சேலம் ஆத்தூரில் நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன் எதற்கு கருத்தரங்கம்

சேலம் மாவட்ட ஆத்தூர் A.T அங்கம்மாள் நினைவரங்கத்தில் மணிக்கூண்டு அருகில் நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன் எதற்கு கருத்தரங்கம் கற்போம் பெரியாரியம் ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை நூல் அறிமுகம் விழா நடைபெற்றது.

திராவிட தலைவர் வீரமணி புத்தகம் வெளியிட்டு விழா மற்றும் சிறப்புரை ஆற்றினார்.இந்த விழாவில் ஆத்தூர் திமுக நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், நரசிங்கபுரம் நகர செயலாளர் வேல்முருகன், ஆத்தூர் ஒன்றிய செயலாளர் செழியன், மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சிகள் கலந்து கொண்டனர்.

ஆத்தூர் நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் வார்டுகள் ஆய்வு

ஆத்தூர் நகராட்சி நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் இன்று 17 வது வார்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது அந்த பகுதியில் உள்ள பெண்களிடம் குறைகளை கேட்டறிந்து உடன்யடியாக  குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும் என்று கூறினார்.

அதேசமயம் அந்த பகுதியில் உள்ள சாக்கடைகள் கழிவறைகள் அனைத்தும் உடன்யடியாக சுத்தம் செய்ய வேண்டும் என்று துப்புரவு பணியாளருக்கு உத்தரவு அளித்தார். அருகில் 17வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஷேக் தாவுத் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பங்குனி உத்திர திருவிழா முன்னிட்டு நகரமன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் அன்னதானம் வழங்கல்

ஆத்தூர் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு உழவர் சந்தை முன்பு உள்ள கலைஞர் திடலில் அன்னதானம் மற்றும் நீர் மோர் பந்தல் வழங்கும் நிகழ்ச்சி நகரமன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் நகர கழக செயலாளர் பாலசுப்பிரமணியன் வார்டு செயலாளர் துரை, சில்லி முருகன் , அஸ்கர் அலி, பாஸ்கர், சம்பத்,பாபு, குமார்பிரபா ,மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஆத்தூரில் மினி கிளினிக் அமைக்க நகர் மன்ற தலைவர் இடத்தை தேர்வு..

ஆத்தூர் நகராட்சி 15-வது வார்டு பகுதியில் 25 லட்சம் செலவில் மினி கிளினிக் அமைக்க நகர்மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் இடத்தை தேர்வு செய்தார் அருகில் நகர கழக செயலாளர் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர்கள் பிரபா குமார், பாஸ்கர், நுத்தப்பூர் துரை ஆகியோர் உடன் இருந்தனர்.

நகர மன்ற தலைவர் தலைமையில் அதிகாரிகள் உடன் ஆய்வுக்கூட்டம்

ஆத்தூர் நகராட்சியின் நகரமன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் தலைமையில் நகராட்சி அண்ணா கலையரங்கத்தில் ஊழியர்கள் அதிகாரிகள் ஆய்வு கூட்டம்  நடைபெற்றது .இந்த கூட்டத்தில் நகரமன்ற தலைவர்  பேசியது.

அதிகாரிகளும் நகராட்சி ஊழியர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் பொதுமக்கள் எந்த ஒரு குறைகள் சொன்னாலும் உடன்யடியாக அவர்களுக்கு பணிவுடன் பேசி நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே ஆத்தூர் நகராட்சி நிர்வாகத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்றும் கூறினார்கள்.

இந்த ஆய்வு கூட்டத்தில்  நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ஆத்தூர் நகராட்சி மன்ற தலைவர் பொறுப்பு ஏற்பு

ஆத்தூர் நகர மன்ற தலைவராக நிர்மலா பபிதா மணிகண்டன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டு மூன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருசக்கர வாகனத்தில் தனது கணவருடன் வந்த நகரமன்ற தலைவர் ஆத்தூர் நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று காலை 10 மணி அளவில் நகராட்சி நிர்வாக பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
முதல் திர்மானமாக  வாக்களித்த பொது மக்களுக்கு நன்றி தீர்மானமும் இரண்டாவது தீர்மானமாக நகராட்சி அலுவலகத்தில் தமிழ் வாழ்க என்ற பலகை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மூன்றாவது தீர்மானமாக நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் ரூபாய் 18 லட்சம் செலவில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் எல்ஈடி விளக்கு வைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்த மூன்று தீர்மானமும் வருகிற நகரமன்ற கூட்டத்தில் வைக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.
மேலும் பொதுமக்களிடம் மற்றும் கவுன்சிலர்களிடம்  மனுவைப் பெற்று கொண்டு  மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் கூறினார் இந்த விழாவில் துணைத்தலைவர் கவிதா ஸ்ரீராம் மற்றும் ஆத்தூர் நகர கழக செயலாளர் பாலசுப்பிரமணியன் நூத்தப்பூர் துரை ,மாணிக்கம் ,அரிமா செல்வமணி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

வி. கே. சசிகலா: ‘‘எல்லாத்தையும் சரிபண்ணிடுறேன்’’

வி. கே. சசிகலா தினந்தோறும் தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். அந்த வகையி்ல் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சுந்தரத்திடம், ‘‘சேலத்தில் கட்சியினர் தன்னிச்சையான போக்கில் செயல்படுகிறார்கள். கட்சி தொண்டர்கள் கவலைப்படாம இருங்க. நான் வந்து எல்லாத்தையும் சரிபண்ணிடுறேன்’’, என்று வி. கே. சசிகலா தெரிவித்தார்.

காவல் துறையினர் தாக்கியபோது மது போதையில் இருந்த விவசாயி கீழே விழுந்து மரணம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள இடையப்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளையன் என்ற முருகேசன் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அன்னக்கிளி. இவர்களுக்கு ஜெயப்பிரியா, ஜெயப்பிரதா ஆகிய 2 மகள்களும், கவிப்பிரியன் என்ற மகனும் உள்ளனர்.

முருகேசன் இவர் நேற்று முன்தினம் காலை கருமந்துறை பகுதிக்கு நண்பர்கள் சிவன் பாபு, ஜெயசங்கர் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு உறவினர் ஒருவரை பார்த்து விட்டு மாலையில் அவர்கள் திரும்பி உள்ளனர்.

வழியில் பாப்பிநாயக்கன்பட்டி வனத்துறை சோதனைச்சாவடி அருகே காவல்துறை வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதில் போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் மீது காவல் துறையினர் லத்தியால் தாக்கியுள்ளனர்.

அப்போது இடையப்பட்டியை சேர்ந்த முருகேசன் என்ற விவசாயக் கூலியை காவல்துறையினர் தள்ளிவிட்டதில், அதில் கீழே விழுந்து பின்மண்டையில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து வாழைப்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவச் சிகிச்சைக்காக முருகேசன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக முருகேசன் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார்.