Tag: முத்தரசன்
முத்தரசன் வாய் கொழுப்புடன் ஆணவத்துடன் பேசி வரும் அண்ணாமலை..!
நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
அதன்வரிசையில், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வேணுகோபால் வேட்பாளரை ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது, “1980இல் நடந்த விஷயங்களை எல்லாமே சம்பந்தமே இல்லாமல் திமுக இப்போது பேசி வருகிறார்கள். இந்தி- சமஸ்கிருதம், வடக்கு- தெற்கு எனப் பேசி வருகிறார்கள். அந்த பிஞ்சு போன செருப்பை அவர்கள் இன்னும் தூக்கி எறியவில்லை” என்று அவர் பேசினார்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பலர் தங்கள் இன்னுயிரை ஈந்த நிலையில், அதைப் பிஞ்சு போன செருப்பு என அண்ணாமலை பேசியது சர்ச்சையானது. பல அரசியல் கட்சியினரும் ரும் அண்ணாமலை பேச்சைக் கடுமையாகச் சாடி வருகிறார்கள். அண்ணாமலையின் இந்த கருத்து குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், அண்ணாமலைக்கு இந்திய வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு, மொழி வரலாறு எதுவும் தெரியவில்லை என்று வாய் கொழுப்புடன் ஆணவத்துடன் பேசி வரும் அண்ணாமலைக்கு கோவை தொகுதியில் டெபாசிட் கூட கிடைக்காது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
முத்தரசன் குற்றசாட்டு: டெல்லியில் இருந்து ஹரியாணாவுக்கு சாலை அமைப்பதில் ரூ.6,758 கோடி முறைகேடு..!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு மற்றும் மாநில குழுக் கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டியில் நேற்று தொடங்கி வரும் 17-ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று மாநில செயலாளர் முத்தரசன், கட்சிக் கொடியை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம் என ஆளுநர் பகிரங்கமாக அறிவிக்கிறார். ஆளுநர் அலுவலகம் பாஜக பிரச்சார அலுவலகம்போல செயல்படுகிறது. நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் அனிதா உள்பட 25 பேர் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இனியாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
கல்லூரிகளை காட்டிலும் நீட் பயிற்சி மையம் அதிகமாக உருவாகி உள்ளது. சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க முடியும். மத்திய அரசோடு நெருக்கத்தில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பிரதமரிடம் பேசி தமிழகத்துக்கு நீட் தேர்வு விலக்கை பெற்றுத்தர வேண்டும்.
மத்திய அரசு டெல்லியில் இருந்து ஹரியாணாவுக்கு சாலை அமைப்பதில் ரூ.6,758 கோடி முறைகேடு நடந்துள்ளதாக மத்திய கணக்கு தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது. இந்த ஊழல் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.