ரூ.1,500 வட்டி கட்ட தவறியதால் பட்டியலினப் பெண்ணை நிர்வாணமாக்கி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்…

பீகார் மாநிலம், பாட்னா மாவட்டத்தில் ரூ.9,000 கடனுக்கு ரூ 1,500 வட்டி கட்டத் தவறியதால் பட்டியலினப் பெண்ணை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து டி.எஸ்.பி கூறுகையில், பெண் ஒருவர் தாக்கப்பட்டு தலையில் காயம் ஏற்பட்டு சிகிசைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. ரூ.1,500 வட்டி கட்ட தவறியதால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் கடந்த 23-ம் தேதி இரவு காவல் நிலையத்திற்கு வந்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், இரவு 10 மணியளவில் பம்பிலிருந்து தண்ணீர் எடுக்கச் சென்றபோது சுமார் ஆறு பேர் என்னைப் பிடித்து நிர்வாணமாக்கி பின்னர் கொடூரமாகத் தாக்கியதாக அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சிறுநீரை எடுத்து என் வாயில் ஊற்றினார். தலையில் காயம் அடைந்த என்னை கட்டையால் தாக்கத் தொடங்கினர். நான் எப்படியோ அந்த இடத்தில் இருந்து தப்பித்து காவல் நிலையத்தை அடைந்தேன் என்று அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார். அவரது குற்றச்சாட்டு குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர் என தெரிவித்தார்.

தூங்கிய மாணவர் மார்பில் ஏறி நின்று.. கொடூரமாக தாக்கிய பள்ளி முதல்வர்…!

பீகாரின் முங்கர் மாவட்டம், ஜமால்பூரின் ஃபரியாத்பூர் பகுதியில் அமைந்துள்ள நிர்மலா இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் பப்ளிக் பள்ளியில் கடந்த 16-ம் தேதி இரவு 10 மணியளவில் இந்த கொடூரம் நடைபெற்றுள்ளது. 12 வயதே ஆன மேத்யூ ராஜன் என்ற மாணவர் அன்றிரவு தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது பள்ளி முதல்வர் ராம்நாத் மண்டல் அங்கு வந்துள்ளார். மாணவர் அருகில் வந்த அவர், திடீரென மாணவரைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கியுள்ளார்.

அத்துடன் விடாமல், மாணவரின் மார்பிலேயே ஏறி நிற்கிறார். அவர் செய்த செயலால் மேத்யூ கத்த ஆரம்பித்துவிட்டார். அருகில் இருந்த மாணவர்களும் இந்த கொடூரத்தைப் பார்த்து மிரண்டு போய் எழுந்து உட்கார்ந்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்திற்குப் பிறகு மேத்யூவின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. தனக்கு நேர்ந்த இந்த மோசமான சம்பவத்தை அந்த மாணவர் அவரது பெற்றோரிடம் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

இந்த கொடூரம் அத்தனையும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதன் வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது. இதையடுத்து, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மேத்யூவின் தந்தை ரமேஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து பள்ளி முதல்வர் ராம்நாத் மற்றும் அவரது மனைவி நிர்மலா தேவி ஆகியோரை காவல்துறை கைது செய்தனர்.

தலித் பெண் துப்பாக்கி முனையில் ஏழு பேர் கொண்ட கும்பல் பாலியல் கொடுமை..!

இந்தியாவில் உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீகார், டெல்லி, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் ஒரு மணி நேரத்துக்கு 4 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டம் கோட்வாலி கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான இளம் பெண் ஒருவர் தனது வாழ்வாதாரத்திற்காக கால்நடைகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை கிராமத்திற்கு அருகே உள்ள வயல்வெளிக்கு தான் வளர்க்கும் மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக சென்று உள்ளார். அப்போது அங்கு வந்த ஆண் நண்பருடன் அவர் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கண்டு அங்கு வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் அந்தப் பெண்ணை வழிமறித்துள்ளனர். மேலும் அவரது ஆண் நண்பரை கொடூரமாக தாக்கி அங்கிருந்து விரட்டி அடித்ததோடு தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணை கொலை செய்து விடுவதாக மிரட்டியது மட்டுமல்லாது அவரது ஆடைகளை அகற்றுமாறு துப்பாக்கி முனையில் மிரட்டி ஏழு பேரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும், இந்த கொடூர செயலை அவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர் சிறிது நேரத்திற்கு பிறகு அந்த கும்பலிடம் இருந்து தப்பிய அந்த இளம் பெண் கிராமத்திற்குள் வந்து தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தங்களது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான அவர்கள் இது குறித்து முஸாபஹா நகர் காவல் துறையினர் புகார் அளித்தனர் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இளம் பெண்ணுக்கு துப்பாக்கி முனையில் பாலியல் தொல்லை கொடுத்த ஏழு பேரை கைது செய்துள்ளதோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.