அரபிக்கடல், வங்கக்கடல் என ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு..!

ஒரே நேரத்தில் வங்கக்கடல், அரபிக்கடல் என இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் கணித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், “அரபிக் கடலில் அடுத்த 12 மணி நேரத்திலும் வங்கக் கடலில் அதாவது வரும் அக்டோபர் 20 -ஆம் தேதி வடக்கு அந்தமான் கடற்பகுதியில் ஒரு புதிய மேல் அடுக்கு காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது.

அதன் தாக்கத்தால், மத்திய வங்கக்கடலில் அக்டோபர் 22-ம் தேதியன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளது. அதன்பின், அது வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது” என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.

வடக்கு அந்தமான் கடற்பகுதியில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வு..!

வடக்கு அந்தமான் கடற்பகுதியில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா மற்றும் மாஹே, லட்சத்தீவு, கர்நாடகாவில் ஓரளவுக்கு பரவலாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு; தமிழ்நாடு, புதுச்சேரி, கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெலங்கானாவில் லேசான மழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.