தூய்மை பணியாளர் மகள் ஆணையராக பொறுப்பேற்பு..! திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து..!

தூய்மை பணியாளரின் மகள் குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று, திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக நேற்று பொறுப்பேற்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அவர்களிடம் வாழ்த்து பெற்றார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சத்தியமூர்த்தியை சேர்ந்த சேகர் மன்னார்குடி நகராட்சி தூய்மை பணியாளராக இருந்து இறந்து விட்டார். இவரது மனைவி செல்வி. வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.

இவர்களது ஒரே மகள் துர்கா. மன்னார்குடியில் உள்ள தூய வளனார் அரசு உதவி பெறும் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் +2 வரை படித்தார். பின்னர் மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டம் பெற்றார். கடந்த 2015-ல் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த நிர்மல்குமார் என்பவரை துர்கா திருமணம் செய்துள்ளார். நிர்மல்குமார், வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக உள்ளார்.

துர்கா கடந்த 2023-ல் குரூப் 2 தேர்வு எழுதி முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகளில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு நடைபெற்ற நேர்முகத் தேர்வில் 30க்கு 30 மதிப்பெண்கள் எடுத்து நகராட்சி ஆணையராக தேர்ச்சி பெற்றார். காவல்துறையின் முக்கிய பிரிவான எஸ்பிசிஐடியில் அதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பு வந்தும் தந்தை பணிபுரிந்த நகராட்சி துறையிலேயே பணிபுரிந்து அவருக்கு பெயரும், புகழும் சேர்க்க வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது. இதனால் நகராட்சி ஆணையர் பதவிக்கு விருப்பம் தெரிவித்து அதை தேர்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக துர்காவுக்கு பணி நியமன ஆணையை சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக துர்கா நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு, நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அவர்களின் அலுவலகத்தில் துர்கா நேற்று சந்தித்து புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்றார்.

மு.க. ஸ்டாலின்: கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது..! கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து..!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், டிஎன்பிஎஸ்சி மூலம் நகராட்சி நிர்வாகத்துறைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இதில், நகராட்சி ஆணையர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அதன்படி நகராட்சி ஆணையருக்கான பணி நியமன ஆணை பெற்ற துர்கா என்பவர் கூறும்போது, ‘‘தமிழக அரசின் அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தி படித்தாலே நாம் நல்ல நிலைக்கு உயரலாம். நான் அரசுப்பள்ளி, அரசுக் கல்லூரியில்தான் படித்தேன். டிஎன்பிஎஸ்சி பயிற்சியின்போதும், அரசு பயிற்சி மையத்தையும் பயன்படுத்திக் கொண்டேன். தற்போது நான் பணி ஆணை வாங்கப் போகிறேன்.

என் தந்தை மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராகதான் பணியாற்றினார். என் அப்பா நல்ல துணி போட்டதில்லை, என் வளர்ச்சிக்காக அவர் பலவற்றை இழந்தார். நல்ல உணவு கூட அவருக்கு கிடையாது. என் அப்பா, என் தாத்தா எல்லோரும் தூய்மைப் பணியாளர்களாக இருந்தார்கள். நான் இன்று நகராட்சி ஆணையராகியுள்ள நிலையில், இன்றில் இருந்து எங்கள் தலைமுறையே மாற்றம் காணப் போகிறது. இந்த வாய்ப்பை அளித்த அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி’’ என தெரிவித்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில், ‘‘நகராட்சி ஆணையராக பொறுப்பேற்கும் துர்காவின் பேட்டியை கேட்டு அக மகிழ்ந்தேன். கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்பதற்கு துர்கா எடுத்துக்காட்டு. நான் மீண்டும் சொல்கிறேன். கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து’’ என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

நகராட்சி ஆணையராகும் நகராட்சி தூய்மை பணியாளர் மகள்…!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், டிஎன்பிஎஸ்சி மூலம் நகராட்சி நிர்வாகத்துறைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இதில், நகராட்சி ஆணையர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அதன்படி நகராட்சி ஆணையருக்கான பணி நியமன ஆணை பெற்ற துர்கா என்பவர் கூறும்போது, ‘‘தமிழக அரசின் அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தி படித்தாலே நாம் நல்ல நிலைக்கு உயரலாம். நான் அரசுப்பள்ளி, அரசுக் கல்லூரியில்தான் படித்தேன். டிஎன்பிஎஸ்சி பயிற்சியின்போதும், அரசு பயிற்சி மையத்தையும் பயன்படுத்திக் கொண்டேன். தற்போது நான் பணி ஆணை வாங்கப் போகிறேன்.

என் தந்தை மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராகதான் பணியாற்றினார். என் அப்பா நல்ல துணி போட்டதில்லை, என் வளர்ச்சிக்காக அவர் பலவற்றை இழந்தார். நல்ல உணவு கூட அவருக்கு கிடையாது. என் அப்பா, என் தாத்தா எல்லோரும் தூய்மைப் பணியாளர்களாக இருந்தார்கள். நான் இன்று நகராட்சி ஆணையராகியுள்ள நிலையில், இன்றில் இருந்து எங்கள் தலைமுறையே மாற்றம் காணப் போகிறது. இந்த வாய்ப்பை அளித்த அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி’’ என தெரிவித்தார்.

துர்காவின் குடும்ப பின்னணி: “மன்னார்குடி புதுப்பாலத்தில் வசித்து வரும் துர்காவின் அப்பா சேகர், அம்மா லதா, துர்கா என எங்களோடது சின்ன குடும்பம். துர்காவின் அப்பா மன்னார்குடி நகராட்சியில் தொடக்கத்தில் ரூ.800 சம்பளத்துக்கு தூய்மைப் பணியாளராக வேலைக்கு சேர்ந்தார். துர்காவின் அப்பா, சாக்கடையில் இறங்கி வேலை செய்வதை பல முறை பார்த்து கண் கலங்கி இருக்கிறாராம்.

மன்னார்குடியில், பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு, ப்ளஸ் டூவில் பள்ளியில் முதல் மார்க் எடுத்து, மன்னார்குடி அரசுக் கல்லூரியில் சேர்ந்து கல்லூரி படிப்பை முடித்துள்ளார். குடும்பச் சூழல் காரணமாக திருமணம் முடிய, அப்பாவின் ஆசையும், என் கனவும் நிறைவேறாமல் போய்விட்டதே என்று வருந்திய நிலையில், துர்காவின் லட்சியத்தைப் புரிந்துகொண்ட அவருடைய கணவர் நிர்மல்குமார், அவருக்கு பக்கபலமாக இருந்து டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத வைத்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் வெளியான டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள துர்கா, நகராட்சி ஆணையர் பதவியைத் தேர்ந்தெடுத்துள்ளார்.