நீ விரும்பித்தானே உறவு வெச்சீங்க..அப்புறம் அதில் என்ன பிரச்சனை? பிடிக்கலை பிரிந்து போயிட்டீங்க.. 15 வருஷமாகிடுச்சு.. விரும்பி வந்து உறவுவெச்சுட்டு போனவ அவ…என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகையை பலாத்காரம் செய்தது தொடர்பான புகார் மீதான விசாரணைக்காக சீமான் நேற்று இரவு ஆஜரானார். அவரிடம் 1.15 மணிநேரம் காவல்துறை கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்குப் பின்னர் காவல் நிலைய வளாகத்தில் செய்தியாளர்களின் சீமான் பதிலளித்தார்.
அப்போது, காவல்துறைக்கு அரசு தரப்பில் அழுத்தம் இல்லாமல் எப்படி இருக்கும்? காவல்துறையினரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அரசு தரப்பில் இருந்து அழுத்தம் தரப்பட்டதுதான் காரணம். நானோ என் மனைவியோ மிகவும் மன உறுதியானவர்கள். உலகம் முழுவதும் எனக்கு சொந்தங்கள் இருக்கிறார்கள். என் பிள்ளைகள், தம்பிகள் வலியுடன் குரல் செய்திகளை பகிரும் போது எனக்கு வலி அல்ல.. வெறியாக இருக்கிறது.
பலாத்கார புகாரால் பாதிப்பு இல்லை இது என் வளர்ச்சிக்கு காரண்மா என்பது தெரியாது; எனக்கு இடையூறாக இருந்திருந்தால் புதியதாக சின்னங்களைக் கொடுத்தார்கள்; எந்த வேட்பாளரும் என் பிள்ளைகள் அறிமுகமான பிள்ளைகள் இல்லை; நானும் புகழ்பெற்ற நடிகனோ, தலைவரின் மகனோ இல்லை. எங்களை நம்பி 36 லட்சம் வாக்குகளைக் கொடுத்து தனித்தே நின்று அங்கீகரத்தை தந்துள்ளனர். அப்படியானால் இப்படியான புகார்களால் எனக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றுதானே அர்த்தம்.
சிறையில் இருக்கும் போது நடிகையுடன் இருந்ததாக கூறுகின்றனர்; சிறையில் இருக்கும் போது அலைபேசியே இருக்காது; கருக்கலைப்பு செய்ததை எல்லாம் உறுதிப்படுத்தாமல் நீதிமன்றம் பதிவு செய்திருக்கக் கூடாது; இதற்காகத்தான் நான் உச்சநீதிமன்றம் போக வேண்டிய தேவை இருந்தது. அந்த நடிகை என்ன கஷ்டத்தில் வந்து சந்தித்ததாக சொல்கிறீர்கள்.. அப்புறமாக ரூ60 லட்சம் எனக்கு கொடுத்ததாக சொல்கிறீர்கள்.. அப்புறம் ரூ50,000, ரூ50,000 என்னிடம் வாங்கியதால சொல்றீங்க.. இது எல்லாம் எப்படி? கஷ்டத்தில் இருக்கிறவர் எனக்கு எப்படி ரூ60 லட்சம் கொடுக்க முடியும்? அப்படி ரூ.60 லட்சம் கொடுத்து இருந்தால் முதல் புகாரில் ஏன் அதை பதிவு செய்யவில்லை.. நீங்க திருமணம் ஆகிவிட்டது என்கிறீர்கள்..
அதை முதல் புகாரில் திருமணமானதாக சொல்லி இருக்கனும்.7 முறை கருக்கலைத்ததாக சொல்கிறீர்கள்.. அதை முதல் புகாரில் 7 முறை கருக்கலைத்தோம் என சொல்லி இருக்கனும். 2-வது முறையாக புகார் தந்த போதாவது சொல்லி இருக்கனும். இல்லை. ஆனால் 2024-ஆம் ஆண்டு தேர்தலின் போதுதான் இதை எல்லாம் சொல்கிறீர்கள். நடிகைக்கு என் மீது காதல் இல்லை காதல் என ஒன்று இருந்திருந்தால், காதலித்த ஒரு பெண் உலகத்தில் யாராவது ஒருவர் இப்படி முச்சந்தியில் நின்று இப்படி கத்திக் கொண்டு இருப்பாங்களா? இது காதலா? கன்றாவியா? எதையாவது பேசிக் கொண்டிருக்காதீங்க.. எந்த ஒரு பாலியல் வன்புணர்வுக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை நீங்கள்..
ஏனெனில் அங்கே சீமான் இல்லை.. இங்கே சீமான் இருக்கிறான்… சீமானை சீண்டனும்.. ஏனெனில் ஒன்றே ஒன்றுதான்.. அவர்களால் என்னை சமாளிக்க முடியவில்லை. என்னுடைய உளவியல் என்பதே இவர்களை உளவியலா சாகடிப்பதுதான். என் மனைவிக்கு இதெல்லாம் சாதாரணம் என் மனைவி என்னைவிட மன உறுதி கொண்டவர்; அவர் பிறக்கும் போதே ஒரு அமைச்சர் மகள்; இந்திய குடிமைப் பணிக்கு தேர்வு எழுதி எழுதி பயிற்சி எடுத்தவங்க.. என்னை விரும்பியதால் அதனை விட்டுவிட்டு திருமணம் செய்து கொண்டார்.
அப்புறம் சட்டம் படித்து வழக்கறிஞராக இருக்கிறார். என்னைவிடவும் சிறப்பாக பேசக் கூடியவர்; அவர் காளிமுத்துவின் மகள். அதனால் என் மனைவிக்கு இதெல்லாம் ரொம்ப சாதாரணம்.. என் வீட்டில் இதை எல்லாம் விவாதிக்கவும் மாட்டோம்; பேசவும் மாட்டோம். அப்படியே நான் ஒரு பெண்ணை தூக்கிட்டுப் போய் கதற கதற வன்புணர்வு செஞ்சிவிட்டமாதிரி நீங்க செய்து கொண்டிருக்கீங்க.. ஒரு நடிகை இவ்வளவு காலம் இருந்துவிட்டு தெருத்தெருவாக என்னை அசிங்கப்படுத்தும் போது எல்லோரும் அதை ரசித்துக் கொண்டே இருந்தீங்க..
அவரிடம் ஒரு முறைகூட என்னதான் உங்க பிரச்சனை என கேள்வியே கேட்கவில்லையே? திருமணமாகிவிட்டது.. குழந்தையாகிவிட்டது.. இவ்வளவு பெரிய மக்கள் முன்னாடி தினம் பேசிக் கொண்டிருக்கிற இந்த மகனை, மக்கள் பிரச்சனைக்கு தினம் நிற்கிற மகனை இப்படி கேவலப்படுத்துகிறீர்களே? என ஏன் யாரும் கேட்கவில்லை? நீ விரும்பித்தானே உறவு வெச்சீங்க..அப்புறம் அதில் என்ன பிரச்சனை? பிடிக்கலை பிரிந்து போயிட்டீங்க.. 15 வருஷமாகிடுச்சு.. எனக்கு கல்யாணம் ஆகியே 14 வருஷமாச்சு.. இதை எல்லாம் யாரும் கேள்வி கேட்கவில்லை?
நான் பேசுறது மட்டும் முகம் சுழிக்க வைக்கிறதா? 15 வருஷமாக என்னை பழிபோட்டு அவமானப்படுத்துறீங்க? என்னைய என் குடும்பத்தை என் பிள்ளைகளை குதறி தின்றீங்களே எல்லோரும்.. என் மகன் பெரியவனுக்கு நல்லா விவரம் தெரிந்துவிட்டது.. அதை எல்லாம் அவன் பார்த்தா, அவன் நண்பர்கள் பார்த்தா என்னாவாங்க? அப்போ எல்லாம் உங்களாள் முகம் சுழிக்க முடியலை? கேவலப்படுகிறவன், அவமானப்படுகிறவன் சீமானுன் அவன் பிள்ளைகளும்.. இந்த என் மகள் நிற்கிறாள்..
இவ என்ன நினைப்பாள் என்னை? அதெல்லாம் உங்களுக்கு அவமானமாக, கேவலமாக இல்லையே? முகம் சுழிக்கிற முகத்தை ஒரு முறை காட்டு பார்ப்போம்.. எப்படி இருக்குதுன்னு பார்ப்போம்.. என்னை சொல்லும் போது சிரிக்கிறதே அந்த முகம்; ஆனால் என் ஆதங்கத்தை சொல்லும் போது அந்த முகம் சுழிக்குதே ஏன்? இந்த திமுகவில் இருக்கிற ஒரு தலைவன் இதை பற்றி பேச தகுதியோட இருக்கான்னு சொல்லுடா? ஒருத்தன்.. ஒருத்தனுக்கு தகுதி இருக்கிறதா? பாலியல் குற்றவழக்கு… பாலியல் குற்றவழக்கு… என்ன பாலியல் குற்றம்? நிரூபிக்கப்பட்டுள்ளதா? விரும்பி வந்து உறவுவெச்சுட்டு போனவ அவ… சேட்டை பண்ணிட்டு இருக்கக் கூடாது.. முகம் சுழிச்சா சுழிச்சுட்டு இரு… என சீமான் தெரிவித்தார்.