திமுகவை கம்பீரமாக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் அமர வைத்துள்ளதாக கலைஞர் உரை..!

தந்தை பெரி­யார் பிறந்த நாள் செப்டம்பர் 17, பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15, தி.மு.க தோற்றுவிக்கப்பட்ட 17. 9. 1949 தினத்தையும் இணைத்து “முப்­பெ­ரும் விழா’’ முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளால் 1985 – ஆம் ஆண்டு அறி­விக்­கப்­பட்டு அன்று முதல் திமுகவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முப்பெரும் விழாவுடன் சேர்த்து, தி.மு.க தோன்றி 75 ஆண்டு­ பவ­ள­விழாவும் சேர்த்து கொண்டாடப்படுகிறது.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக பவள விழா முப்பெரும் விழா பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக பவள விழா – முப்பெரும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி AI தொழில்நுட்பத்தில் கலைஞர் உரையாற்றினார்.

அப்போது, திமுகவை கம்பீரமாக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் அமர வைத்துள்ளார். 55 ஆண்டுகளாக கட்சிக்கு அயராது உழைத்தவர் மு.க.ஸ்டாலின். திராவிடச் செம்மலாய் இந்தியாவின் முன்மாதிரி முதலமைச்சராக செயல்பட்டு நல்லுலகம் போற்றும் நாயகராய் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி வழியில் கழக ஆட்சியை சிறப்பாக வழி நடத்துகிறார் என மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டினார்.

இந்நிலையில், சென்னை ஒய்எம்சிஏ திடலில் தி.மு.க பவளவிழா மற்றும் முப்பெரும் விழா மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து மேலும் இந்த பிரம்மாண்ட விழாவில், பாப்பம்மாள் சார்பாக அவரது பேத்தி ஜெயசுதா அவர்களிடம் பெரியார் விருதினையும், அறந்தாங்கி மிசா இராமநாதன் அவர்களுக்கு அண்ணா விருதினையும், வழங்கினார். முதலமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு கலைஞர் விருதினையும், கவிஞர் தமிழ்தாசன் அவர்களுக்கு பாவேந்தர் விருதினையும், வி.பி.ராஜன் அவர்களுக்கு பேராசிரியர் விருதினையும் தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் விருதினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான உடன்பிறப்புகள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

மு.க.ஸ்டாலின்: ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக..!

சென்னையில் நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் திமுகவின் பவள விழா நிறைவுப் பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில்,

“நான்தான் திராவிடன் என்று நவில்கையில்
தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!”
– எனப் பாவேந்தர் பாடிய உணர்ச்சி தமிழ்நிலமெங்கும் வீச, தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது!

தமிழுக்கு ஒரு இன்னலென்றால் தடுத்து நிறுத்தத் தம்பிமார் படை உள்ளதென்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள உடன்பிறப்புகளானோம் நாம்!

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம்! இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம்! தமிழினத் தலைவர் கலைஞர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் பாடுபடும் அத்தனை பேருக்கும் இந்தத் தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள்!

இன்று மாலை பவள விழா – முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன் என மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.