கல்வி அலுவலர்களுக்கு முழு எழுத்தறிவு பெற்ற கிராம பஞ்சாயத்துகளை உருவாக்க உத்தரவு..!

அக்டோபர் – 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பாரத எழுத்தறிவு திட்ட செயல்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தவறாது மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட செயல்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் வாயிலாக 15 வயதுக்கும் மேற்பட்ட எழுதப் படிக்க தெரியாத அனைவரையும் முழுமையாக கண்டறிந்து, அவர்கள் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கிடும் செயல்பாடுகள் கடந்த ஜூலை மாதம் முதல் முன்னெடுக்கப்படுகின்றன.

மாநிலத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக விரைவில் மாற்றிட பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வது மிகவும் அவசியமான ஒன்று என்றும், இதனை கருத்தில் கொண்டு அடுத்த மாதம் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து நகர மற்றும் கிராம பஞ்சாயத்துகளிலும் நடக்கும் கிராம சபைக் கூட்டங்களில் முழு எழுத்தறிவு பெற்ற நகர, கிராம பஞ்சாயத்து என்கிற இலக்கை விரைவில் அடைவோம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இதற்கு முன்னதாக ஏற்கனவே கடந்த மாதம் நடந்த கிராம சபை கூட்டங்களில் இதே போல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், இந்த மாத கிராம சபைக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றுவதற்கான உரிய நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தவறாது மேற்கொள்ள வேண்டும். இதற்கான தொகுப்பு அறிக்கையை அடுத்த மாதம் 30-ஆம் தேதிக்குள் பள்ளிக்கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பெண்ணின் ஆபாச படங்களை அனுப்பிய வாலிபரை செருப்பால் அடித்து க்க தீர்ப்பளித்த பஞ்சாயத்து..!

உத்தரப்பிரதேசத்தின் பெரெய்லியில் 22 வயது வாலிபரும், 18 வயது பெண்ணும் உறவினர்கள். பெண்ணுக்கு வரன் பார்க்கும் இடங்களில் எல்லாம் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படங்களை அனுப்பி வாலிபர் திருமணத்தை நிறுத்தியதாக தெரிகிறது. மேலும் இளம்பெண்ணின் இந்த படங்கள் சமூக வலைதளங்களிலும் பரவி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் ஹர்டுவா கிபாயத் உல்லா கிராம பஞ்சாயத்தில் முறையிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இரு குடும்பத்தாரும் பஞ்சாயத்தார் முன்னிலையில் ஆஜரானார்கள்.

இந்த விவகாரத்தை காவல்நிலையத்துக்கு எடுத்து சென்றால் வாலிபரின் எதிர்காலம் பாதிக்கக்கூடும் என்பதால் அங்கேயே முடித்துக்கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட வாலிபரை செருப்பால் அடிக்கும் வரை அவரை மன்னிக்க மாட்டேன் என்று பாதிக்கப்பட்ட இளம்பெண் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதற்கு பஞ்சாயத்தில் ஒப்புக்கொண்ட நிலையில், சம்பந்தப்பட்ட வாலிபரும் தன்னை செருப்பால் அடிக்க ஒப்புக்கொண்டார். தொடர்ந்து இளம்பெண்ணின் தாயார் அந்த வாலிபரை செருப்பால் அடித்ததை தொடர்ந்து பிரச்னை முடித்து வைத்தனர்.