வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திராவில் நேற்று கரையை கடந்தாலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்டங்களை சூறையாடிவிட்டு சென்று விட்டது. சென்னையில் பேயாக பெருமழை கொட்டித்தீர்த்துள்ளது. இதனால் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மிக்ஜாம் புயலால் பெருமழை வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு சில நாட்கள் ஆகும்.
நகர் பகுதிகளில் வெள்ளம் வடிந்தாலும் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. பள்ளிகள், கல்லூரிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளன. இந்நிலையில் சென்னையில் மழை ஓய்ந்து 3 நாட்களாகியும் மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடியயும் இல்லை நிலைமை இன்னும் மாறவில்லை.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த திராவிட கட்சிகள் ஊழலும் லஞ்சமும் கரைபுரண்டு ஓடியாதல் சென்னையின் இந்த அவல நிலைக்கு காரணம் என நடுநிலையானவர்களும் அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி திமுகவையும் வறுத்தெடுத்து கொண்டுள்ளனர். மேலும் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள் அத்திவாசிய பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர்.
அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வேளச்சேரி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார். வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது பெண் ஒருவர் அண்ணாமலையிடம்.. நாங்க சொல்றதை எங்கயாவது கேட்குறீங்களா ? யாரவது நின்று எங்கள் பேச்சை கேட்குறீங்களா? நீங்க பாருங்க நான் கொடுத்த கோரிக்கையை கூட படிக்கவில்லை. ஆனால் கிளம்பி செல்கிறீர்கள்.
மாறி மாறி நீங்கள் போட்டோதான் எடுக்கிறீர்கள். என்னுடைய பிரச்னையை உங்களிடம் சொல்ல வருகிறேன் ஆனால் கேட்காமல் உள்ளீர்கள் என்று அந்த பெண் கூறியுள்ளார். இதை கேட்ட அந்த பெண்மணி நாங்கள் வைக்கும் கோரிக்கையை நீங்கள் ஏற்க மாட்டீர்கள். ஆனால் இப்போது சாப்பாடு மட்டும் போடுவீர்களா.. உங்கள் சாப்பாடும் வேண்டாம்.. ஒன்றும் வேண்டாம்.. நீங்கள் செல்லுங்கள்., என்று கடுமையாக பேசி உள்ளார்.
மேலும் இளைஞர் ஒருவர்.. வெறும் 50 பேருக்கு சாப்பாடு கொண்டு வருகிறார்.. எப்படி பத்தும். இங்கே 1500 வீடுகள் இருக்கு. 50 பேருக்கு சாப்பாடு கொண்டு வந்துட்டு நான் உதவி செஞ்சிட்டேன் அப்படின்னு சொல்லிக்கிறாங்க? இது எல்லாம் எப்படிங்க போதுமாக இருக்கும்? நீங்களே சொல்லுங்கள். இங்கே அத்தனை பேர் சாப்பிடம்ல் இருக்கோம். ஆனால் இவங்க பாருங்க போட்டோ எடுக்குறாங்க, என்று கோபமாக பேசி உள்ளார்.