176 நாட்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை ..!

சிபிஐ வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் லுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அரவிந்த் கேஜ்ரிவால் ஆட்சி செய்து வருகிறது. டெல்லி அரசு, மதுபான விற்பனையை தனியாரிடம் வழங்க ஏதுவாக 2021-22 நிதியாண்டுக்கான புதிய மதுக்கொள்கையை கொண்டு வந்தது. இதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு கடந்த 2022 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் அமலாக்கத் துறை 2 குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதுவரை டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்து செய்யப்பட்ட மதுபான கொள்கை மூலம் கிடைத்த ரூ.100 கோடி லஞ்சப் பணத்தை, அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மிகட்சி கோவாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியதாக ஒரு குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டிருக்கது.

இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு, பல முறை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியும் அர்விந்த் கேஜ்ரிவால் சம்மனை வாங்க மறுத்தார். கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி இரவு 9 மணி அளவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது.

இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் 20-ஆம் தேதி டெல்லி விசாரணை நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய நிலையில், அந்த ஜாமீனை ரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தின் நாடிய அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த ஜூலை மாதம் 12-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. வழக்கிலிருந்து ஜாமீன் கிடைத்த போதிலும் அவர் சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. காரணம் மதுபான கொள்கை ஊழல் வழக்கை கையில் எடுத்த சிபிஐ, ஜூலை 2-வது வாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தனர். இதனால் ஜாமின் கிடைத்தும் அவர் சிறையிலேயே இருந்து வந்தார்.

அதேநேரம், சிபிஐ கைதை எதிர்த்தும், ஜாமின் வழங்க கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த் , உஜ்சல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு பல நாட்களாக விசாரித்து வந்தது. இந்த வழக்கு விசாரணை கடந்த 5-ஆம் தேதி விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் இன்றைய தினம் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது சிபிஐயின் அவசர அவசரமான நடவடிக்கையாக இருக்கிறது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஏற்கனவே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த ஜூலை மாதம் 12-ஆம் தேதி வழங்கிய ஜாமின் தீர்ப்பின் அடிப்படையில் சிபிஐ தொடர்ந்த வழக்கிலிருந்தும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர். அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கைது செய்த இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்துள்ளதால் கெஜ்ரிவால் 176 நாட்களுக்கு பிறகு விடுதலை ஆகிறார். ஐந்து மாதங்களுக்கு பிறகு டெல்லி திகார் சிறையில் இருந்து இன்று மாலை அரவிந்த் கெஜ்ரிவால் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Sunita Kejriwal: ‘‘திகார் சிறையில் இன்சுலின் வழங்காமல் கெஜ்ரிவாலை கொல்ல சதி’’

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்டு முதலமைச்சர ஹேமந்த் சோரன் ஆகியோர் கைதை கண்டித்து I.N.D.I.A. கூட்டணி கட்சியின் கூட்டம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த ராகுல் காந்தி திடீர் உடல்நலக்குறைவால் கூட்டத்தை தவிர்த்துள்ளார். இதனை அறிவித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “ராகுல் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவரால் இன்று டெல்லியை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. அதேநேரத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டத்தில் பங்கேற்பார்” என தெரிவித்திருந்தார்.

I.N.D.I.A. கூட்டணி சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, பஞ்சாப் முதலமைச்சர் பகவந் சிங் மான், அர்விந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா பேசுகையில், “சிறையில் கெஜ்ரிவால் சாப்பிடும் ஒவ்வொரு சோறும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. குற்றத்திற்கான ஆதாரம் இல்லாமல் கெஜ்ரிவாலை சிறையில் அடைத்தது சர்வாதிகாரம். கெஜ்ரிவாலையும், ஹேமந்த் சோரனையும் சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படாமலேயே சிறையில் அடைத்துள்ளனர். இது ஒரு சர்வாதிகாரம். என் கணவரின் தவறு என்ன? நல்ல கல்வி, சுகாதார வசதிகளை வழங்கியதா?.

தேசபக்தி அவரது இரத்தத்தில் உள்ளது. அவர் ஒரு முன்னாள் ஐஐடி மாணவர். அவர் நினைத்திருந்தால் வெளிநாடு சென்றிருக்கலாம். ஆனால் அவர் தேசபக்திக்கு முன்னுரிமை கொடுத்தார். ஐஆர்எஸ் ஆக இருந்த அவர் பொது சேவை செய்ய பணியை ராஜினாமா செய்தார். தற்போது மக்களுக்காக தனது உயிரைப் பணயம் வைத்துள்ளார்.

கெஜ்ரிவாலுக்கு அதிகார ஆசை இல்லை. அவர் நாட்டுக்கு சேவை செய்யவே விரும்புகிறார். என் கணவர் சிங்கம். சிறையில் இருக்கும்போதும் நாட்டைப் பற்றி அவர் கவலைப்படுகிறார். கெஜ்ரிவால் ஒரு சர்க்கரை நோயாளி. அவர் கடந்த 12 ஆண்டுகளாக தினமும் 50 யூனிட் இன்சுலின் எடுத்து வருகிறார். ஆனால் அவருக்கு திகார் சிறையில் இன்சுலின் வழங்கப்படவில்லை. ஏனெனில் அவரை கொல்ல விரும்புகிறார்கள்” எனசுனிதா கெஜ்ரிவால் பேசினார்.

Kalvakuntla Kavitha: சிபிஐ கஸ்டடி கிடையாது…! பாஜக கஸ்டடி..!

டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கல்வகுண்ட்ல கவிதாவை அமலாக்கத்துறை கடந்த மாதம் 15-ம் தேதி கைது செய்தது. இதையடுத்து கல்வகுண்ட்ல கவிதா நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், அவரை கைது செய்த சிபிஐ 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. காவல் முடிவடைந்த நிலையில் கே.கவிதா டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்து மீண்டும் கல்வகுண்ட்ல கவிதா திகார் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,‘‘இந்த விவகாரத்தில் பாஜக வெளியில் என்ன பேசுகிறதோ அதனை தான் சிபி.ஐ தரப்பில் நீதிமன்றத்தில் வாதங்களாகவும் கேள்வியாகவும் முன்வைக்கப்படுகிறது. உன்மையை சொல்ல வேண்டுமென்றால் இது சிபிஐ கஸ்டடி கிடையாது. பாஜக கஸ்டடியாகும் ஆகும் என கல்வகுண்ட்ல கவிதா தெரிவித்தார்.

ரகசியங்களை அவிழ்த்துவிட்டால் எடப்பாடி பழனிச்சாமி திகார் சிறையில்..!

வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டிசம்பர் 26-ம் தேதி முதல் ஜனவரி 24-ம் தேதி வரை மாவட்டங்கள் வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தனது சுற்றுப்பயணத்தை நேற்று கோயம்புத்தூரிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தொடங்கினார். கோவை மாவட்டம் கோயம்புத்தூரில் தனது ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், கழகத்தின் பொருளாளராக 12 ஆண்டுகள் இருந்தவன் நான். எங்களை கழகத்தில் இருந்து வன்முறையாக வெளியேற்றிவிட்டனர். வி.கே. சசிகலா உங்களுக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்தார்கள். அவர்களை நீங்கள் என்ன வார்த்தையில் பேசினீர்கள்?. 11 எம்.எல்.ஏ ஆதரவுடன் இருந்த நான் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்து இருந்தால் ஆட்சி போயிருக்கும். நான் ஆதரவு கொடுத்ததால் ஆட்சியும், கட்சியும் காப்பாற்றப்பட்டது. தவறான வழியில் சென்றபோது எச்சரித்தேன். ஆனால் அதிகார போதை, பணத் திமிரில் எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். அதனால் ஆட்சி போனது.

அடுத்தடுத்து தேர்தல்களிலும் தோற்றுப்போனதால் மக்கள் உங்களை ஏற்கவில்லை என்றுதானே அர்த்தம். அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்களாக வர இருத்தை தடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. தனிக்கட்சி துவங்கும் நோக்கமில்லை. கோரப் பிடியில் இருந்து அதிமுகவை கைப்பற்றி மீண்டும் எம்.ஜி.ஆர், ஜெ. ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மாவிடம் ஒப்படைத்தால்தான் நன்றியாக இருக்கும்.

முதலமைச்சர் பதவி மூன்று முறை கொடுத்தார்கள். நான் திருப்பி கொடுத்துவிட்டேன். என்னை யாரும் துரோகி என்று சொல்ல முடியாது. நாங்கள் செய்த குற்றம் என்ன? இன்னமும் கட்சி தொண்டர்களின் உரிமைக்காக பாடுபட்டு வருகின்றேன். ஆட்சியில் இருந்தபோது கோப்புகள் என்னிடம் வந்துதான் செல்லும். அந்த ரகசியங்களை நான் அவிழ்த்துவிட்டால், எடப்பாடி பழனிச்சாமி திகார் சிறைக்குதான் செல்ல வேண்டும். இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் என தெரிவித்தார்.