சிம் கார்டு தவறாக பயன்படுத்தியதாக மிரட்டி ரூ.50 லட்சம் பறிப்பு..! தொடர் மிரட்டலில் தற்கொலை வயதான தம்பதியினர்..!

சிம் கார்டு தவறாக பயன்படுத்தியதாக மிரட்டி ரூ.50 லட்சம் பறித்தது மட்டுமின்றி மீண்டும் பணம் கேட்டு தொடர் மிரட்டல் விடுததால் மன உளைச்சலுக்கு ஆளான வயதான தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக சைபர் மோசடி நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சைபர் மோசடிகளில் பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சைபர் மோசடிகளில் பாதிக்கப்படும் இவர்கள் சைபர் மோசடி கும்பலின் மிரட்டல் தாங்கமுடியாமல் இறுதியில் தற்கொலை ஒன்றே இதற்கு தீர்வு என்று விபரீத முடிவுகளை எடுத்து அவர்களின் உயிரை மாய்த்து கொள்கின்றனர்.

ஆன்லைனில் யாரையும் கைது செய்ய முடியாது. எனவே நீங்கள் கைது செய்யப்பட இருப்பதாக யாராவது தொலைபேசி மூலம் கூறினால் தயவு செய்து பீதி அடைய வேண்டாம் என சைபர் கிரைம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில், கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் டியோக்ஜெரோன் சாந்தன் நாசரேத் மற்றும் அவரது மனைவி ஃபிளேவியானா ஆகியோர் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

இந்நிலையில், அவர்களது வீட்டில் இருவரும் உயிரிழந்து கிடந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது டியோக்ஜெரோன் தனது கைப்பட எழுதிய தற்கொலை கடிதத்தை காவல்துறை கண்டுபிடித்தனர்.

அந்த கடிதத்தில், “இப்போது எனக்கு 82 வயது, என் மனைவிக்கு 79 வயது. எங்களை பார்த்துகொள்ள யாரும் தேவையில்லை. சுமித் பிர்ரா மற்றும் அனில் யாதவ் ஆகிய இருவர் நபர்கள் எங்களை தொடர்பு கொண்டு அவரது சிம் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி எங்களது சொத்து மற்றும் நிதி விவரங்களை கோரியுள்ளனர். இந்த விவகாரத்தில் இருந்து கைது செய்யாமலிருக்க அதிக பணம் செலவாகும் என மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த மிரட்டலுக்கு பயந்து டியோக்ஜெரோன் சாந்தன் நாசரேத் ரூ.50 லட்சத்திற்கும் மேல் பணத்தை கொடுத்துள்ளார்.

சுமித் பிர்ரா மற்றும் அனில் யாதவ் ஆகியோர் பணம் பெற்று கொண்டு கூடுதலாக பணம் கேட்டு டியோக்ஜெரோன் சாந்தன் நாசரேத் தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் இவர்களின் தொந்தரவு தாங்க முடியவில்லை. ஆகையால், யாருடைய தயவிலும் நாங்கள் வாழ விரும்பவில்லை,

அதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு டியோக்ஜெரோன் சாந்தன் நாசரேத் மற்றும் அவரது மனைவி ஃபிளேவியானா இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். தற்கொலை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சுமித் பிர்ரா மற்றும் அனில் யாதவ் ஆகியோர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் சைபர் மோசடி பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் திருமணம் செய்த பியூட்டி பார்லர் பெண்ணின் கணவன் தற்கொலைக்கு ஆன்லைன் சூதாட்டம் காரணமா ..?

திருச்சி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த BSNL ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

உலகெங்கிலும் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கேமிங்கின் வருவாயை உருவாக்குவதற்கும் வேலைகளை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும் அதே வேளையில், பணமோசடி, மேட்ச் பிக்ஸிங் போன்ற பல சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான வழிகளையும் செய்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல் நாடெங்கும் ஆன்லைன் சூதாட்டத்தால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது மிகுந்த வேதனை ஏற்படுகிறது. இந்நிலையில், காதல் திருமணம் செய்த BSNL ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் மீண்டும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி வடக்கு தாராநல்லூர் அருகே அம்மன் ஸ்டோர் பகுதியை சேர்ந்த பட்டு முத்துவின் மகன் கனகராஜ் BSNL -னில் டவர் பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனலட்சுமி என்ற பெண்ணை காதலித்து கடந்த 9 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை தொடர்ந்து இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். திருமணத்துக்கு பிறகு தனலட்சுமி அருகிலுள்ள பகுதியில் பியூட்டி பார்லர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். வழக்கம் போல் நேற்று முன் தினமும் தனலட்சுமி வேலைக்கு சென்றுவிட்டார்.

அப்போது வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்த போது கணவர் கனகராஜ் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தனலட்சுமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கனகராஜை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்தனர். இதையடுத்து, கணவர் உடலை பார்த்து தனலட்சுமி கதறி அழுதார்.

பின்னர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் காவல்துறை கனகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தினர். இதில் முதற்கட்டமாக அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. அதாவது கனகராஜுக்கு நீண்ட நாட்களாகவே ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாகவும், அதில் அதிகளவில் பணத்தை இழந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கனகராஜ் மன உளைச்சலில் இருந்ததாகவும், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் காவல்துறை கனகராஜ் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தான் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.