மோகன் பகவத்: இந்து மக்கள் ஒரே கோவில், ஒரே கிணறு, ஒரே சுடுகாடு என இருக்க வேண்டும்..!

இந்து சமூகத்தில் ஜாதிய மோதல்கள், பிளவுகளை முடிவுக்குக் கொண்டு வர இந்து சமூக மக்கள் சஒரே கோவில், ஒரே கிணறு, ஒரே சுடுகாடு என பிரிவினையற்ற நல்லிணக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். என RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்ததார். உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் மோகன் பகவத் பேசுகையில், இந்து சமூகத்தில் ஜாதிய மோதல்கள், பிளவுகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இந்து சமூக மக்கள் சமூக நல்லிணக்கத்தை கடைபிடிக்க வேண்டும். ஒரே கோவில், ஒரே கிணறு, ஒரே சுடுகாடு என பிரிவினையற்ற நல்லிணக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

நமது சமூக அமைப்பில் தலைகீழான மாற்றங்களை உருவாக்க நினைத்தால் அடிப்படையில் 5 மாற்றங்களை செய்தாக வேண்டும். குடும்ப மேலாண்மை, சமூக நல்லிணக்கம், சூழல் பாதுகாப்பு, சுய விழிப்புணர்வு, சமூக கடமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். ஆர்.எஸ்.எஸ். இயக்கமாது தமது 100-வது ஆண்டு விழாவில் இத்தகைய மாற்றங்களுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

RSS இயக்கத்தின் தொண்டர்கள் அனைத்து சமூகத்தினரின் வீடுகளுக்கு செல்ல வேண்டும்; அனைத்து மக்களுடனும் உரையாட வேண்டும். நாம் நமக்குள் இருக்கும் பிரிவினைகளை முடிவுக்கு கொண்டுவர உழைக்க வேண்டும் என மோகன் பகவத் தெரிவித்தார்.