுறுத்தல்: இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும்..!

“இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும்” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் தூத்துக்குடிக்கு சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்தில் சீமான் செய்தியாளர்களுக்கு பதிலளித்தார்.

அப்போது, “இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன் பிடிக்கின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க கூறியுள்ளார். இலங்கையில் தமிழர்களை சுட்டு கொன்றார்கள், வலைகளை கிழித்து எறிந்தார்கள், இதற்கு மேல் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள். இதற்கு மேல் என்ன நடவடிக்கை உள்ளது.

இந்திய பெருங்கடல் என்றால் போதுமா? மீன் பிடிப்பதற்கு உரிமை இல்லையா?. இலங்கையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும். கட்சத்தீவை மீட்க வேண்டும். அதிமுக ஆட்சியில், அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் திமுக ஆட்சியில் முடிக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையத்தில் உதயசூரியன் சின்னம் தான் உள்ளது. அதிகாரம் நிலையானது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரம் தமிழன் கைக்கு வரும் போது அனைத்தும் மாறும். வசதியாக பதுங்க பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது தான் திராவிடம்.

தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்றல்ல. வேளாண் கல்லூரி மாணவர்களை நில அளவைக்கு பயன்படுத்துவது தவறு. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான கட்டமைப்பு நடைபெறுகிறது. அனைத்து கட்சியும் என் பின்னால் தான் ஓடி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். என் பயணம் என் கால்களை நம்பிதான் உள்ளது. அடுத்தவர் கால்களை நம்பி பயணத்தை தொடங்காதீர்கள். என் கொள்கை யாரோடும் ஒத்து போகவில்லை. வியாபாரத்துக்காக கல்வி, மருத்துவத்தை தரம் குறைக்கிறார்கள். அவர்களுடன் எப்படி நாங்கள் சேர முடியும்.

அரசியல் அதிகாரம் இல்லாத, எளிய மக்கள் உள்ள இடங்களில் தான் நச்சு ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஊழல் செய்யும் அமைச்சர்கள் பட்டியலை வெளியிடுவோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் கூறியுள்ளார். திமுகவும் இதையே கூறியது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த அதிமுக, திமுக. இரண்டு கட்சிகளுக்கும் இடையே தெருச்சண்டை தான் நடக்கிறது. இதை ஒழிக்க வேண்டும்” என சீமான் தெரிவித்தார்.

India vs New Zealand: 1955 – 2024 வரை 12 முறை படையெடுத்து 13 -வது முறை இந்தியாயை வீழ்த்திய நியூசிலாந்து..!

1955 – ஆண்டு முதல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. அப்போது இருந்து இதுவரை இந்திய மண்ணில் 12 டெஸ்ட் தொடர்களில் நியூசிலாந்து விளையாடி உள்ளது. தற்போது இந்திய மண்ணில் தனது 13 வது டெஸ்ட் தொடரில் பங்கேற்று இந்திய அணியை வீழ்த்தி உள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் வென்று 2 – 0 என தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றி இருக்கிறது.

இந்தத் தொடரின் பெங்களூருவில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அடுத்து புனேவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 133 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது. இந்த தொடரை கைப்பற்றியதன் மூலம் பல வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளது நியூசிலாந்து அணி. சுமார் 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் 18 டெஸ்ட் தொடர்களில் தோல்வியை சந்திக்காமல் இந்தியா இருந்தது. ஆனால், அந்த சாதனையை முறியடித்ததோடு முதன்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் வெற்றியை நியூசிலாந்து பதிவு செய்தது