விஜய பிரபாகரன்: செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுப்பது..! கொள்ளையர் கையில் சாவி கொடுப்பது போல..!

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு தேமுதிக விஜய பிரபாகரன் விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக விஜய பிரபாகரன் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, பேசிய விஜய பிரபாகரன், ஊழல் செய்து ஜெயிலுக்கு போனவர் செந்தில் பாலாஜி. மீண்டும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுக்கக் கூடாது. செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், கொள்ளையர் கையில் மீண்டும் சாவியை கொடுப்பது போன்றது. இதில் ஏதோ டீலிங் உள்ளது போன்றுதான் அர்த்தம் என தெரிவித்தார்.

விஜய பிரபாகரன்: “மது ஒழிப்பு மாநாட்டுக்கு தேமுதிகவுக்கு அழைப்பு வந்தால் தலைமை முடிவு செய்யும் ..!”

‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரின் 146-வது பிறந்த நாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பெரியாரின் சிலைக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு, விஜய பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் விஜய பிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தேமுதிக அதிமுக கூட்டணியில் தொடரும். திமுக கூட்டணியில் 2 நாட்களில் கூட மாற்றம் ஏற்படலாம்.

தேர்தலை சந்திப்பதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் உள்ளதால், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு எனது வாழ்த்துகள். மது ஒழிப்பு மாநாட்டுக்கு தேமுதிகவுக்கு அழைப்பு வந்தால் அதில் பங்கேற்பது குறித்து தலைமை முடிவு செய்யும் என விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

விஜய பிரபாகரன்: “திமுக கூட்டணியில் இரண்டு நாளில்கூட மாற்றம் ஏற்படலாம்..!”

‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரின் 146-வது பிறந்த நாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பெரியாரின் சிலைக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு, விஜய பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் விஜய பிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தேமுதிக அதிமுக கூட்டணியில் தொடரும். திமுக கூட்டணியில் 2 நாட்களில் கூட மாற்றம் ஏற்படலாம்.

தேர்தலை சந்திப்பதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் உள்ளதால், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு எனது வாழ்த்துகள். மது ஒழிப்பு மாநாட்டுக்கு தேமுதிகவுக்கு அழைப்பு வந்தால் அதில் பங்கேற்பது குறித்து தலைமை முடிவு செய்யும் என விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

பிரேமலதா விஜயகாந்த்: தேமுதிக தொடர்ந்து மக்களுக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபடும்..!

தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் மக்களே இல்லை என்ற நிலையை உருவாக்கவும், தேமுதிக தொடர்ந்து மக்களுக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபடும் என்று தேமுதிக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

தேமுதிக தொடங்கி 19 ஆண்டுகள் நிறைவடைந்து 20-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், தொண்டர்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அதில், “தமிழகத்தில் நிலவும் மணல் கொள்ளை, மீனவர்கள் பிரச்சினை, டாஸ்மாக் கடைகளால் ஏற்படும் அவலங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பாலியல் வன்கொடுமைகள், சுங்க கட்டண உயர்வு, அண்டை மாநிலங்களுக்கு இடையே உள்ள தண்ணீர் பிரச்சினை, விவசாயம் அழிந்து பாலைவனமாக காட்சியளிக்கும் டெல்டா பகுதிகள், அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளதால் மக்கள் பயன்படுத்த முடியாத அவலம், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு போன்ற எத்தனையோ பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவற்றுக்கு தீர்வு காணவும், தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் மக்களே இல்லை என்ற நிலையை உருவாக்கவும், தேமுதிக தொடர்ந்து மக்களுக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபடும். எத்தனையோ வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள், அவதூறு வழக்குகள் வந்த போதும் பல சவால்களை சந்தித்து வீறு நடை போடுகிறது தேமுதிக.

நம் கட்சியினர் உண்மை விசுவாசத்தின் பிரதிபலிப்பாகவும், முன் எப்போதும் இருப்பதை காட்டிலும் பல மடங்கு ஒற்றுமையாகவும், உறுதியோடும் இருந்து வரப்போகும் தேர்தல்களை சந்தித்து தேமுதிக இன்று தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தி என்றும், தமிழகத்தில் யாரும் தவிர்க்க முடியாத மாபெரும் இயக்கம் என்றும், நம் உழைப்பால் மேலும் உணர்த்துவோம்.

தேமுதிக தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறது என்றால் அதற்கு முக்கியமாக சாதி, மதம், இனம் போன்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பொதுவான கட்சியாக தொடர்ந்து பாடுபட்டு வருவதே ஆகும்.

பல்வேறு வெற்றிகள், தோல்விகள், சவால்கள், எதிர்நீச்சல் போட்டு, துரோகங்கள் எல்லாவற்றையும் சந்தித்து நமது பாதையில் எத்தனையோ கற்களும், முற்களும் இருந்தாலும் எல்லாவற்றையும் கடந்து 20 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இந்த நாளில் இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே, தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்ற விஜயகாந்தின் தாரக மந்திரம் படி எட்டுத்திக்கும் நமது முரசு வெற்றி முரசாக கொட்ட அனைவரும் ஒன்றாக இணைந்து உழைப்போம்.” என பிரேமலதா விஜயகாந்த் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த்: காமராஜர் ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட ராசிமணல் அணை போர்க்கால அடிப்படை கட்டப்பட வேண்டும்..!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2 வாரங்களுக்கு முன் மேட்டூர் அணை நிரம்பிய பிறகு வெளியேற்றப்பட்ட காவிரி உபரிநீர் கடலில் கலப்பதை சாதகமாக்கிக் கொண்டு, உடனடியாக மேகேதாட்டு அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசை, கர்நாடக அரசு நிர்ப்பந்தித்து வருகிறது.

தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு கீழே புதிய அணைகள் கட்டி, உபரி நீரைத் தேக்க இயலாது. முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சியில், ராசிமணல் அருகே புதிய அணை கட்டி 63 டிஎம்சி தண்ணீரைத் தேக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இவ்வாறு தேக்கப்படும் நீரை மேட்டூர் அணை மூலமாகப் பாசனத்துக்குப் பயன்படுத்த முடியும்.

உபரி நீர் கடலில் கலப்பதை தடுக்கவும், மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியைத் தடுக்கவும் ராசிமணலில் அணை கட்ட வேண்டியது அவசியமாகும். இதற்கான பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். அனைத்து கட்சிகளும் இதை வலியுறுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.

மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72-வது பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாட்டம்

1970-களில் மதுரையிலிருந்து சினிமா ஆசையோடு சென்னைக்கு வந்து சினிமா துறையில் அடிமட்டத்தில் இருந்து போராடி வாய்ப்புகளைப் பெற்று, படிப்படியாக ஒரே ஆண்டில் 18 திரைப்படங்களில் நடித்து உச்ச நடிகராக விஜயகாந்த் விளங்கியவர். கடந்த ஆண்டு டிசம்பர் 28 -ஆம் தேதி 71 வயதில் விஜயகாந்த் மறைந்தார். தனது கொடைத் தன்மையால் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த விஜயகாந்த்தின் 72-வது பிறந்தநாள் இன்று. விஜயகாந்த் பிறந்த இன்றைய நாள் தேமுதிக சார்பில் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், கடலூர் மாவட்டம், தேமுதிக வடலூர் நகர செயலாளர் சாகிர் உசேன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக தேமுதிக மாவட்ட மாணவரணி செயலாளர் எழிலரசன் கலந்துகொண்டு சிறப்பித்தார். பின்னர் வடலூர் நகராட்சி அலுவலகம் எதிரே ஆபத்தானபுரம் மற்றும் வெங்கடகுப்பம் ஆகிய வடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேமுதிக கழக கொடி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து வெங்கடக்குப்பம் அரசு பள்ளியில் பயிலும் சுமார் 100 பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் ,பேனா வழங்கப்பட்டது. மேலும் வடலூர் பேருந்து நிலையத்தின் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகமாக தேமுதிகவினர் கொண்டாடினர்.

நிகழ்வில் வடலூர் நகரத் துணைச் செயலாளர்கள் பன்னீர்செல்வம், ஏழுமலை, கந்தன் மாவட்ட பிரதிநிதி குமரவேல், வேல்முருகன் தேமுதிக நிர்வாகிகள் சுதாகர், ரவி, சுப்பு உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சிரித்த முகத்தோடு மின்னும் விஜயகாந்த் சிலையை திறந்து வைத்த பிரேமலதா..!

விஜயகாந்த்தின் 72-வது பிறந்தநாளான இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் சிலையை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். 1970-களில் மதுரையிலிருந்து சினிமா ஆசையோடு சென்னைக்கு வந்து சினிமா துறையில் அடிமட்டத்தில் இருந்து போராடி வாய்ப்புகளைப் பெற்று, பின் படிப்படியாக ஒரே ஆண்டில் 18 திரைப்படங்களில் நடித்து உச்ச நடிகராக விஜயகாந்த் விளங்கியவர்.

150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்த், இரண்டு முறை ஃபிலிம்பேர் விருதையும், மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும் விஜயகாந்த் வென்றவர். நடிகர் சங்கத் தலைவராக திறம்படச் செயல்பட்டு, நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டு வளர்ச்சிப் பாதைக்கு விஜயகாந்த் திருப்பியவர்.

கேப்டன் என தமிழ் சினிமா கலைஞர்களாலும், ரசிகர்களாலும், பொதுமக்களாலும் அன்போடு விஜயகாந்த் அழைக்கப்படுபவர். விஜயகாந்த்தின் அலுவலகத்துக்குச் சென்றால், யார் வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் நிலையை உருவாக்கி விஜயகாந்த் வைத்தவர். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தொடங்கி அரசியலிலும் தனது வலிமையான முத்திரையைப் பதித்த விஜயகாந்த், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி 71 வயதில் விஜயகாந்த் மறைந்தார். விஜயகாந்த்தின் மறைவின் போது கலங்கிய கண்ணீர் ஒரு பேராறு. தனது கொடைத் தன்மையால் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த விஜயகாந்த்தின் 72-வது பிறந்தநாள் இன்று. விஜயகாந்த் பிறந்த இன்றைய நாள் தேமுதிக சார்பில் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து,தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் சிலையை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். விஜயகாந்த் சிலை திறப்பு விழாவில் விஜயகாந்தின் மகன்கள், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். விஜயகாந்த்தின் சிலை, சிரித்த முகத்தோடு, கையை மடக்கி வெற்றிக் குறி காட்டிய காட்டிய நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. சிலையை திறந்து வைத்த பிரேமலதா, கண் கலங்கினார்.

பிரேமலதா விஜயகாந்த் விஜய் அரசியலை சினிமா போன்று எடுத்துக் கொள்ள முடியாது…!

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, 71 டாட்டு கலைஞர்களால் 71 பேருக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்தின் முகம் கையில் டாட்டுவாக வரையும் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வு கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளது. இந்நிகழ்வை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடனான சந்திப்பு கூட்டணிக்கானது அல்ல. நட்புணர்வோடு நடைபெற்ற ஒன்று. விஜய் எங்களுக்கு புதியவர் கிடையாது. தனது கட்சியின் கொடி அறிமுகத்துக்கு முன்பாக எங்களது வீட்டுக்கு வந்து, மறைந்த தலைவர் விஜயகாந்தின் படத்துக்கு மரியாதை செலுத்தி, ஆசீர்வாதம் வாங்கி சென்றார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

விஜய் புத்திசாலியான, அமைதியான பையன். நிச்சயமாக பிரச்சினைகளை எல்லாம் சமாளிப்பார். அதேபோல விஜய் திரை உலகில் நிறைய சவால்களை சந்தித்து இருக்கிறார். ஆனால் அரசியலை சினிமா போன்று எடுத்துக் கொள்ள முடியாது. அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் யோசித்து தான் எடுத்து வைக்க வேண்டும். இது ஒரு குடும்ப சந்திப்பு போன்றுதான் எங்களுக்கு அமைந்தது என பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

பிரேமலதா விஜயகாந்த்: “பழைய பஞ்சாங்கத்தை பேசிக் கொண்டுள்ளனர் பிரதமர்..! ”

வடசென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். சென்னை கொருக்குப்பேட்டைப் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், “எதிர்கால தமிழகத்தை போதை தமிழகமாக மாற்றிய பெருமை ஆளும் திமுகவையே சாரும். போதைப்பொருட்கள் விற்பனையில் கைது செய்யப்படுபவர்கள் பலரும் திமுகவைச் சார்ந்தவர்களாக உள்ளனர். போதையில்லா தமிழகமாக மாற்றுவதே, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் இலக்கு.

இந்தப் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசுகளாக மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன. 1974-ல் முடிந்துபோன கச்சத்தீவு குறித்த விவகாரத்தை தற்போது பிரதமர் பேசிக் கொண்டிருக்கிறார். வாழ வேண்டிய மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யாமல், பழைய பஞ்சாங்கத்தை பேசிக் கொண்டுள்ளனர் என பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

பிரேமலதா விஜயகாந்த்: தேமுதிக வங்கி கணக்குகளை முடக்குவதாக பாஜக மிரட்டியது…!

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீஞ்சூரில் பிரசாரம் செய்தார். அப்போது, பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதற்காக தேமுதிகவின் வங்கி கணக்குகளை முடக்கி பாஜக அச்சுறுத்தியது.

அதிமுக அலுவலகம் சென்று கையெழுத்திடும் வரை பாஜகவிடம் இருந்து ஏகப்பட்ட நிர்ப்பந்தம் மற்றும் மிரட்டல்கள் வந்தன. அதனை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ஜெயலலிதா போல தைரியமாக முடிவெடுத்தேன். இந்த முறை அதிமுகவுடன் மட்டுமே கூட்டணி என மக்களுக்காக, தொகுதிக்காக உறுதியாக முடிவெடுத்தேன். எத்தனையோ நிர்ப்பந்தங்கள் கொடுக்கப்பட்டது. எத்தனை சோதனைகள் வந்தாலும் கேப்டனும், அவரது துணைவியாரும் அஞ்சுபவர்கள் கிடையாது. எனவே ஆளும் பாஜகவிற்கு இந்த தேர்தலில் சவுக்கடி கொடுக்க வேண்டும்.

பாமக, பாஜக நம்முடன் கூட்டணியில் இல்லாததற்கு கையெடுத்து கும்பிட வேண்டும். பாமக இருந்தால் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது. பாஜக இருந்தால் இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது. கடவுள் புண்ணியத்திலும், எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய மூன்று தெய்வங்கள் ஆசீர்வாதத்தோடு அவர்களாகவே வெளியே சென்று விட்டார்கள்.

அதிமுக-தேமுதிக கூட்டணிக்கு முன்பு வரை 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் வந்த நிலையில் தற்போது, அதிமுக-தேமுதிக கூட்டணி 30 தொகுதிகளை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகிறது. தேமுதிக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். துளசி கூட வாசம் மாறும், தவசி வார்த்தை மாறாது என பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.