சீனா திட்டவட்டம்: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் எவரையும் நாங்கள் எதிர்ப்போம்..!

சீனாவின் நலன்களைப் பாதிக்கக்கூடிய வகையில் எந்தவொரு தரப்பினரும் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை எட்டுவதை உறுதியாக எதிர்க்கிறோம்” என சீனாவின் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றது முதல் நாட்டின் முன்னேற்றத்துக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக தொடர்ந்து கூறி வரும் நிலையில், உலக நாடுகளுக்கான வரி விதிப்பை அமெரிக்காவின் விடுதலை நாளான டொனால்டு ட்ரம்ப் அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், ஜப்பான் பொருட்களின் மீது 24 சதவீதம், இந்திய பொருட்களின் மீது 27 சதவீதம், சீனா பொருட்களின் மீது 34 சதவீதம், வியட்நாம் பொருட்களின் மீது 46 சதவீதம், வங்கதேசம் பொருட்களின் மீது 37 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் பொருட்களின் மீது 20 சதவீதம், இந்தோனேசியா பொருட்களின் மீது 32 சதவீதம், பாகிஸ்தான் பொருட்களின் மீது 29 சதவீதம் மற்றும் தாய்லாந்து பொருட்களின் மீது 36 சதவீதம் என ஆகமொத்தம் 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டு உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடியாக சீனாவும் வரிகளை விதித்தது. இதனால் மற்ற நாடுகளின் வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்துவதாவும், சீனாவுக்கான வரிவிதிப்பை 245 சதேவீதமாகவும் அதிகரித்து அமெரிக்கா அறிவித்தது இதற்கு பதிலடியாக அமெரிக்காவுக்கான அரிய வகை கனிமங்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது.

இந்நிலையில், ‘சீனாவின் நலன்களைப் பாதிக்கக்கூடிய வகையில் எந்தவொரு தரப்பினரும் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை எட்டுவதை உறுதியாக எதிர்க்கிறோம்” என்று சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சீனா அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது, மேலும் பல பரஸ்பர எதிர் நடவடிக்கைகளை எடுக்கும்’ என்று தெரிவித்துள்ளது. இவ்விரு வள்ளலரசுகளின் வர்த்தக போருக்கு இடையில் மற்ற நாடுகள் இரு தரப்பில் இருந்தும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றன என்பதே உண்மை.

Gaurav Bhatia: சீனாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் இந்திய ஜனநாயகத்தை பலவீனப்படுத்த ராகுல் காந்தி முயற்சி..!

‘சீனவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்திய ஜனநாயகத்தை பலவீனப்படுத்த ராகுல் காந்தி முயற்சிக்கிறார் என பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாடிய போது, பாஜக, ஆர்எஸ்எஸ்சை விமர்சித்து பேசினார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்கவாழ் இந்தியர்களை ராகுல் சந்தித்து பேசினார்.

அப்போது, கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எனினும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் உதவியுடன், நரேந்திர மோடி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். இந்தத் தேர்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி 2024-ஆம் ஆண்டுக்கான தேர்தல் முடிவுகளைத் தங்களின் மாபெரும் வெற்றியாகக் காட்டி வருகிறது.

இந்தியப் பிரதமர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பின்பற்றவில்லை என்பதை தேர்தல்களின் போது கோடிக்கணக்கான மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் மொழி, மதம், பாரம்பரியம், சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் மரியாதை அளிக்க வேண்டும் என்று கூறுகிறது என ராகுல் காந்தி கூறினார். “நவீன இந்தியாவின் அடித்தளம் அரசியலமைப்புச் சட்டம். நமது பாரம்பரியம், மொழி, மாநிலம், வரலாறு போன்றவற்றை பாஜக தாக்குகிறது என்பதை மக்கள் தெளிவாக புரிந்துகொண்டதைத் தேர்தலின் போது பார்த்தேன்.” என ராகுல் காந்தி தெரிவித்தார்.

இது குறித்து டெல்லியில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியாவிடம் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கையில், ‘‘ராகுல் காந்தி முதிர்ச்சியற்ற, பகுதி நேர தலைவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அவரது தோளில் மக்கள் பெரும் சுமையை வைத்துள்ளனர். இந்திய ஜனநாயகத்தில் ராகுல் ஒரு கரும்புள்ளி என்பதை நான் வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன். வெளிநாட்டிற்கு சென்றால் என்ன பேசுவது என்பது கூட அவருக்கு தெரியாது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, வெளிநாடுகளில் தனது கருத்துக்களால் இந்திய ஜனநாயகத்தை பலவீனப்படுத்த ராகுல் காந்தி முயற்சிக்கிறார். நான் கூறுவது பொய் என்றால், சீனாவுடனான ஒப்பந்தத்தை ராகுலும், கார்கேவும் பகிரங்கப்படுத்த தைரியம் இருக்கிறதா?’’ என கவுரவ் பாட்டியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.