வானதி சீனிவாசன்: வேல்முருகன் மக்கள் மன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்..!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள், உங்களின் பொறுப்பையும், தவறையும் உணர்ந்து, மத்திய நிதியமைச்சர் குறித்த உங்களின் தரம்தாழ்ந்த பேச்சுக்கு உடனடியாக மக்கள் மன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக வானதி சீனிவாசன் பேசுகையில், மும்மொழிக் கொள்கைக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற போர்வையில், நமது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர்களை அடிப்படை மாண்பின்றி ஒருமையில் சாடியதோடு, சாதிய ரீதியாகவும் அவரைக் கீழ்த்தரமாக விமர்சித்த உங்கள் அநாகரிகப் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

“ஆணுக்கு பெண்ணிங்கே இளைப்பில்லை” என பெண் உரிமைகளைப் பறைசாற்றிய பாரதி பிறந்த மண்ணில், “பெண் அமைச்சர் அடக்கமாக இருக்கவேண்டும்” எனவும், “தயிர் சாதம் சாப்பிடும் மாமி” எனவும் பொது வாழ்வில் உள்ள ஒரு மூத்த பெண் தலைவர் மீது தொடர்ந்து சொல்லெறியும் உங்களின் ஆணாதிக்க மனப்போக்கு ஆபத்தானது மட்டுமன்றி, வெட்கக்கேடானது. உங்களுடன் அரசியல் களமாடும் சக பெண் தலைவர்களைக் கொச்சைப்படுத்துமளவிற்கு ஆணவம் உங்கள் அறிவுத் திறனை மழுங்கடித்துவிட்டதா? இதுதான் நீங்கள் தமிழகத்தின் வாழ்வுரிமையைக் காக்கும் லட்சணமா திரு. வேல்முருகன்?

எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள், உங்களின் பொறுப்பையும், தவறையும் உணர்ந்து, மத்திய நிதியமைச்சர் குறித்த உங்களின் தரம்தாழ்ந்த பேச்சுக்கு உடனடியாக மக்கள் மன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என வலியுறுத்துகிறேன் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நாராயணன் திருப்பதி: தீவிரவாத, பிரிவினைவாத பேச்சு.. திகார் சிறைக்கு அனுப்பினால் தான் வேல்முருகனுக்கு அறிவு வரும்..!!

ஒரு முறை திகார் சிறைக்கு அனுப்புவித்தால் தான் தொடர்ந்து தீவிரவாத, பிரிவினைவாத செயல்களை தூண்டிவிடும் வேல்முருகனுக்கு அறிவு வரும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பங்கேற்று ஆவேசமாகப் பேசினார். அப்போது, “எதையும் பற்றி கவலைக் கொள்ளாமல் நம்மை தூசு என்று நினைக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு சரியான சவுக்கடி கொடுக்க வேண்டும்.

இதை சரியான களமாக மாற்ற வேண்டும். வரி கொடா இயக்கம் தொடங்குவோம். சுங்கக் கட்டணத்தைத் தவிர்ப்போம். ஜி.எஸ்.டி கொடுக்க மாட்டோம் என முடிவு எடுப்போம். மத்திய அரசு திட்டங்கள் அனைத்தையும் முடக்குவோம் என முடிவு எடுங்கள். மோடி நம் முன் மண்டியிடுவார். நம்முடைய ஆட்கள் கேட்கிற கேள்விகள் ஒன்றுக்கு கூட பாஜகவினரால் பதில் சொல்ல முடியவில்லை.. நிர்மலா சீதாராமன் கதறுகிறார். தயிர் சாதம் சாப்பிடும் நிர்மலா சீதாராமனுக்கே இவ்வளவு கோபம் வருகிறது என்றால், நல்லி எலும்பு சாப்பிடும் எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும். எங்கள் மண்ணுக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகத்தை பார்க்கும் போது எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்.” என ஆவேசமாக பேசியிருந்தார்.

இந்நிலையில் வேல்முருகன் ஜாதிய வன்மத்தை தூண்டும் வகையில் பேசியதற்காக உரிய சட்டத்தில் அவரை கைது செய்வதோடு, குண்டர் சட்டத்திலும் கைது செய்து சிறையில் அடைக்க முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் பக்கத்தில், “வன்முறையை தூண்டும் வகையில் பேசியதோடு, மத்திய அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்த தூண்டும் விதமாகவும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும், பிரதமரை ஒருமையில் பேசி, கீழ்த்தரமாக விமர்சித்து, இந்தியாவின் நிதி அமைச்சரை தரக்குறைவாக பேசிய திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகனை தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், பெண் வன்கொடுமை சட்டத்திலும், ஜாதிய வன்மத்தை தூண்டும் வகையில் பேசியதற்காக உரிய சட்டத்திலும் கைது செய்வதோடு, குண்டர் சட்டத்திலும் கைது செய்து சிறையில் அடைக்க முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்.

மேலும், மத்திய அரசு அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அளிக்க உரிய நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும். தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வகையில் செயல்படும் இந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது என்ஐஏ வழக்கு பதிந்து, சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். ஒரு முறை திகார் சிறைக்கு அனுப்புவித்தால் தான் தொடர்ந்து தீவிரவாத, பிரிவினைவாத செயல்களை தூண்டிவிடும் இந்த நபருக்கு அறிவு வரும்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பதவியேற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் இந்த நபரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில், தன் பொறுப்பிலிருந்து கடமை தவறி விட்டதாகவே கருதப்படுவார். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் கச்சேரி வைத்துக் கொள்வதாக சபதமிட்டுள்ளார். முடிந்தால் கை வைத்துப்பார் வேல்முருகா! சிறையில் களி தின்ன ஆசையா வேல்முருகா?” என நாராயணன் திருப்பதி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வேல்முருகன் ஆவேசம்: தயிர் சாதத்திற்கே இவ்வளவு கோபம் என்றால் ..! நல்லி எலும்பிற்கு எவ்வளவு கோபம் வராதா..!?

தயிர் சாதம் சாப்பிடும் நிர்மலா சீதாராமனுக்கே இவ்வளவு கோபம் வருகிறது என்றால், நல்லி எலும்பு சாப்பிடும் எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆவேசமாக பேசினார்.

சென்னையில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பங்கேற்று ஆவேசமாகப் பேசினார். அப்போது, “எதையும் பற்றி கவலைக் கொள்ளாமல் நம்மை தூசு என்று நினைக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு சரியான சவுக்கடி கொடுக்க வேண்டும். இதை சரியான களமாக மாற்ற வேண்டும். வரி கொடா இயக்கம் தொடங்குவோம். சுங்கக் கட்டணத்தைத் தவிர்ப்போம். ஜி.எஸ்.டி கொடுக்க மாட்டோம் என முடிவு எடுப்போம். மத்திய அரசு திட்டங்கள் அனைத்தையும் முடக்குவோம் என முடிவு எடுங்கள். மோடி நம் முன் மண்டியிடுவார்.

நம்முடைய ஆட்கள் கேட்கிற கேள்விகள் ஒன்றுக்கு கூட பாஜகவினரால் பதில் சொல்ல முடியவில்லை.. நிர்மலா சீதாராமன் கதறுகிறார். தயிர் சாதம் சாப்பிடும் நிர்மலா சீதாராமனுக்கே இவ்வளவு கோபம் வருகிறது என்றால், நல்லி எலும்பு சாப்பிடும் எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும். எங்கள் மண்ணுக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகத்தை பார்க்கும் போது எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்.” என வேல்முருகன் ஆவேசமாக பேசினார்.