ராகுல் காந்தி: ஏழைகளின் பணம் பணக்காரர்கள் வசம் செல்ல ‘சக்கரவியூகம்’ அமைக்கப்படுள்ளது..!

ஹரியானா சட்டபேரவை தேர்தலையொட்டி, குருக்ஷேத்திரம் தானேசரில் நடந்த பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது,‘‘ ஏழைகளின் பணம் ஒரு சில பணக்காரர்கள் வசம் செல்ல வசதியாக மகாபாரதத்தில் உள்ள ‘சக்கரவியூகம்’ போன்றே தற்போது ‘சக்கரவியூகம்’ உருவாக்கப்பட்டு, அதற்குப் பின்னால் பிரதமர் மோடி, அமித்ஷா, அதானி, அம்பானி, தோவல், மோகன் பகவத் ஆகியோர் இருக்கிறார்கள்.

இந்த நாட்டின் ஏழை மக்களின் பணம் 20 முதல் 25 பில்லியனர்களின் கைகளுக்குச் செல்ல வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஒரு சில கோடீஸ்வரர்கள் மகிழ்ச்சியாக வாழவும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பசியுடன் இருக்கும் இந்தியா எங்களுக்கு வேண்டாம்.

இந்த நிலை தொடர விட மாட்டோம், இதை மாற்ற, இந்த அமித் ஷா-மோடியின் சக்கரவியூகத்தை உடைக்க வேண்டும். நான் மோடியிடம் இந்தியாவின் இளைஞர்கள் அபிமன்யு அல்ல, அவர்கள் அர்ஜுனன்கள். அவர்கள் உங்கள் சக்கரவியூகத்தை இரண்டே நிமிடங்களில் உடைத்துவிடுவார்கள் என்று சொன்னேன்’ என ராகுல் காந்தி பேசினார்.