வாட்ஸ்அப் வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றிய பெண்.. தொடர்ந்து 6 நாளில் ரூ.14 லட்சம் இழந்த முதியவர்

முதியவர் ஒருவரிடம் நூதன முறையில் ஆன்லைனில் தொடர்ந்து 6 நாளில் ரூ.14 லட்சம் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த சமுதாயத்தையே உலுக்கி எடுத்து உள்ளது. இன்றைய வேகமான டிஜிட்டல் உலகில், சமூக ஊடகங்கள் நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப் பிரபலமான மெசேஜிங் ஆப்பை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதும் பல்வேறு பயனர்களை கொண்டுள்ளது.

இந்நிலையில், சமீப கலங்களாகவே சமூக ஊடகங்கள் மூலம் விதவிதமான மோசடிகள் அரங்கேறி வருகின்றன. காவல்துறையினரும் இதுபோன்ற தடுக்க இவ்வளவே முயற்சிகள் மேற்கொண்டாலும் சைபர் குற்றவாளிகள் தினுசு தினுசாக யோசித்தது குற்ற செயல்களில் ஈடுபடுவதால் மக்கள் தொடர்ந்து ஏதாவது வகையில் சிக்கி கொள்வது தொடர்ந்து அரங்கேறி வருகின்றது.

மகாராஷ்டிராவில்  சத்திரபதி சாம்பாஜி நகரை சேர்ந்த அந்த முதியவர் கடந்த மார்ச் 23 -ஆம் தேதி காலை குளியலறையில் குளித்துக் கொண்டு இருந்தபோது அவரது மொபைலுக்கு தெரியாத எண்ணில் இருந்து ஒரு வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வந்தது. அவர் அழைப்பை எடுத்தவுடன், ஒரு இளம் பெண் நிர்வாண நிலையில் அவர் முன் தோன்றினார். அந்த நேரத்தில் அந்த முதியவரும் அரை நிர்வாண நிலையில் இருந்தார். அந்தப் பெண் அந்த வீடியோ அழைப்பைப் பதிவு செய்து வைத்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து அந்த முதியவருக்கு மற்றொரு அழைப்பு வந்தது, இந்த முறை அழைத்தவரின் பெயர் ஹேமந்த் மல்ஹோத்ரா அந்த முதியவரிடம் அவரது ஆபாச வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி விட்டதாகக் கூறினார். இதன் பிறகு அழைத்த பிரமோத் ரத்தோட் என்ற மற்றொரு நபர், தன்னை ஒரு காவல் அதிகாரி என்று கூறிக் கொண்டு, முதியவருக்கு அடிக்கடி போன் செய்து, சமரசத்திற்கு உடன்படவில்லை என்றால், சிறையில் அடைப்பேன் என்று மிரட்டினார்.

முதியவரை தொடர்ந்து மிரட்டி, கொஞ்சம் கொஞ்சமாக மார்ச் 23 முதல் ஏப்ரல் 28 வரை ரூ.14 லட்சத்து 66 ஆயிரம் பணத்தை இந்த கும்பல் கரைந்துள்ளது. பணத்தை கொடுத்த பிறகும் மிரட்டல் நின்றபாடில்லை. அவர்கள் மேலும் பணம் கேட்கத் தொடங்கினர். இதனால் விரக்தியடைந்த அந்த முதியவர் இறுதியில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறை விசாரணையை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், பாட்டீல், ஹேமந்த் மல்ஹோத்ரா, பிரமோத் ரத்தோட், அரவிந்த் சிங் மற்றும் அடையாள தெரியாத 2 நபர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டதை கண்டறிந்தனர்.

அதிகாரி வீட்டு வேலைகளுக்கு வந்த பெண்ணுடன் உல்லாசம்..! பணம் கேட்டு மிரட்டல்..!

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை ரோடு பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் என்பவர் திருப்பத்தூர் தலைமை அஞ்சலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு வயதான தாயை பராமரிக்க ஆள் தேவைப் பட்டுள்ளது. “தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த செல்வி என்கிற சூசையம்மாள் என்பவர், வீட்டு வேலைகளுக்கு ஆட்கள் அனுப்பி வைப்பது போன்ற பணிகளை செய்யும் “சன் லைட் ஹோம் கேர்”என்ற ‌ நிறுவனத்தில் தொடர்பு கொண்டுள்ளார்.

இந்த நிறுவனத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மூகண்டஹள்ளி பகுதியை சேர்ந்த நளினி என்ற பெண்ணை மாதேஸ்வரன் வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். மாதேஸ்வரன் வீட்டிலேயே நளினி தங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, நளினிக்கும், மாதேஸ்வரனுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த நளினி, மகேந்திரனுடன் தனிமையில் இருக்கும் போது அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்திருக்கிறார். பின்னர் அந்த வீடியோவை “சன் லைட் ஹோம் கேர்” நிறுவனத்தின் உரிமையாளர் செல்விக்கு நளினி அனுப்பி உள்ளார்.

பின்னர் அந்த வீடியோவை மகேந்திரனுக்கு அனுப்பிய செல்வி, இந்த வீடியோ வெளியே வராமல் இருக்க வேண்டும் எனில் 5 லட்சம் ரூபாய் கேட்டு செல்வி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் பயந்து போன மாதேஸ்வரன் 2 லட்சத்து 30ஆயிரம் ரூபாயை கொடுத்ததாக தெரிகிறது.பின்னர் மீதி பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்துள்ளார் இதனால் செல்வி தொலைபேசியில் அழைத்தால் அதனை மாதேஸ்வரன் தவிர்த்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த செல்வி அதன் வீடியோவை தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஆம்பூர் பகுதி விமல் ராஜிக்கு அனுப்பி அவரிடம் பணம் கேட்கும்படி கூறியதன் காரணமாக விமல் ராஜ் மகேந்திரனுடைய வீட்டிற்கு சென்று பணம் கேட்டு உள்ளார். இதனால் பயந்துபோன மாதேஸ்வரன் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நளினி, செல்வி மற்றும் விமல்ராஜ் 3 பேரையும் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். தலைமை அஞ்சலகத்தில் கண்காணிப்பாளரை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் 2 பெண்கள் உட்பட3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கணவரை விட்டு வேறு ஒருவருடன் ஓடியதால் ஆத்திரம்….பெண்ணை நிர்வாணப்படுத்தி தெருவில் இழுத்துச் சென்ற கணவர்…

ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் மாவட்டம், தாரிவாட் கிராமத்தில் 21 வயது நிரம்பிய பழங்குடியினப் பெண் ஒருவர் கணவரை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் வீட்டார் அந்தப் பெண்ணை தங்களின் தாரிவாட் கிராமத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். பின்னர் அங்கு அவரை ஊரார் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளனர்.

அந்தப் பெண்ணை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.” என்றார். சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துக்கு முதலமைச்சர் அசோக் கெலாட், முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், வன்கொடுமையில் ஈடுபட்ட கணவர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.