டம்மி துப்பாக்கி, அட்டகத்தி, அரசியல் மக்கு ஒன்னு மேடைல ஹா, ஹுனு கத்திக்கிட்டு இருக்கு என தவெக தலைவர் விஜய்யை திண்டுக்கல் லியோனி கடுமையாக விமர்சனம் செய்தார். சென்னை திருவான்மியூரிலுள்ள ஸ்ரீஇராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நன்றியுரை ஆற்றிய விஜய் திமுக ஆட்சியை, தமிழக முதலமைச்சரை, மத்தியில் ஆளும் பாஜகவை விமர்சித்துப் பேசினார். இந்த விஜய்யின் விமர்சனங்களுக்கு பாஜக மற்றும் திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், திருசெங்கோட்டில் திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 72 – வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் K. S. மூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாலர் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு பேசினார். அப்போது, டம்மி துப்பாக்கி, அட்டகத்தி, அரசியல் மக்கு ஒன்னு மேடைல ஹா, ஹுனு கத்திக்கிட்டு இருக்கு. காலைல நாய் ஒன்னு சூரியன் பின்னாடி இருக்கிறது.
தெரியாம நின்று, தனது நிழல் பெருசா தெரியறத பார்த்து “ஆ நாமதான் பெரிய ஆள், 2026 -ஆம் ஆண்டு நாம்தான் என கத்திக்கிட்டு இருக்கு.நேரம் ஆக ஆக சூரியன் மேல வந்தா, அந்த நாயோட நிழல் கூட தெரியாது. சூரியன் பவரை காட்டினா நம்ம இருக்கிற இடம் தெரியாம போய்டுவோம் என திண்டுக்கல் லியோனி கடுமையாக விமர்சித்துள்ளார்.