ஜனநாயக கடமையை நிறைவேற்றிய நெய்வேலி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன்

தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற வரும் நிலையில்மக்கள் காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் காத்து நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தனது சொந்த கிராமமான நெய்வேலி அடுத்த சொரத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடி மையத்தில் குறிஞ்சிப்பாடி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன் அவர்கள் வாக்கு செலுத்தி உனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

வடலூர் நகராட்சியில் வீதி வீதியாக நடந்து சென்று முரசு சின்னத்திற்கு, தீவிர வாக்கு சேகரிப்பு ..!

வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளிலும், கடலூர் நாடாளுமன்ற தொகுதி கூட்டணி கட்சியின் வெற்றி வேட்பாளர் சிவக்கொழுந்திற்கு, முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான சொரத்தூர். ராஜேந்திரன், வீதி வீதியாக நடந்து சென்று, முரசு சின்னத்திற்கு, வாக்களிக்க கோரி, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவ்வாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் மற்றும் அதிமுக தேமுதிக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். நிகழ்வில் வடலூர் அதிமுக நகரக் செயலாளர் சி.எஸ்.பாபு தேமுதிக நகர செயலாளர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.