Navneet Kaur Rana: “மோடி அலை” இருந்தும் கடந்த முறை நான் சுயேச்சையாக வெற்றி பெற்றேன் ”

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகலுக்கு ஏப்ரல் 19, ஏப்ரல் 16, மே 7, மே 13, மே 20 ஆகிய தேதிகளில் ஆகமொத்தம் 5 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிவித்தது. இதனால் மகாராஷ்டிரா தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதி பாஜக வேட்பாளர் நவ்நீத் கௌர் ரானா அமராவதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “நாம் இத்தேர்தலை ஒரு கிராம பஞ்சாயத்து தேர்தல் போல் பாவித்து பணிகளைச் செய்ய வேண்டும். பகல் 12 மணிக்குள் வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வந்துவிட வேண்டும். அவர்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

“மோடி அலை” இருக்கிறது என்ற மாயையில் இருந்துவிட வேண்டாம். “மோடி அலை” இருந்தும்கூட கடந்த முறை நான் சுயேச்சையாக வெற்றி பெற்றேன் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்” என்று பேசியிருந்தார். அவர் பேச்சு அடங்கிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி மகாராஷ்டிரா அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.