மம்தா பானர்ஜி கேலி: ரயில்கள் தடம் புரண்டதில் இந்திய ரயில்வே உலக சாதனை..!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ரயில்கள் தடம் புரண்டதில் இந்திய ரயில்வே உலக சாதனை படைத்துள்ளதாக கேலி செய்துள்ளார்.

நாடு முழுவதும் ரயில்கள் பல இடங்களில் தடம் புரண்டு வருகின்றன. சமீபகாலமாக இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இதுபற்றி முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசுகையில்,’ ரயில்வேயில் என்ன நடக்கிறது? இன்றும் ரயில் தடம் புரண்டதாக செய்தி வருகிறது.

ரயில் தண்டவாளத்தில் உலக சாதனை படைத்துள்ளது. ஆனால் யாரும் எதுவும் கூறவில்லையா? மக்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது. ரயிலில் பயணிக்கவே மக்கள் பயப்படுகிறார்கள். ரயில்வே அமைச்சர் எங்கே? தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்பது மட்டும் பலன் அளிக்காது. ஆபத்து ஏற்படும் போது மக்கள் பக்கம் இருக்க வேண்டும்’ என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மம்தா பானர்ஜியின் இறுதி அழைப்பு: பயிற்சி மருத்துவர்கள் முதலமைச்சரின் இல்லத்திற்கு வாருங்கள்..!

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு 5-வது முறையாக மேற்கு வங்க முதல்மைச்சர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், இதுதான் இறுதி அழைப்பு என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க தலைநகரம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு முதுகலை பயின்று வந்த மருத்துவ மாணவி, கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி மருத்துவமனையின் கருத்தரங்கு மண்டபத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாதவாறு பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

36-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்கள், சுகாதாரத் துறையின் தலைமையகமான ஸ்வஸ்த்யா பவனுக்கு வெளியே 8 நாட்களாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் இடத்துக்கு கடந்த சனிக்கிழமை நேரில் வருகை தந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை பணிக்குத் திரும்புமாறு வலியுறுத்தினார். மேலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்றும் சமாதானத்துக்காக தான் மேற்கொள்ளும் கடைசி முயற்சி இது என்றும் கூறினார்.

முதலமைச்சரின் வருகையை வரவேற்ற பயிற்சி மருத்துவர்கள், உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தினர். மேலும், தங்களது கோரிக்கைகளில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி சார்பில், மேற்கு வங்க தலைமை செயலாளர் மனோஜ் பந்த், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்களுக்கு இமெயில் மூலம் கடிதம் அனுப்பி உள்ளார். அவர் தனது கடிதத்தில், “தல்வர் மற்றும் உங்கள் பிரதிநிதிகளுக்கு இடையேயான சந்திப்பிற்காக நாங்கள் உங்களை அணுகுவது இது ஐந்தாவது மற்றும் கடைசி முறையாகும். முதலமைச்சரின் காளிகாட் இல்லத்தில் ஒரு திறந்த மனதுடன் ஒரு கலந்துரையாடலுக்கு உங்களை மீண்டும் அழைக்கிறோம்.

நல்ல உணர்வு மேலோங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவதால், சந்திப்பை நேரலை செய்யவோ அல்லது வீடியோ எடுக்கவோ முடியாது. மாறாக, கூட்டத்தில் பேசப்படும் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு இரு தரப்பினராலும் கையெழுத்திடப்படும். பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ள பயிற்சி மருத்துவர்களின் பிரதிநிதிகள் இன்று மாலை 4.45 மணிக்கு முதலமைச்சரின் இல்லத்திற்கு வாருங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜி உருக்கம்: மக்களின் நலனுக்காக முதலமைச்சர் பதவியை கூட ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்

பேச்சுவார்த்தைக்கு ஜூனியர் மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்தால் மக்களின் நலனுக்காக தான் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகவும் தயாராக இருப்பதாக மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி.கர் அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் இரவுப் பணியின் போது பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தி வரும் ஜூனியர் மருத்துவர்கள் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கொல்கத்தா காவல் ஆணையர் வினீத் கோயல் மற்றும் சுகாதார துறையின் 2 மூத்த அதிகாரிகளை பதவி நீக்கம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். நேற்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி மாலை 5 மணிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி வந்த நிலையில், ஜூனியர் டாக்டர்கள் குழு 25 நிமிடங்கள் தாமதமாக 5.25 மணிக்கு வந்தனர்.

இந்த பேச்சுவார்த்தையை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டுமென அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். ஆனால் அரசு தரப்பில் அதற்கு சம்மதிக்கவில்லை. அதே சமயம், முழு பேச்சுவார்த்தையும் வீடியோ பதிவு செய்யப்படும் என்றும் ஆவணங்கள் பாதுகாக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதனை ஜூனியர் டாக்டர்கள் ஏற்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தொடங்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரமாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி காத்திருந்தார். இறுதியில் இரு தரப்பும் விட்டுக் கொடுக்காததால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

இதைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி பேசுகையில், மேற்கு வங்க மக்களின் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இப்பிரச்னை இன்றோடு முடிவுக்கு வரும் என நினைத்திருப்பீர்கள். அது நடக்கவில்லை. நான் 2 மணி நேரம் காத்திருந்தேன். இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். அதற்காக, மேற்கு வங்க மக்களின் நலனுக்காக எனது முதலமைச்சர் பதவியை கூட ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்.

சிலர் வெளியில் இருந்து சதி செய்கின்றனர். அவர்களுக்கு தேவை நியாயம் அல்ல. அதனால் பேச்சுவார்த்தை நடக்கவிடாமல் தடுக்கின்றனர்’’ என்றார். இந்த விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏவும், ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் நோயாளிகள் நலக்குழுவின் உறுப்பினருமான சுதிப்தோ ராயிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மம்தா பானர்ஜி முன்னிலையில் பேச்சு நடத்துவது நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்..!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். இதை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். இதனால், பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து, கடந்த 33 நாட்களாக அந்த மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனையிலும், மாநில சுகாதாரத் துறையிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டார். இதுதவிர மாநில சுகாதாரத் துறை செயலர் நாராயண் ஸ்வரூப் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சிலரை பதவி நீக்கம் செய்யும்படி மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, மேற்கு வங்கத்தின் சுகாதார அமைப்பில் கடுமையான இடையூறு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், செப்டம்பர் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கெடு விதித்தது. ஆனால், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை விதிப்பது, மருத்துவர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்வது, சுகாதாரத் துறை செயலர் நாராயண் ஸ்வரூப் நிகாம் உள்ளிட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்வது உள்ளிட்ட தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிட முடியாது என்று மருத்துவர்கள் திட்ட வட்டமாக தெரிவித்துவிட்டனர்.

இதையடுத்து, பேச்சுவார்த்தைக்கு வருமாறு மாநில தலைமைச் செயலர் மனோஜ் பந்த், போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு நேற்று காலையில் மின்னஞ்சல் மூலம் அழைப்பு விடுத்தார். மாலை 6 மணிக்கு நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு 12 முதல் 15 மருத்துவர்கள் குழுவை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், மருத்துவர்கள் அளித்த பதிலில், “குறைந்தபட்சம் 30 பிரதிநிதிகள் அடங்கிய குழுவை சந்திக்க அனுமதிக்க வேண்டும். முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும்.

வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, இந்த நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். பெண் மருத்துவர் கொலையில் தொடர்புடைய மற்றும் ஆதாரங்களை அழித்த அனைவரையும் தண்டிக்க வேண்டும். மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொல்கத்தா காவல் ஆணையர் வினீத் கோயல் மற்றும் சுகாதார துறை செயலர் நாராயண் ஸ்வரூப் நிகாம் உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும்’ என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜி: வங்கதேசத்தை போல மேற்கு வங்கத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என நினைத்தார்கள்..!

பெண் மருத்துவர் கொடூர கொலை விவகாரம் தொடர்பான போராட்டங்களுக்கு பின்னால் பாஜகவின் சதி இருப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் கொடூரமாக கொல்லப்பட்டதை கண்டித்து, ஜூனியர் மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுப்பதை தடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில், தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிர்வாக ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசுகையில், இந்த சம்பவத்தில் விசாரணை உட்பட அனைத்தும் முறைப்படி நடந்திருக்கிறது. கொலையான பெண் மருத்துவரின் பெற்றோரை நேரில் சந்தித்து நான் ஆறுதல் கூறியிருக்கிறேன்.

அப்போது அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொள்ள நான் நிர்பந்தித்ததாக குற்றம் சாட்டுகின்றனர். இது முழுக்க பொய் மற்றும் ஆதாரமில்லை இதன் பின்னால் பெரிய சதி உள்ளது. இந்த போராட்டத்தை தூண்டி விடப்பட்டதன் பின்னணியில் பாஜகவின் சதி மற்றும் இடதுசாரிகளின் சதியும் உள்ளது. வங்கதேசத்தை போல மேற்கு வங்கத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என சிலர் நினைத்தார்கள்.

இந்தியாவும் வங்கதேசமும் வேறு வேறு என்பதை அவர்கள் அறிய வேண்டும். ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு விரைவில் பணிக்கு திரும்ப வேண்டும். நீங்கள் ஏதாவது சொல்ல விரும்பினால் எப்போதும் உங்களை வரவேற்கிறேன். விரைவில் துர்கா பூஜை வருகிறது. எனவே திருவிழாக்களை கொண்டாடும் மனநிலைக்கு திரும்புங்கள் என மம்தா பானர்ஜி பேசினார்.

mamata banerjee: பெண் மருத்துவர் கொலை விவகாரம் போராட்டத்தின் பின்னால் பாஜகவின் சதி இருக்கிறது..!

பெண் மருத்துவர் கொடூர கொலை விவகாரம் தொடர்பான போராட்டங்களுக்கு பின்னால் பாஜகவின் சதி இருப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் கொடூரமாக கொல்லப்பட்டதை கண்டித்து, ஜூனியர் மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுப்பதை தடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில், தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிர்வாக ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசுகையில், இந்த சம்பவத்தில் விசாரணை உட்பட அனைத்தும் முறைப்படி நடந்திருக்கிறது. கொலையான பெண் மருத்துவரின் பெற்றோரை நேரில் சந்தித்து நான் ஆறுதல் கூறியிருக்கிறேன்.

அப்போது அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொள்ள நான் நிர்பந்தித்ததாக குற்றம் சாட்டுகின்றனர். இது முழுக்க பொய் மற்றும் ஆதாரமில்லை இதன் பின்னால் பெரிய சதி உள்ளது. இந்த போராட்டத்தை தூண்டி விடப்பட்டதன் பின்னணியில் பாஜகவின் சதி மற்றும் இடதுசாரிகளின் சதியும் உள்ளது. வங்கதேசத்தை போல மேற்கு வங்கத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என சிலர் நினைத்தார்கள்.

இந்தியாவும் வங்கதேசமும் வேறு வேறு என்பதை அவர்கள் அறிய வேண்டும். ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு விரைவில் பணிக்கு திரும்ப வேண்டும். நீங்கள் ஏதாவது சொல்ல விரும்பினால் எப்போதும் உங்களை வரவேற்கிறேன். விரைவில் துர்கா பூஜை வருகிறது. எனவே திருவிழாக்களை கொண்டாடும் மனநிலைக்கு திரும்புங்கள் என மம்தா பானர்ஜி பேசினார்.

மம்தா பானர்ஜி ஆவேசம்: மேற்கு வங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினால் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரியும்..!

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின்மாணவர் அணி தொடங்கப்பட்ட தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில், கட்சித் தலைவரும், மாநிலமுதல்வருமான மம்தா பானர்ஜி கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி, ‘‘மோடி பாபு! நீங்கள்உங்களது தொண்டர்கள் மூலம் மேற்கு வங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறீர்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். மேற்கு வங்கத்தை எரித்தீர்களானால், அசாம், வடகிழக்கு மாநிலங்கள் உத்தர பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, டெல்லி ஆகிய மாநிலங்களும் பற்றி எரியும்’’ என்று ஆவேசத்துடன் பாஜகவுக்கு சவால் விடும்படி பேசினார்.

முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி பேரணி..!

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த முதுநிலை 2-ஆம் ஆண்டு பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9-ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் இந்தச் சம்பவத்துக்காக முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன. அதன் ஒரு பகுதியாக மாணவர் அமைப்பு ஒன்று இன்று ஹவுராவில் உள்ள மேற்கு வங்க தலைமைச் செயலக அலுவலகம் அமைந்துள்ள நபன்னா நோக்கி பேரணி செல்வதாக அறிவித்துள்ளன. இதனையடுத்து தலைமைச் செயலகம் அமைந்துள்ள வளாகத்தைச் சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் கொல்கத்தா காவல்துறையினரும், ஹவுரா நகர காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர். 19 இடங்களில் தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. 5 முக்கிய இடங்களில் அலுமினியம் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஹவுரா காவல்துறை, கொல்கத்தா காவல்துறையை தாண்டி அதிரடிப் படையினர், பறக்கும் படையினர், அதிவிரைவு படை எனப்படும், தண்ணீர் டேங்குகள் என பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிகளை கூடுதல் ஆணையர் அந்தஸ்தில் உள்ள காவல் உயர் அதிகாரி மேற்பார்வை செய்கிறார். ஹாஸ்டிங்ஸ், ஷிப்பூர் சாலை, ஹவுரா மேம்பாலம், ஹூக்ளி மேம்பாலம் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, நபன்னா அபிஜான் பேரணி ஒருங்கிணைப்பாளர்களுக்கு காவல்துறை விரிவான இமெயில் அனுப்பியதாக தெரிவித்துள்ளது. அதில் பேரணியில் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள். அவர்களின் பெயர்கள் என்னென்ன? பேரணியில் கலந்து கொள்ளும் முக்கியப் பிரமுகர்கள் யார்? என்றெல்லாம் தகவல் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று மாலை மேற்கு வங்க காவல்துறை, இந்தப் பேரணிக்கு அனுமதியில்லை இது சட்டவிரோதமானது என்று கூறியது. இந்நிலையில் தான் இந்தப் பேரணியில் வன்முறையை ஏற்படுத்த சதி நிலவுவதாக வெளியான உளவுத் துறை தகவல் அளித்ததை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

உளவுத் துறை தகவலின்படி இன்று கொல்கத்தாவில் கல்லூரி சதுக்கத்தில் இருந்து ஒரு பேரணியும், ஹவுராவின் சந்த்ராகச்சியில் இருந்து ஒரு பேரணியும் நடைபெறவிருக்கிறது என காவல்துறை கூறுகின்றனர். இந்தப் பேரணிகள் இன்று பிற்பகல் 1 மணிக்கு தொடங்கவிருக்கிறது. கல்லூரி சதுக்கத்திலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்து நபானா 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சந்த்ராங்கச்சியில் இருந்து நபானா 3 கிமீ தூரம். எனவே, இந்த இரு மார்க்கங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Sukanta Majumdar: மம்தா பானர்ஜியின் செல்போனை பறிமுதல் செய்து விசாரிக்க வேண்டும்..!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவரை முன் பின் தெரியாதவர்களுக்கு கூட இந்த சம்பவம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவருக்காக நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சஞ்சய் ராய்க்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணையில் தினசரி பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முக்கியமாக அந்த மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. மறுபக்கம் முதலமைச்சர் மம்தா பேனர்ஜியை கண்டிப்பவர்களுக்கு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்கள் பிரதிநிதிகள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தை கொல்கத்தா மாநில பாஜக தீவிரமாக கையில் எடுத்து அரசியல் செய்து வருகிறது. மருத்துவர் பாலியல் கொலை ஆளுங்கட்சியின் மெத்தன போக்கை கண்டித்து கொல்கத்தாவில் பாஜக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. அதில் மத்திய அமைச்சரும் பாஜக மேற்கு வங்க மாநிலத் தலைவருமான சுகந்த மஜூம்தார் கலந்து கொண்டார். அப்போது அவர் முன்வைத்த கருத்து அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுகந்த மஜூம்தார், “கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவக்கல்லூரி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் விசாரணை நடத்த வேண்டும்.

முக்கியமாக மம்தா பானர்ஜியின் செல்போனை பறிமுதல் செய்து விசாரிக்க வேண்டும். அதேபோல மாநில சுகாதாரத்துறை அமைச்சரிடமும் விசாரணை நடத்த வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி பாஜக மகளிரணி, இந்த வழக்கில் எதுவுமே செய்யாமல் இருக்கும் மாநில மகளிர் ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

அதைத்தொடர்ந்து மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 29 -ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வெளியே பாஜக சார்பில் போராட்டம் நடத்துவோம். மக்களின் போராட்டத்தை பார்த்து மாநில அரசாங்கம் பயப்படுகிறது. இதனால் மக்களின் குரலை இந்த அரசு மொத்தமாக நசுக்க நினைக்கிறது.

ஆனால், மேற்கு வங்க மக்களும் மாணவ சமுதாயமும் விழித்துக் கொண்டுள்ளனர். இந்த வழக்கை மெத்தனமாக கையாண்ட மம்தா பானர்ஜியின் ஆட்சியில் இருந்து அகற்றி, மக்கள் கங்கையில் மூழ்கடிப்பார்கள். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும்.” என கூறியுள்ளார்.

Mamata Banerjee rally: பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து படுகொலை..! குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க கோரிக்கை முழக்கம் …!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 9-ம் தேதி ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரவு பணியில் இருந்து முதுகலை 2-ஆம் ஆண்டு மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இருப்பினும் வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நேற்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கோரி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் உள்ள மவுலாலியில் இருந்து டோரினா கிராசிங் வரை கண்டன பேரணி நடந்தது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர்.