தொந்தரவு தாங்க முடியால்..! ஜெயிலில் கூட போடுங்கள் ஆனா அவ கிட்டமட்டும் அனுப்பாதீங்க …!

கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர், கடந்த 4.ஆம் தேதி முதல் காணவில்லை. அதையடுத்து அவரது மனைவி, தனது கணவரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில், ‘பணம் எடுப்பதற்காக ஏடிஎம்மிற்குச் சென்ற எனது கணவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை யாரோ கடத்திச் சென்று விட்டனர். அவரது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்திருந்தார். அதையடுத்து அந்தப் பெண்ணின் கணவரை நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்களை ஆய்வு காவல்துறை தேடி வந்தனர்.

இறுதியாக, நொய்டாவில் புதிய சிம் ஒன்றை வாங்கி, தனது செல்போனில் இன்ஜினியர் பொருத்தி உள்ளார். அதனால் அவரது செல்போன் மீண்டும் ஆக்டிவ் ஆனது. அதையடுத்து தனிப்படை காவல்துறை நொய்டா விரைந்தனர். நொய்டாவில் உள்ள மாலில் இருந்து வெளியே வந்த இன்ஜினியரை தனிப்படை காவல்துறை சுற்றிவளைத்து பிடித்தனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘நாங்கள் சிவில் டிரசில் இருந்தோம். அவரை சுற்றிவளைத்து பிடித்த போது, அவர் சிரித்துக் கொண்டே அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்று எங்களிடம் கேட்டார். அதற்கு நாங்கள், ‘மீண்டும் நீங்கள் பெங்களூருவுக்கு திரும்ப வேண்டும்’ என்று சொன்னோம்.

அதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர், ‘நீங்கள் என்னை சிறையில் கூட அடையுங்கள்; அங்கேயே நான் இருந்து விடுகிறேன். ஆனால் மீண்டும் வீட்டிற்கு திரும்பிச் செல்ல மாட்டேன்’ என்றார். கடைசியாக, அவரை சமாதானப்படுத்தினோம். ‘உங்களது மனைவி உங்களை யாரோ கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளதால், அந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும்’ என அவரிடம் கூறி பெங்களூரு அழைத்து சென்றனர்.

தொழிலதிபர் மீது ‘ஹேமாஸ் கிச்சன்’ பெண் உரிமையாளர் மோசடி புகார்..

சென்னை, பெங்களூரு, திருச்சி மாவட்டம் சிறுகனூர் ஆகிய இடங்களில் சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த ஹேமலதா என்பவர் ‘ஹேமாஸ் கிச்சன்’ என்ற பெயரில் உணவகங்கள் நடத்தி வருகிறார். இந்நிலையில், ஹேமலதா, திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், ‘திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள பெரியசாமி டவர்ஸ் உரிமையாளர், பெரியசாமி தங்கராஜன் என்கின்ற பி.டி. ராஜன் என்பவருக்கு சொந்தமான, சிறுகனூரில் உள்ள இடத்தில் ரூ.52 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு உணவகம் நடத்த அனுமதி கொடுத்தார். ஆனால் தற்போது, உணவகத்தை நடத்த விடாமல் அடியாட்களை வைத்து மிரட்டி வருகிறார்.

மேலும் இரண்டாவது முறையாக அடியாட்களை வைத்து உணவகத்தை பூட்டிவிட்டார். இது குறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, பி.டி.ராஜன் மற்றும் அவரது அடியாட்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

ரூ.1,000 கோடி சொத்து சேர்த்த தாசில்தார்… மிரண்டு போன பெங்களூரு..!

நாட்டில் பல மாநிலங்களில் அரசுத்துறை பணியாளர்கள் ஊழல் செய்வதை தடுக்கும் நோக்கில் லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை இயங்கி வருகிறது. அதுபோல இயக்கம் கர்நாடகாவில் இயங்கி வரும் இந்த அமைப்பு, அவ்வப்போது திடீர் சோதனைகளை நடத்தி ஊழல் செய்த அரசு அதிகாரிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து கொண்டுள்ளது.

அதன்படி, பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு அதிகாரிகள் தங்களது வருமானத்தை காட்டிலும், அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து, புகார்கள் வந்த அரசு அதிகாரிகள் பற்றிய தகவல்களை லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை சேகரித்து வந்தனர். அவர்களது சொத்து விவரங்கள் உள்ளிட்டவற்றை சேகரிக்கும் பணிகளும் நடந்து வந்தது.

இந்நிலையில், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படும் 15 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று ஒரே நாளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் பல்வேறு அதிகாரிகளின் வீடுகளில் இருந்து கட்டுக்கட்டாக பணம், குவியல், குவியலாக தங்க நகைகள், சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளது. அப்படி சிக்கிய அதிகாரிகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இதில், பெங்களூரு கே.ஆர்.புரம் தாசில்தாராக இருந்து வருபவர் அஜீத்குமார் ராய். இவரது வீடு, அலுவலகங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. கொடிகேஹள்ளி அருகே சககாரநகரில் உள்ள வீடு, சந்திரா லே-அவுட்டில் உள்ள வீடு ஆகிய இடங்களிலும் காவல்துறை சோதனை நடத்தினார்கள். அப்போது தாசில்தார் அஜீத்குமார் ராய்க்கு சொந்தமான 11 இடங்களிலும் இந்த சோதனை நடந்திருந்தது.

அப்போது தாசில்தார் அஜித்குமார் ராய் வீட்டில் இருந்து ரூ.40 லட்சம் ரொக்கம், 700 கிராம் தங்க நகைகள், 5 சொகுசு கார்கள், 2 விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள், பிரபல நிறுவனங்களின் 65 கைக்கெடிகாரங்கள், 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மது பாட்டில்கள் கைப்பற்றியது மட்டுமின்றி பல்வேறு இடங்களில் சொத்து வாங்கி அவர் குவித்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

தனது பெயரிலும், தன்னுடைய மனைவி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என பினாமி பெயர்களில் தாசில்தார் சொத்துகள் வாங்கி குவித்து இருக்கிறார். அதாவது பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவில் தற்போதைய மதிப்பு ரூ.300 கோடியில் 98 ஏக்கருக்கு நிலம் வாங்கி வைத்திருந்ததற்கான சொத்து ஆவணங்களும் சிக்கி உள்ளது.

மேலும் கல்லூரு கிராமத்தில் 30 ஏக்கர் நிலமும், பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் 18 ஏக்கருக்கு பண்ணை வீட்டை அவர் வாங்கியதும் தெரியவந்தது. அதன் மூலம் தாசில்தார் அஜித்குமார் ராய் சட்டவிரோதமாக சுமார் ரூ.1,000 கோடிக்கு சொத்து குவித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தாசில்தார் அஜித்குமார் ராய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது உறுதியானதை தொடர்ந்து தாசில்தார் அஜித்குமார் ராயை லோக் ஆயுக்தா காவல்துறை அதிரடியாக கைது செய்தார்கள்.

அஜீத்குமார் வீட்டில்: லோக் ஆயுக்தா திடீர் சோதனையில் ரூ.2½ கோடி மதிப்பு சொகுசு கார் சிக்கியது

கர்நாடக மாநிலத்தில் அரசுத்துறை பணியாளர்கள் ஊழல் செய்வதை தடுக்கும் நோக்கில் லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை இயங்கி வருகிறது. இந்த பிரிவு அவ்வப்போது திடீர் சோதனைகளை நடத்தி ஊழல் செய்த அரசு அதிகாரிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றனர்.

அதன்படி, பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு அதிகாரிகள் தங்களது வருமானத்தை காட்டிலும், அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து, புகார்கள் வந்த அரசு அதிகாரிகள் பற்றிய தகவல்களை லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை சேகரித்து வந்தனர். அவர்களது சொத்து விவரங்கள் உள்ளிட்டவற்றை சேகரிக்கும் பணிகளும் நடந்து வந்தது.

இந்நிலையில், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படும் 15 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று ஒரே நாளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இதில், பெங்களூரு கே.ஆர்.புரம் தாசில்தாராக இருந்து வருபவர் அஜீத்குமார் ராய். இவரது வீடு, அலுவலகங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. கொடிகேஹள்ளி அருகே சககாரநகரில் உள்ள வீடு, சந்திரா லே-அவுட்டில் உள்ள வீடு ஆகிய இடங்களிலும் காவல்துறை சோதனை நடத்தினார்கள். அப்போது தாசில்தார் அஜீத்குமார் ராய்க்கு சொந்தமான 11 இடங்களிலும் இந்த சோதனை நடந்திருந்தது.

அப்போது அஜீத்குமார் ராய் வீட்டில் இருந்து ரூ.40 லட்சம் ரொக்கம், 5 சொகுசு கார்கள், 10 வீடுகள் இருப்பதற்கான சொத்து ஆவணங்கள் காவல்துறையிரிடம் சிக்கியது. அவரிடம் இருக்கும் சொகுசு கார்களின் மதிப்பு மட்டும் ரூ.2½ கோடி என்று கூறப்படுகிறது. அஜீத்குமார் ராய் தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். அதனால் அங்குள்ள அஜீத்குமார் ராய்க்கு சொந்தமான வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு இருந்தது.

அவரது வீட்டில் இரவு வரை தொடர்ந்து சோதனை நடைபெற்றது. ஏற்கனவே தாசில்தார் அஜீத்குமார் ராய் முறைகேட்டில் ஈடுபட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் பணியில் சேர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.