மகளிர் உரிமைத்தொகை வந்துச்சு … ஆனால் வரல… ரூ.1,000 முழுவதும் வங்கியில் அபராதமாக வசூல்..!

திருப்பூர் வஞ்சிபாளையம் முருகம்பாளையம் அருகே எஸ்.ஆர்.நகரைச் சேர்ந்த தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் மனோகரன். ஓட்டுநர் மனோகரனின் மனைவி வசந்தி இந்த தம்பதியருக்கு இரு மகள்கள். மகள்களுக்கு திருமணமான நிலையில் வசந்தி கூலி வேலைக்கு சென்றுவந்தார். இந்நிலையில் தமிழ்நாடு அரசு அறிவித்த மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்திருந்தார்.

கடந்த 14-ம் தேதி மகளிர் உரிமைத் தொகை பணம் இவரது வங்கிக் கணக்குக்கு வந்தது. இதையடுத்து, பணம் எடுக்க வங்கிக்குச் சென்றுள்ளார். அப்போது இவரது கணக்கில் ரூ.36.46 மட்டும் இருந்தது. இது தொடர்பாக வங்கியில் கேட்டால், அபராதத் தொகை என பேசி அனுப்பி வைத்துவிட்டனர்.இதனால் மகளிர் உரிமைத் தொகை பயனாளியாக இருந்தும், என்னால் அந்த திட்டத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை” என்று அவர் தெரிவித்தார்.