தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க தடையை மீறியதாக சுற்றுலாத்துறை செயலர் ஆஜராக உத்தரவு..!

சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடையை மீறியதாக சுற்றுலாத்துறை செயலாளர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதாக கூறி சென்னை பட்டாசு முகவர்கள் நலச்சங்கம் சார்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஆனந்த், ‘‘யாருக்கும் டெண்டர் வழங்கப்படவில்லை என கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி நீதிமன்றத்தில் தெரிவித்த தமிழக அரசு, அக்டோபர் 14-ஆம் தேதியே டெண்டர் வழங்கப்பட்டு விட்டதாகவும், அக்டோபர் 10-ஆம் தேதியே அதற்கான தொகை பெறப்பட்டு விட்டதாகவும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது’’ என வாதிட்டார்.

அப்போது பேசிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ஏற்கெனவே டெண்டர் வழங்கப்பட்டு, பட்டாசு கடைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குறுக்கிட்ட நீதிபதி, ‘‘அப்படியென்றால் டெண்டர் இன்னும் வழங்கப்படவில்லை என ஏன் நீதிமன்றத்தில் தவறான தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடைகளை அமைக்க முடியாதா’’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘‘காரணமின்றி அரசை குறை கூறக்கூடாது. அவ்வாறு கூறினால் மவுனமாக இருக்க முடியாது’’ என தெரிவித்தார். அப்போது, நீதிபதி, பட்டாசு விற்பனை மூலமாக தனிநபர்களுக்கு செல்லும் வருமானம் அரசுக்கு கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் தானும் பேசுவதாக தெரிவித்தார். மேலும், அவமதிப்பு வழக்கில் சுற்றுலாத்துறை செயலர், சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

பட்டாசு வெடித்து காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரின் கண் பார்வை பறிபோனது..!

பட்டாசு வெடித்ததில், திருச்சி காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரின் கண்ணில் காயம் ஏற்பட்டு பார்வை பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக அதிமுக அமைப்புச் செயலாளர் உட்பட 20 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருச்சி அடுத்த திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல்வீரர், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் கூத்தை பார் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார், அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அரசு கொரடாவுமான மனோகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது அவர்களை வரவேற்பதற்காக வைக்கப்பட்ட வெடி வெடித்து பாதுகாப்பு பணியிலிருந்த திருவெறும்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியனின் வலது கண்ணில் பட்டாசு துகள்கள் பட்டு, காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்குள்ள கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பரிசோதனைக்குப் பின்னர், அவருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுப்பிரமணியன் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து திருவெறும்பூர் காவல்துறை, அதிமுக அமைப்பு செயலாளர் மனோகரன் உட்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் ராஜா, ராகவன், முகமது ரபீக் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் மற்றவர்களை தேடி வருகின்றனர்.

உயர்நீதிமன்றம் கேள்வி: மது விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா..!?

சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மீறியதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை பட்டாசு முகவர்கள் நலச் சங்கம் தொடர்ந்த வழக்கில், சுற்றுலாத் துறை செயலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா ? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்: அனைத்து விமர்சனங்களுக்கும் எனது பணிகள் மூலம் பதில் அளிப்பேன்..!

தமிழக அமைச்சரவை செந்தில் பாலாஜி உள்பட 4 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு 6 அமைச்சர்களின் இலாகாக்கள் நேற்று இரவு மாற்றம் செய்யப்பட்டது. மேலும் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, * துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு… மிகப்பெரிய பொறுப்பு அளித்துள்ள முதலமைச்சருக்கு நன்றி. * நான் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட போதும் விமர்சித்தார்கள்.

துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு… மிகப்பெரிய பொறுப்பு அளித்துள்ள முதலமைச்சருக்கு நன்றி. நான் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட போதும் விமர்சித்தார்கள். துணை முதலமைச்சராகும் எனக்கு வரும் வாழ்த்துகளை போல் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்வேன்.

எல்லா விமர்சனங்களையும், வரவேற்கிறோம், எனது பணிகள் மூலம் அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் அளிப்பேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.