செங்கோட்டையன்: எடப்பாடி பழனிசாமி ஆடு, ஓநாய் குறித்து…! அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்..!

‘ஆடு, ஓநாய் ஒன்றுபட்டு இருக்க முடியாது என்ற அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் கருத்து குறித்து அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்’ என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றார். அவரது தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தி இனிப்பு வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “அதிமுக பொதுச்செயலாளர், எதிர்கட்சித்தலைவரின் ஆணைப்படி, ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெறுகிறது. பொதுவாக, ஜெயலலிதாவின் நினைவு நாளில், அனைவரும் சென்னை சென்று அஞ்சலி செலுத்துவோம். இந்த முறை ஜெயலலிதா பிறந்தநாளை, அந்தந்த பகுதிகளில் மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் கொண்டாடி வருகிறோம்” என செங்கோட்டையன் தெரிவித்தார்.

மேலும் ‘ஆடு, ஓநாய் ஒன்றுபட்டு இருக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி கூறியது’ குறித்து’ செய்தியாளர்கள் கேட்டபோது, ‘ஆடு, ஓநாய் குறித்து அவர் சொல்லியிருக்கிறார். அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்’ என செங்கோட்டையன் பதில் அளித்தார்.

விடாமல் முயன்ற திண்டுக்கல் சீனிவாசன்..! டென்ஷன் ஆன எடப்பாடி பழனிசாமி..!

திண்டுக்கல் சீனிவாசனிடம் இதெல்லாம் ஏன் என்ற தொனியில் மிகவும் கோபமாக எடப்பாடி பழனிசாமி அவரிடம் சைகை காட்டினார். ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் விழா இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் வாழை மரம், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. கொடி தோரணங்களும் கட்டப்பட்டு இருந்தன. எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்துக்கு வந்த போது அங்கு இருந்த தொண்டர்கள் புரட்சித் தலைவியின் புகழ் ஓங்குக, எடப்பாடி வாழ்க என கோஷங்களை எழுப்பினர்.

பின்னர், 77 கிலோ பிரமாண்ட கேக்கினை எடப்பாடி பழனிசாமி வெட்டினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கேக் வழங்கினார். பின்னர் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதிமுக சார்பு அணிகள் சார்பில் மருத்துவ முகாம், அன்னதானம் ஆகியவையும் நடைபெற்றது. இதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் அதிமுக அலுவலகத்திற்கு வந்து இருந்தனர். மேலும் தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதா உருவ படத்திற்கு மாலையிட்டு இனிப்புகள் வழங்கி அவரது பிறந்த நாளை கொண்டாடினார்.

அப்போது அதிமுக முன்னாள் அமைச்சரும் கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா புகைப்படத்தை முகப்பாக கொண்ட புத்தகம் ஒன்றை அளித்தார். முகம் மாறிய எடப்பாடி இதை கவனித்த எடப்பாடி பழனிசாமி அதெல்லாம் வேண்டாம் என்று சொல்வது போல ரியாக்ட் செய்தார். ஆனாலும் திண்டுக்கல் சீனிவாசன் விடாமல் அந்த புத்தகத்தை வழங்க வந்ததால் சற்று முகம் மாறிய எடப்பாடி பழனிசாமி, புத்தகத்தை வாங்கி அருகில் இருந்த கேபி முனுசாமியிடம் ஒப்படைத்தார். திண்டுக்கல் சீனிவாசன் ஏதோ சொல்லவர அதையும் காதில் போட்டுக்கொள்ளாததை போல அங்கிருந்து சட்டென நகர தயாரானார். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எடப்பாடி பழனிசாமி: சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமைத்து வியத்தகு வெற்றியை பெறுவோம்..!

அதிமுக தலைமையில் வெற்றிக் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்போம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை இதயத்தில் கொண்டு வாழ்ந்து வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் என் அன்பு வணக்கம். நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடும் இந்த வேளையில், அவரது புகழ் ஓங்குக என்ற வாழ்த்தொலி நம் உள்ளத்திலும், இல்லத்திலும் எதிரொலிக்கிறது.

பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையிலும், எல்லா நேரத்திலும் தாயாகவும், சகோதரியாகவும், உற்ற தோழமை கொண்டும், தனி வாழ்விலும், பொது வாழ்விலும் இமயம்போல் உயர்ந்து விளங்கிய ஜெயலலிதா ஒரு நாளின் ஒவ்வொரு நிகழ்விலும், நகர்விலும் தமிழ் நாட்டு மக்கள் நினைத்துப் பார்க்கின்றார்கள். அவருடைய அரசு எவ்வளவு எளிமையாகவும், மக்களின் தேவை அறிந்தும் நடைபெற்றது என்பதையும்; இன்றைய இருள் மிகுந்த விடியா திமுக அரசு எப்படியெல்லாம் மக்களை அலைக்கழித்து, அஞ்சி, அஞ்சி வாழச் செய்கிறது என்பது பற்றியும், தமிழ் நாடு முழுவதும் மக்கள் பேசுகிறார்கள்.

எப்போது தேர்தல் வரும்,ஜெயலலிதாவின் அரசை எப்போது மீண்டும் அமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்று மக்கள் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். மிகச் சிறந்த நிர்வாகியாகவும், மத்திய-மாநில உறவுகளை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதில் தெளிவான சிந்தனையும், செயல் திட்டமும் கொண்டவராகவும், தமிழ் நாட்டின் உரிமைகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தவர்.

பெண் கல்வி, பெண் விடுதலை, பெண்களுக்கு சம உரிமை, பெண்களின் பாதுகாப்பு, பெண்களுக்கான சமூக, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் தனி கவனம் செலுத்திய நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பெண்களுக்காகவும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் கொண்டு வந்த அற்புதமான திட்டங்களையெல்லாம் இந்த விடியா அரசு சீர்குலைத்து நிறுத்திவிட்டது.

தமிழ் நாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெற்ற நேரத்தில் எல்லாம், காங்கிரஸ்-திமுக கூட்டணியின் மத்திய அரசு நிதி நெருக்கடியைக் கொடுத்தும்; மாநில அரசின் கோரிக்கைகளை கிடப்பில் போட்டும் இம்சை அரசாக இருந்ததை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சிக் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, ஜெயலலிதாவின் அரசை நிதி நெருக்கடிக்குத் தள்ளி, நிலைகுலையச் செய்ய வேண்டும் என்ற கெடுமதியுடன், திமுக அங்கம் வகித்த மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டது.

இருந்தபோதிலும், தனது நிர்வாகத் திறமையால் அனைத்து சவால்களையும் சமாளித்து ஏராளமான நலத் திட்டங்களை தமிழ் நாட்டு மக்களுக்கு வழங்கியவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அம்மா அவர்களின் நல்லாசியோடு செயல்பட்ட கழக அரசும் அந்த முயற்சியில் தொய்வின்றி செயலாற்றியது. இன்றைக்கு, விடியா திமுக அரசு இருமொழிக் கொள்கையை காப்பாற்றக்கூட திறனற்றதாக உள்ளது. மிகப் பெரிய எண்ணிக்கையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்தாலும், தமிழ் நாட்டின் உரிமைகளைக் காப்பாற்றுவதற்கு திறனற்ற அரசாக இருந்து கொண்டிருக்கிறது.

பொழுது விடிந்து, பொழுது போனால், தமிழ் நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும். தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலையும், பாலியல் வன்கொடுமைகளும் அரங்கேறிய வண்ணம் உள்ளன. நான்கு திசைகளிலும் தினந்தோறும் கள்ளச் சாராயம், போதைப் பொருள் புழக்கம், வெட்டு, குத்து, கொலை என்று சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. உண்மைகளை எடுத்துச் சொல்வோருக்கு வாய்ப் பூட்டு போடப்படுகிறது.

இந்த அவலங்களை எல்லாம் மாற்ற வேண்டும்; தமிழ் நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ வேண்டும்; தமிழ் நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என்றால், அதற்கு ஒரே தீர்வு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் நல்லாட்சிகளைப் போல, மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைய வேண்டும். நான் செல்லும் இடங்களில் எல்லாம் வெள்ளம்போல் திரண்டு வரும் கழக உடன்பிறப்புகளையும், தமிழ் நாட்டு நலன் நாடும் மக்களையும் பார்க்கையில், கழக ஆட்சியே அடுத்து மலரப்போகும் நல்லாட்சி என்ற நம்பிக்கை என்னுள் ஆழமாக வேரூன்றி இருக்கின்றது.

இன்றைக்கு, நம்முடைய கழகம் கொள்கை வீரர்களின் கூடாரமாகத் திகழ்கிறது. பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் கழகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாராகி இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல் கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன. ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா ? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது, முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது.

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் உண்மையான மக்கள் இயக்கம்; மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இயக்கம்; இந்த இயக்கம் இருக்கின்றவரை, நான் இருக்கின்றவரை இந்த இயக்கம் தமிழர்கள் வாழ்வு வளம்பெற செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று ஜெயலலிதா சூளுரைத்தார்.

அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள் தான் ஜெயலலிதா பிறந்தநாள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம்.

அதற்கேற்ப அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்! என்று அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். “நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ்! வாழ்க புரட்சித் தலைவி அம்மாவின் புகழ்! வெல்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அட்டாக் விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா..!?

ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா ? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா ? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக தலைமையில் சிறப்புமிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது என்று கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, பணத்திற்காக பதவிக்காக கட்சியை காட்டிக் கொடுக்க தயாராக இருந்ததாகவும் விமர்சித்துள்ளார்.

கடந்த வாரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எந்த நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணையத் தயார் என்று அறிவித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில், திடீரென ஓபிஎஸ் இப்படி அறிவித்தது பேசு பொருளாகியது.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெண்களுக்காகவும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் கொண்டு வந்த அற்புதமான திட்டங்களையெல்லாம் இந்த அரசு சீர்குலைத்து நிறுத்திவிட்டது.

இந்த அவலங்களை எல்லாம் மாற்ற வேண்டும். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ வேண்டும். தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும். இன்றைக்கு, நம்முடைய கழகம் கொள்கை வீரர்களின் கூடாரமாகத் திகழ்கிறது. பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் கழகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாராகி இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா ? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா ? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது, முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது. “அதிமுக தான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இயக்கம். இந்த இயக்கம் இருக்கின்றவரை, நான் இருக்கின்றவரை இந்த இயக்கம் தமிழர்கள் வாழ்வு வளம்பெற செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும் என்று ஜெயலலிதா சூளுரைத்தார்.

அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள்தான் ஜெயலலிதாவின் பிறந்தநாள். அதிமுக தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம். அதற்கேற்ப அயராது உழைப்போம். ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம் என்று அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள் உள்பட 465 பொருட்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பா..!?

கர்நாடகா மாநில கருவூலத்திலுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகள், அசையா சொத்து பத்திரங்கள் 27 கிலோ தங்க நகைகள் உள்பட சுமார் 465 பொருட்களை தமிழக அரசிடம் இன்று கர்நாடகா ஒப்படைக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துகளை குவித்ததாக 1996-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்த போது 11,344 புடவைகள், 750 ஷூக்கள், 91 வாட்ச், 27 கிலோ தங்கம், வைர நகைகள், 700 கிலோ வெள்ளி பொருட்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, கர்நாடக சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் அவரது போயஸ் தோட்ட வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பறிமுதல் செய்த நகைகள், பொருட்கள் அனைத்தும் கர்நாடக மாநில கருவூலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்ப்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனையையும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை 2017-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால், ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டே காலமாகிவிட்டதால் மற்ற மூவரும் 4 ஆண்டுகளுக்கு சிறை தண்டனையை அனுபவித்தனர். மேலும் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ 100 கோடி அபராதத்தை கைப்பற்ற அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட நகைகளை ஏலம் விட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மற்ற மூவருக்கும் தலா 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விடக் கோரி ராமமூர்த்தி என்பவர் மனுதாக்கல் செய்தார். அப்போது ஜெயலலிதாவின் நகைகளை கர்நாடகா அரசு ஏலம் விடுவதற்கு பதில் தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. இதற்காக தமிழக அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும், நகைகளை அவர்கள் பெற்றுச் செல்வதை பதிவு செய்ய வீடியோ, போட்டோகிராபர்கள் அனுப்ப வேண்டும் உள்ளிட்ட நீதிபதிகள் விதிமுறைகளை வகுத்திருந்தனர்.

இந்த சொத்துக்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழக அரசிடம் இந்த பொருட்களை ஒப்படைக்க இருந்த நிலையில் கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் அண்ணனின் மகள் ஜெ. தீபாவும் மகன் ஜெ. தீபக்கும் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவில் ” அத்தை ஜெயலலிதாவின் சொத்து எங்களுக்கானது” என உரிமை கோரினர். வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்திருந்தது.

இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருந்ததால் ஜெ. தீபாவின் மனுவை கடந்த ஜனவரி 13 -ஆம் தேதி கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் கர்நாடகா உயர்நீதிமன்ற உத்தரவின்படி இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களும் ஜெயலலிதாவின் நகைகள், அசையா சொத்துகளின் ஆவணங்கள் உள்பட 465 பொருட்களை உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு சரி பார்க்கப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

செல்லூர் ராஜூ விளக்கம்: எடப்பாடி பழனிசாமி vs செங்கோட்டையன் பிரச்சனை..! அண்ணன் – தம்பி பிரச்சனை..!

செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையிலான பிரச்சனை அண்ணன் – தம்பி பிரச்சனையை போன்றது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர்களான MGR மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை. அதனால் அந்த விழாவில் பங்கேற்கவில்லை என்று செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அதிமுக தரப்பில் கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் பெயரை தவிர்த்து வேறு அனைவரின் பெயர்களையும் கூறினார். அதுமட்டுமல்லாமல் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட அவரின் ஆதரவாளர்கள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நேற்று காலை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செங்கோட்டையனை மறைமுகமாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் வளர்ச்சி பணிகள் நடக்க வேண்டுமென்றால் அதிமுக இருக்க வேண்டும். ஒன்றுபட வேண்டும், வளர்ச்சி பெற வேண்டும். ஒரு சின்ன சம்பவம் நடந்துவிட்டது. ஒரு குடும்பத்தில் அண்ணன் – தம்பி இடையில் எவ்வளவு பிரச்சனைகள் வரும்.. அதன்பின்னரும் ஒன்றாக இருக்கிறார்கள். அதனால் எடப்பாடி பழனிசாமி – செங்கோட்டையன் பிரச்சனையை பெரிதுபடுத்த தேவையில்லை.

அடுத்து 202ல் சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியில் அமர்கிறோம். அதிமுகவில் எந்த உட்கட்சி விவகாரமும் தூக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின், யாராக இருந்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரியாக மாறுவேன்.. சாட்டையை சுழற்றுவேன் என்றெல்லாம் கூறினார். ஆனால் விஜய்-தான் சாட்டையை சுழற்றுவதாக போட்டுள்ளார்கள். செங்கோட்டையன் அண்ணன் எங்களின் மூத்த சகோதரர். MGR, ஜெயலலிதா காலத்தில் இருந்து அதிமுகவில் இருப்பவர். அவர் காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டாரா? ஆனால் காவலர்களை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை விட்டுவிட்டு கேட்காத ஒருவருக்கு காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ஜெயலலிதா பேசிய வீடியோவை செல்போனில் மைக் முன்பு ஓட விட்ட செங்கோட்டையன்..!

இடம் கொடுக்காத கொள்கை உறுதியும், கொண்ட தலைமை மீது விசுவாசமும் உடையவர் அன்புச் சகோதரர் செங்கோட்டையன்” என ஜெயலலிதா பேசிய வீடியோவை செல்போனில் மைக் முன்பு போட்டு செங்கோட்டையன் காட்டினார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மேற்கு ஒன்றிய பகுதியில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் 108-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்ட மேடையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் ஆகிய இருவரின் புகைப்படங்களும் பெரிதாக ஒரே அளவில் இடம் பெற்றிருந்தன. இந்த விழாவில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “தடுக்கி விழுந்தால் தமிழ்நாட்டில் யார் எந்த ஊரில் உள்ளார்கள் என எனக்கு தெரியும். எம்.ஜி.ஆருக்கு வந்த சோதனை யாருக்கும் வந்திருக்காது.

எதிர்கட்சித் தலைவரின் கட்டளையில் தான் இந்த கூட்டம் நடைபெறுகிறது. என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. நான் எத்தனை ஆண்டுகளில் அரசியல் உள்ளேன், எண்ணற்ற தலைவர்களை பார்த்துள்ளேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் காட்டிய பாதையில் நான் சென்று கொண்டுள்ளேன். செய்தியாளர்கள் என்னிடம் எதவாது கிடைக்குமா என எதிர்பார்க்கின்றனர். காலையில் சொன்னதை இப்போதும் சொல்கிறேன், நீங்கள் எதிர்பார்க்கும் எதுவும் சொல்ல மாட்டேன்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படம் இல்லை. அவர்கள் புகைப்படம் இல்லாததால் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை, நான் புறக்கணிக்கவில்லை. அதைப்பற்றி தற்போது நிறைய பேர் பேசி வருகின்றனர். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. எத்தனையோ வாய்ப்புகள் வந்த போது கட்சிக்காக பாடுபட்டவன். என்னை சோதிக்காதீர்கள். இதுதான் எனது வேண்டுகோள். நான் தெளிவாக இருக்கிறேன்.

காவல்துறை பாதுகாப்பு அவர்கள் போட்டு இருக்கின்றனர். பாதுகாப்பு கண்காணிப்பு என்பது காவல் துறை போட்டது. நான் போட சொல்லவில்லை. கோட்டைக்கு வர வேண்டும் என்றால் செங்கோட்டையனை சுற்றி வருகின்றார்கள். 43 ஆண்டு ஆட்சியில் நான் யாரையும் தவறாக பேசியதில்லை. கோபப்பட்டது இல்லை. ஜெயலலிதாவின் பணிகளை கண்கூடாகப் பார்த்தவன் நான். ஜெயலலிதா விரலை நீட்டும் போதே, அவர் கை அசைக்கும்போதே அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான். ஏன் கழற்றி விட்டார் எனக் கேட்பார்கள். அதற்கெல்லாம் காரணம் இருக்கிறது, அதையெல்லாம் சொன்னால் தவறாகப் போய்விடும்.

ஏன் செங்கோட்டையனுக்கு கட்சியில் 2 பெரிய பொறுப்புகளை தந்தேன் என ஜெயலலிதா சொன்னது இன்னும் என் நெஞ்சில் இருக்கிறது. “எந்தப் பணியைக் கொடுத்தாலும் அதை வெற்றிகரமாக முடிக்கக்கூடியவர் செங்கோட்டையன்” என ஜெயலலிதா கூறினார். தொடர்ந்து, தன்னைப் பற்றி ஜெயலலிதா பேசும் ஆடியோ ஒன்றையும் மைக் முன்பு போட்டு செங்கோட்டையன் காட்டினார். “இடம் கொடுக்காத கொள்கை உறுதியும், கொண்ட தலைமை மீது விசுவாசமும் உடையவர் அன்புச் சகோதரர் செங்கோட்டையன்.” என ஜெயலலிதா பேசிய வீடியோவை செல்போனில் மைக் முன்பு போட்டுக் காட்டினார்.

தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், “தன்னலம் கருதாமல் செயல்படக்கூடியவன் நான், இயக்கம் ஒன்றே பெரிதென நினைப்பவன். நான் என்றைக்கும் என்னை தலைவன் என்று சொன்னதில்லை. என்றைக்கும் தொண்டன் என்றுதான் சொல்லி இருக்கிறேன். அதில் இருந்து நீங்கள் என்னை புரிந்துகொள்ளலாம். மீண்டும் தமிழகத்தில் தொண்டர்களோடு தொண்டராக இருந்து பணியாற்றுவேன்” என செங்கோட்டையன் பேசினார்.

திண்டுக்கல் சீனிவாசன்: ஜெயலலிதாவின் பணத்தை வெச்சி கோடீஸ்வரர்களான குடும்பங்கள் ஆயிரம்

ஜெயலலி​தா​வின் பணத்தை வைத்து சசிகலா, டிடி​வி.​தினகரன் என ஆயிரம் குடும்​பங்கள் கோடீஸ்​வரர்​களாகி​ விட்​டனர் என அதிமுக முன்​னாள் அமைச்சர் திண்​டுக்கல் சீனிவாசன் பேசி தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நாகப்​பட்​டினம் மாவட்ட அதிமுக அலுவல​கத்​தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்​றது. இந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்​னாள் அமைச்​சர்கள் தங்கமணி, திண்​டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்​.மணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்​டத்​தில் திண்​டுக்கல் சீனிவாசன் பேசுகையில், முன்​னாள் முதல்வர் ஜெயலலி​தாவுக்கு உதவியாக வந்தவர்​கள்​தான் சசிகலா, டிடி​வி.​தினகரன் உள்ளிட்​டோர். ஆனால், அவர்​கள், அவர்​களைச் சேர்ந்​தவர்கள் என ஆயிரம் குடும்பத்​தினர் ஜெயலலி​தா​வின் பணத்தை வைத்து கோடீஸ்​வரர்​களாகி விட்​டார்​கள். அந்தப் பணத்தை வைத்​துக்​கொண்​டு​தான் சசிகலா, தினகரன் ஆகியோர் ஆட்சி​யைப் பிடிப்​போம் என்று கூறி வருகின்​றனர் என இவ்வாறு திண்​டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

ரூ. 28 கோடி லஞ்சம் வழக்கில் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!

சட்ட விரோத பணப் பரிவர்த்தனை புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதி, தஞ்சாவூர் – ஒரத்தநாடு பகுதியில் உள்ள அவரது வீடு, அவரது மகனின் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்க ரூ.27.90 கோடி லஞ்சம் வாங்கியதாக வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புதுறை வழக்கு பதிவு செய்த நிலையில், அமலாக்கத் துறையினர் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

2011 முதல் 2016 காலக்கட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். சென்னை பெருங்களத்தூரில் 2016-ல் தனியார் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு திட்ட அனுமதி கோரியபோது, அப்போது அமைச்சராக இருந்த வைத்திலிங்கத்துக்கு ரூ.27.90 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக, அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

அதில், லஞ்சப் பணம் வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முகபிரபு ஆகியோர் இயக்குநர்களாக இருக்கும் நிறுவனத்துக்கு கடனாக வழங்கப்பட்டது போல கணக்கு காட்டப்பட்டுள்ளது. அந்த பணத்தில் பல இடங்களில் சொத்துகளை வாங்கியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முகபிரபு, தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பன்னீர்செல்வம், ரமேஷ் உள்ளிட்ட 11 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிசாமி: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் இனி சேர்க்க வாய்ப்பு இல்லை..!”

கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை இனி மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லை என எடப்பாடி பழனிசாமி சரவெடி வெடித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் 53-ம் ஆண்டு ஆண்டு விழா நடைபெற்றது. அந்த வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது, அதிமுக இரண்டாகிவிட்டது, அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையை கூட இனி உபயோகிக்க வேண்டாம். பிரிந்து சென்றவர்கள் இன்று எத்தனையோ அவதாரங்களை எடுக்கிறார்கள். ஒன்றாக இருப்பதால்தான் இத்தனை பேர் இங்கு நிற்கின்றோம். அதிமுக பிரிந்து கிடக்கிறது என சொல்லாதீர்கள்.

அதிமுக ஒன்று தான். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை இனி மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லை. எங்கள் தரப்பில் இருப்பதுதான் அதிமுக. கட்சிக்கு விரோதமாக செயல்பட்டவர்கள் அனைவரும் நீக்கப்பட்டு விட்டார்கள் என எடப்பாடி பழனிசாமி சரவெடி வெடித்தார்.