கல்லூரி மாணவன் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி ரூ 2.40 கோடி கடன்…! சொத்துக்கள் முழுவதும் விற்றும் கடனை அடைக்க முடியாததால் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை..!

இந்தியாவிலும் உலகெங்கிலும் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கேமிங்கின் வருவாயை உருவாக்குவதற்கும் வேலைகளை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும் அதே வேளையில், பணமோசடி, மேட்ச் பிக்ஸிங் போன்ற பல சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான வழிகளையும் செய்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல் நாடெங்கும் ஆன்லைன் சூதாட்டத்தால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது மிகுந்த வேதனை ஏற்படுகிறது. ஆனால் மகன் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி ரூ. 2.40 கோடி கடன் ஏற்பட்டு, அவற்றை சொத்துக்கள் விற்றும் அடைக்க முடியாததால் பெற்றோர் விஷம்குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் வேலுகோடு மண்டலம் அப்துல்லாபுரத்தைச் சேர்ந்த மகேஸ்வரரெட்டி. இவரது மனைவி பிரசாந்தி. இவர்களது ஒரே மகன் நிகில் ரெட்டி. பெங்களூருவில் உள்ள கல்லூரியில் படிக்க பெற்றோர்கள் சேர்த்தனர். ஒரே மகனை படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோர் கனவு கண்டனர். இதற்காக மகன் எப்போது பணம் கேட்டாலும் கொடுத்தனர். அந்த பணத்தை வைத்து நிகில் ரெட்டி ஆன்லைன் சூதாட்டத்துக்கு பழகிவிட்டார்.

ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமான பணத்தை இழந்த நிலையில் ரூ.2.40 கோடி வரை கடன் ஏற்பட்டது. இதை அறிந்ததும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சொத்து முழுவதையும் விற்றாவது கடனை அடைக்காவிட்டால் குடும்பத்தின் நற்பெயர் போய்விடும் என கடன்களை அடைக்க அப்துல்லாபுரத்தில் உள்ள பத்து ஏக்கர் நிலம், வீடு, விவசாய நிலம் ஆகியவற்றை மகேஸ்வர ரெட்டி தம்பதியினர் விற்றனர். ஆனாலும் கடன்கள் தீர்க்கப்படவில்லை.

மீதி கடனை அடைக்க கடன் கொடுத்தவர்கள் அழுத்தம் கொடுத்ததால் மாமியார் வீட்டில் கொடுத்த மூன்று ஏக்கர் நிலத்தையும் விற்க முடிவு செய்தனர். ஆனால் குறைவான விலைக்கு கேட்பதால் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் மனமுடைந்த மகேஸ்வர ரெட்டி மற்றும் பிரசாந்தி தம்பதியினர் கடந்த 13-ஆம் தேதி நள்ளிரவு அப்துல்லாபுரம் அருகே உள்ள தங்களது விவசாய நிலத்திற்கு சென்று பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

மறுநாள் 14-ஆம் தேதி காலை அந்த வழியாகச் சென்ற விவசாயிகள் நிலத்தில் தம்பதி இறந்து கிடப்பதை பார்த்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து ஆத்மகுரு டிஎஸ்பி ராமாஜிநாயக் தலைமையில் காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து இருவரின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக ஆத்மகுரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பங்கில் கலப்படம்! செய்தியாளர்கள் மிரட்டல்!

ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியை சேர்ந்த சின்னபாபு ரெட்டி குடும்பத்தினர் ஆந்திராவில் இருந்து சென்னை வந்து விட்டு ஆந்திராவிற்கு கடந்த 17-ம் ( ஞாயிற்று கிழமை) திரும்பிச் செல்லும் போது  திருவள்ளூர் அருகே பாண்டூர் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் அதிமுக அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோ.அரி-க்கு சொந்தமான இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையத்தில் தங்கள் போக்ஸ்வேகன் போலோ காருக்கு டீசல் நிரப்பியுள்ளனர்.

சின்னபாபு ரெட்டி டீசல் நிரப்பிக்கொண்டு பங்கில் இருந்து கார் புறப்பட்ட 2-வது கிலோ மீட்டரிலேயே நடுரோட்டில் கார் நின்றிருக்கிறது. இதையடுத்துஅதிர்ச்சி அடைந்த  சின்னபாபு ரெட்டி குடும்பத்தினர் மெக்கானிக் உதவியுடன் காரில் ஏற்பட்ட கோளாறை ஆராயும் போது டீசல் தரமற்று கலப்படமாகியுள்ளதாக தகவல் தெரியவந்தது. ஆகையால்  சின்னபாபு ரெட்டி குடும்பத்தினர் மீண்டும் அந்த பங்கிற்கு சென்று காரின்  ஒரு பாட்டிலில் டீசலை வாங்கி பார்த்தபோது டீசலில் கலப்படம் கண்டு அதிர்ந்து போனவர்கள்  இது தொடர்பாக பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கேட்டிருக்கிறார்.

அப்போது ஊழியர்கள் எங்களுக்கு எதுவும் தெரியாது நீங்கள் ஓனரை தான் கேட்கனும் என கூறியதோடு, இது தொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளரான திருத்தணி கோ.அரி-க்கு தகவல் தெரிவித்தனர். இந்த செய்தி சுற்று வட்டார பகுதிகளில் காட்டு தீ போல பரவ உள்ளூர் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க பெட்ரோல் பங்க் விரைந்து சென்று பெட்ரோல் பங்கை கேமரா மற்றும் செல்போன் மூலம் படம் பிடித்திருக்கின்றனர்.

அப்போது அங்கு வந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் திருத்தணி கோ.அரி அங்கிருந்த செய்தியாளர்களை மிரட்டியது மட்டுமல்லாமல் செய்தியாளர்களை ஒருமையில் பேசி படம் எடுக்க விடாமல் தடுத்தது அப்பகுதி மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள வாகன ஓட்டிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணீர் விட்டு அழுத ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுதது ஆந்திராவில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் கட்சி ஆட்சி செய்து வரும், நிலையில் சட்டப்பேரவையில் வேளாண் துறை தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றது.

அப்போது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்தார்.இதனால் ஆவேசமடைந்த ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கூச்சலிட்டனர். அதனைத் தொடர்ந்து இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமான சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சியைப் பிடிக்காமல் சட்டப்பேரவைக்குள் நுழையப் போவதில்லை எனக் கூறி வெளிநடப்பு செய்தார்.

செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, “கடந்த 2 ஆண்டுகளாக ஆளும் கட்சியினால் நான் அவமானப்படுத்தப்பட்டு வந்தாலும் பொறுமையுடன் இருந்தேன். இன்றைக்கு அவர்கள் எனது மனைவியை விமர்சித்துள்ளனர். நான் எனது வாழ்க்கையில் நேர்மையாக வாழ்ந்து வருகிறேன். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது” என தெரிவித்தார்.

மனைவி தற்கொலை செய்து கொள்வதை வீடியோ எடுத்த கொடூர கணவன்

ஆந்திரப் பிரதேசம், நெல்லூர் மாவட்டம் அட்மகூர் நகரை சேர்ந்த பெஞ்சலைய்யா என்பவர் ஒரு ஏடிஎம் மையத்தில் பாதுகாவலராகப் பணியாற்றி வருகிறார். பெஞ்சலைய்யாவின் மனைவி கொண்டம்மா இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் அடிக்கடி தகராறு செய்வது வந்தார். இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு, இவர்களுக்கு இடையே மறுபடியும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றி கொண்டம்மா தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். ஆனால் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் பெஞ்சலைய்யா அதனை வீடியோவாக எடுத்துள்ளார்.

அந்த வீடியோவில், தான் தற்கொலை செய்து கொள்ள முயன்ற கொண்டம்மா கணவன் எதிரே தூக்கில் தொங்கி துடிதுடித்து இறந்ததை பெஞ்சலைய்யா வீடியோ எடுத்து அந்த வீடியோவை மனைவியின் சகோதரருக்கு அனுப்பியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்ததும், பெண்ணின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க, பெஞ்சலைய்யா கைது செய்யப்பட்டார்.