ஆயுள் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய மாநில அளவிலான குழுவின் பரிந்துரை அடிப்படையில் முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பிறகும், தகுந்த காரணங்களை கூறாமல் ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும்?” முன்கூட்டியே விடுவிக்கக் கோரி கோயம்புத்தூர் மத்திய சிறையில் உள்ள 10 கைதிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
Tag: முதலமைச்சர்
அண்ணாமலைக்கு வார்னிங் தந்த ஓபிஎஸ் அணி.. !
அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி எதுவும் தெரியாத அண்ணாமலை, தேவையின்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எச்சரிக்கை கொடுத்துள்ளது. ஓபிஎஸ் அணியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களான புகழேந்தியும், மருது அழகுராஜூம் அண்ணாமலையை வார்த்தைகளால் வெளுத்து எடுத்துள்ளனர். இதற்கு மூல காரணம் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என்றும் ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் முதலமைச்சர் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டதே காரணமாகும்.
இதனிடையே இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் புகழேந்தி, அண்ணாமலை இனியும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டால் சட்ட நடவடிக்கை பாயும் என்றார். அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி கோர்ட் கூண்டில் அவர் நிற்க வேண்டிய சூழல் வரும் எனவும் புகழேந்தி எச்சரித்தார். மேலும் தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது என்று தெரியாமல் ”நீ பேசக்கூடாது” என அண்ணாமலையை புகழேந்தி சாடினார். அண்ணாமலைக்கு ஒன்றும் தெரியவில்லை என்பது தான் உண்மை என்றும் அதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.
டிடிவி தினகரன்: இங்கே இருப்பவர்கள் தொண்டர் படை..!, அங்கே இருப்பவர்கள் குண்டர் படை…!
1996-ம் ஆண்டு பெரியகுளம் நகர்மன்ற சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். அப்போது முதலே டிடிவி தினகரனுக்கும் நெருக்கமானவர் ஆனார் ஓபிஎஸ். அப்போது ஓபிஎஸ்ஸை ‘சேர்மன்’ என அழைக்கத் தொடங்கிய தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர், முதலமைச்சர் என அடுத்தடுத்து பெரிய பதவிகளை அலங்கரித்த பிறகும் கூட பழைய பாசத்தோடு சேர்மன் என்று அழைப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஓபிஎஸ்ஸின் சொந்த ஊரான பெரியகுளத்தில் நின்று எம்.பி ஆனவர் டிடிவி தினகரன். இதனால் இருவருக்கும் இடையே நீண்டகாலமாக நல்ல நட்பு உண்டு. எனினும், ஜெயலலிதா – சசிகலா குடும்பத்தினர் இடையே சில ஆண்டுகள் இருந்து வந்த பிணக்கு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் மேற்கொண்ட தர்ம யுத்தம் ஆகியவை காரணமாக பல ஆண்டுகளாகவே இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இந்தச் சூழலில் தான் கடந்த ஆண்டு, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட அதிகார மோதலைத் தொடர்ந்து, ஓபிஎஸ் தனித்து இயங்கி வருகிறார்.
அப்போது முதல், டிடிவி தினகரனை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் எனக் கூறி வந்தார். தினகரனும் அவ்வாறே கூறினாலும், பல மாதங்களாக அதற்கான சூழல் அமையவில்லை. அண்மையில் தான் இருவரும் சந்தித்து பேசிக்கொண்டனர். 2024 தேர்தலைக் குறிவைத்து, அதிமுக கூட்டணியில் இணையும் முடிவில் தினகரன் இருந்து வரும் நிலையில், ஓபிஎஸ் உடன் பரஸ்பர நல்லுறவைக் கடைபிடித்து வருகிறார். இந்த நட்பு பாலத்திற்கு ஃபெவிகால் போடும் வகையிலேயே இன்று தேனியில் ஓபிஎஸ் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், ஓபிஎஸ் உடன் ஒரே மேடையில் பங்கேற்றுப் பேசினார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். அதே இடத்தில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு: டி.டி.வி.தினகரன் 1999-ல் பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டபோது, முதல் அறிமுகக் கூட்டம் தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்றது.
அப்போது ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் இருவரும் ஒரே மேடையில் தோன்றினர். அதன் பிறகு அதே பங்களாமேடு பகுதியில் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இருவரும் ஒரே மேடையில் இணைந்து பேசியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தேனியில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, ஆதரவு தெரிவித்துள்ள நெஞ்சம் நிறைந்த அருமை அண்ணன் நாமெல்லாம் இதய பூர்வமாக மக்கள் செல்வன் என்று அன்போடு அழைக்கும் டிடிவி தினகரன் சார் இங்கு வந்து கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.
மேலும், “மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த கோடநாடு இல்லத்தில் நடந்த கொலை, கொள்ளை வழக்கை துரிதமாக விசாரணை செய்ய வேண்டும். இதுகுறித்து தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரிய தண்டனையை கோடநாடு கொள்ளைக் கூட்டத்துக்கும், கொலையாளிகளுக்கும் பெற்றுத்தர வேண்டும்.” என்றார்.
டிடிவி தினகரன் பேசுகையில், “அருமை நண்பர் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம் நிற்கின்றனர். இங்கே இருப்பவர்கள் தொண்டர் படை, அங்கே இருப்பவர்கள் குண்டர் படை. விசுவாசம் என்றால் என்ன என்பது அவர்களின் கண்களுக்கு தெரியாது. ஏனெனில் அவர்கள் துரோகத்தை தவிர, வேறு எதையும் அறியாதவர்கள். ஓபிஎஸ்ஸும் நானும் பதவிக்காக இணையவில்லை. நாங்கள் இணைந்தது இயற்கையாக நடந்திருக்கிறது. துரோகிகள் அபகரித்துள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட சின்னத்தை மீட்டெடுத்து ஜெயலலிதாவின் தொண்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்” எனப் பேசினார்.