உத்தர பிரதேசத்தில் பாஜக தலைமையிலான யோகி ஆதித்தியநாத் முதலமைச்சராக பதவி வகிக்கின்றார். இந்த மாநிலத்தில் அவ்வப்போது ஒடுக்கப்பட்ட பெண்கள் மீதான பாலியல் வன்மங்கள், துப்பாக்கிச் சூடுகள், கொடூர கொலைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் முன்னாள் எம்.பி. அதிக் அகம்மதுவின் மூன்றாவது மகன் அசாத் அகமது லக்னோவில் உள்ள ஒரு தனியார் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சட்டப் படிப்பை படித்து வந்தார்.
இந்நிலையில் 2005 -ம் ஆண்டு ராஜு பால் கொல்லப்பட்ட வழக்கில் சாட்சியான வழக்கறிஞர் உமேஷ் பாலை சிலர் சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கில் அதிக் அகம்மதுவின் மகன் அசாத் அகமது மற்றும் உதவியாளர் குலாம் ஹுசைன் தலைமறைவாக இருந்த நிலையில் இவர்களின் தலா ரூ.5 லட்சம் பரிசுத்தொகை அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 13 தேதி ஜான்சி மாவட்டத்தின் படகான் காவல் நிலையப் பகுதியில் உள்ள பரிச்சா அணைக்கட்டு அருகே அசாத் அகம்மது மற்றும் குலாம் ஹுசைன் ஆகியோர் கொல்லப்பட்டதாக உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படை (STF) குழு தெரிவித்தது.
இந்த பரபரப்பான சுழ்நிலையில், 100க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ள நிலையில் அதிக் அகம்மது எம்.பி. வளம் வந்தார். அதிக் அகம்மது கொல்லப்பட்ட 5 நாட்கள் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 16 தேதி முன்னாள் எம்.பி. அடிக் அகம்மதுவும் அவருடைய சகோதரர் அஷ்ரஃபும் சுட்டுக்கொலைப்பட்டார். இந்த பரபரப்புகள் இன்னும் அடங்காத நிலையில் உத்தர பிரதேசம் மாநிலம் எய்ட் என்ற நகரத்தில் தலித் மாணவி ஒருவர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் ஜலான் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரோஷினி தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எய்ட் சாலையில் சென்று கொண்டு இருந்த ரோஷினியை காலை 11 மணிக்கு அங்கு பஜாஜ் பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அந்த ரோஷினியை துப்பாக்கியால் சுட்டனர். அங்கே இருந்த மக்கள் வேடிக்கை பார்த்த நிலையில் அந்த மாணவியை துப்பாக்கி தோட்டாக்கள் சுட்டதை உறுதி செய்துவிட்டு பின்னர் அங்கிருந்து இரண்டு இளைஞர்கள் கிளம்பி சென்று உள்ளனர். இந்த சம்பவம் நடந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில்தான் காவல் நிலையம் இருக்கிறது. இந்த பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.