பிறந்தநாள் கேக்கில் புற்றுநோயை உண்டாகும் செயற்கை நிறமூட்டிகள்..!

கர்நாடக மாநிலத்தில் இயங்கி வரும் பேக்கரிகளில் தயார் செய்யப்படும் கேக்குகளில் உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கிழைக்கும் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்டிருப்பதை உணவு பாதுகாப்புத் துறை ஆய்வு மூலம் உறுதி செய்துள்ளது.

மேலும் ஆஸ்துமா, அலர்ஜி மற்றும் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் இதன் மூலம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி இந்த செயற்கை நிறமூட்டிகளை சேர்த்த பேக்கரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால் அதில் நிச்சயம் கேக் வெட்டுவது வழக்கம். ஒயிட் ஃபாரஸ்ட், சாக்லேட், பட்டர்ஸ்காட்ச், வெனிலா மற்றும் பிளேக் என கேக்குகளின் பட்டியல் மிக நீண்டுகொண்டே போகும். கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் பேக்கரிகளில் விற்பனை செய்யப்படும் கேக்குகள் அடர்த்தியான நிறங்கள் கொண்ட வகையாக இருக்கும். இதனால் கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் பேக்கரிகளில் மேல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் பார்வை விழுந்தது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் பேசுகையில், “ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு வகையான உணவுகளை நாங்கள் சோதனை செய்வது வழக்கம். இந்த முறை வழக்கத்துக்கு மாறாக கேக்குகளில் இடம்பெற்றிருந்த நிறங்களை எங்களது அதிகாரிகள் கவனித்தனர். அதன்படி பல்வேறு பேக்கரிகளில் கேக்குகளின் மாதிரிகளை சேகரித்தோம். அதை ஆய்வுக்கு உட்படுத்தியதில் சிலவற்றில் அல்லுரா ரெட், சன்செட் எல்லோ எப்.சி.எப் மற்றும் கார்மோசைன் உள்ளிட்ட அபாயகரமான டைகள் பயன்படுத்தப்பட்டு இருந்தது உறுதியானது.

சம்பந்தப்பட்ட பேக்கரிகளின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில், உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டத்தின்படி இது குற்றமாகும். இதனை பேக்கரி உரிமையாளர்கள் கவனத்தில் கொண்டு விழிப்புடன் செயல்பட வேண்டும்” என கர்நாடக உணவு பாதுகாப்பு துறை ஆணையர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

உணவு பாதுகாப்பு துறையினர் சேகரித்த 235 கேக் மாதிரிகளில் சுமார் 12 மாதிரிகளில் இந்த தீங்கிழைக்கும் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டு இருப்பது உறுதியானது. இருப்பினும் இது பெரிய அளவில் இல்லாத காரணத்தால் மக்கள் பேக்கரிகளில் கேக் வாங்குவது குறித்து அச்சப்பட வேண்டியது இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொய்ப் பணம் 1.91 லட்சத்தை புற்றுநோய் பிரிவு கட்டிடத்துக்காக நன்கொடை அளித்த மணமக்கள்..!

தேனி மாவட்டத்தில் திருமணத்துக்கு வந்த மொய் பணம் அனைத்தையும், மணமக்கள் மதுரை ஐஸ்வர்யம் அறக்கட்டளை தன்னார்வ நிறுவனம், புதிதாக ஆரம்பிக்க இருக்கும் புற்றுநோய் பிரிவு கட்டிடம் கட்டுவதற்கு நிதியாக வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கல்யாணம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சியின் போது மொய் செய்யும் பழக்கம் காலம் காலமாக வழக்கத்தில் உள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களில் சுப நிகழ்ச்சிகள் வைத்து, மொய் பணத்தை சேகரித்து தங்கள் வீட்டுக்கடன், குடும்பக் கடன் போன்றவற்றை அடைப்பார்கள். மொய் செய்யும் போது 100, 500, ஆயிரம் என்று பணம் மட்டுமில்லாது தங்கம், பாத்திரங்கள், அலங்காரப் பொருட்கள் போன்ற பல்வேறு பரிசுப் பொருட்களையும் அன்பளிப்பாக தருவார்கள்.

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் திருமணத்துக்கு வந்த மொய் பணம் அனைத்தையும், மணமக்கள் மதுரை ஐஸ்வர்யம் அறக்கட்டளை தன்னார்வ நிறுவனம், புதிதாக ஆரம்பிக்க இருக்கும் புற்றுநோய் பிரிவு கட்டிடம் கட்டுவதற்கு நிதியாக வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தேனி மாவட்டம் சொக்கம்பட்டி வேல்மணி கல்யாண மண்டபத்தில் ஹரிகரன் – தேன்மொழிக்கு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் விருந்துண்டு மொய் செய்தனர்.

ஹரிகரனும் தேன்மொழியும் தங்கள் திருமணத்திற்காக இரு வீட்டு உறவினர்கள், நண்பர்கள் செய்த மொத்த மொய்ப் பணம் ரூ.1,91,698-ஐ மனமுவந்து சந்தோஷத்துடன் மதுரை ஐஸ்வர்யம் அறக்கட்டளை தன்னார்வ நிறுவனம், புதிதாக ஆரம்பிக்க இருக்கும் புற்றுநோய் பிரிவு கட்டிடம் கட்டுவதற்கு நிதியாக வழங்கி நெகிழ வைத்துள்ளனர்.

பாண்டிச்சேரி கடற்கரையில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலப்படம் ..!

வங்காள விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ள பாண்டிச்சேரி தமிழ், பிரெஞ்சு மற்றும் ஆங்கில கலாச்சாரங்களின் இணக்கமான கலவை, அழகிய கடற்கரைகளால் வரிசையாக உள்ளது. பாண்டிச்சேரியில் உங்கள் கனவு விடுமுறைக்கான அனைத்து கூறுகளும் உள்ளன. சூரியன் முத்தமிட்ட கடற்கரைகள், அமானுஷ்ய ஆசிரமங்கள், விரிவான அருங்காட்சியகங்கள், பட்டு குடும்ப பூங்காக்கள் மற்றும் புதுப்பாணியான கிளப்புகள் சுற்றுலாப் பயணிகளை மயக்கும் வில்லாக்களைக் கொண்ட பழமையான பிரெஞ்சு காலனியாகும்.

பாண்டிச்சேரியில் உள்நாடு மற்றும் வெளிநாடு பயணிகள் அதிகம் குவியும் சுற்றுலா தலமாகும். இங்கு கடற்கரை பகுதி நிறைய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இங்கு விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய் குழந்தைகள் முதல் பெரியவர் வரை வாங்கி சாப்பிடுகின்றனர். அப்படி விற்கப்படும் ’பிங்க்’ நிற பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.

புற்றுநோயை குணப்படுத்தும் அரிய கண்டுபிடிப்பு.. சாதித்த பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள்..!

கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் உயிர் வேதியியல் துறை உதவி பேராசிரியையாக கே.எம்.சாரதா தேவி மற்றும் தாவரவியல் துறை உதவி பேராசிரியராக குருசரவணன் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் செடியின் கிழங்கின் சாற்றில் இருந்து புற்றுநோயை குணப்படுத்தும் வெள்ளி நானோ துகள்களை கண்டுபிடித்துள்ளார்கள். இந்த வெள்ளி நானோ துகள் கண்டுபிடிப்பிற்காக மத்திய அரசு காப்புரிமை வழங்கி உள்ளது.

இதுகுறித்து பேராசிரியர்கள் சாரதாதேவி மற்றும் குருசரவணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தற்போது உள்ள புற்றுநோய் மருந்துகள் புற்றுநோய் பாதித்த செல்களை அழிக்கின்றன. அது மட்டுமின்றி புற்றுநோய் பாதிக்காத செல்களையும் இப்போது உள்ள புற்று நோய் மருந்துகள் அழிக்கின்றன. ஆனால் நாங்கள் செங்காந்தள் செடியின் கிழங்கின் சாற்றில் இருந்து கண்டுபிடித்துள்ள வெள்ளி நானோ துகள்கள் புற்றுநோய் பாதித்த செல்களை ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் எளிதில் கண்டறிந்து அழிக்கிறது.

இதன்மூலம் புற்றுநோயில் இருந்து மீள இந்த துகள்கள் உதவுகின்றன. மேலும் புற்றுநோய் தாக்காத செல்கள் அழிக்கப்படாமலும் இந்த வெள்ளி நானோ துகள்கள் பாதுகாக்கின்றன. முதற்கட்டமாக இந்த வெள்ளி நானோ துகள்கள் எலிக்கு செலுத்தி வெற்றி அடைந்து உள்ளோம். மனிதர்களின் பயன்பாட்டிற்கு இந்த வெள்ளி நானோ துகள்களை கொண்டு வர சில ஆண்டுகள் பிடிக்கும் என்று அவர்கள் அவர்கள் தெரிவித்தனர்.