வாய் பேசாம கடனை வசூல் செய்… இல்லனா 3 வருடங்கள் சிறை தான்..!

கடனை மிரட்டி கட்டாயமாக வசூலிப்பது, குடும்பத்தினரை பின் தொடர்வது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டால் 3 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கும் சட்ட முன் வடிவை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். .

தமிழகத்தில் தற்போது தனிநபர் கடன், கடன் அட்டை எனப்படும் கிரெடிட் கார்ட், வீட்டுக் கடன், வாகன கடன், மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆகியவை கடன் பெறுவது அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் அவற்றை வசூலிப்பதில் அத்துமீறல் சம்பவங்கள் நடைபெறுவதாக அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுகிறது. குறிப்பாக குழு லோன் எனப்படும் வங்கிகளில் மற்றும் வங்கிகள் அல்லாத சிறு நிதி நிறுவனங்களில் பெண்கள் கடன் பெறுவதும் அவர்களிடம் வசூல் செய்யும் போது மரியாதை குறைவாக பேசுவது, தாக்குவது, வீட்டின் முன் அமர்வது உள்ளிட்ட செயல்களில் கடன் வசூலிப்பாளர்கள் ஈடுபடுவதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர்.

மேலும் கடன் பெறுபவர்களை வெளி ஆட்களை வைத்து வலுக்கட்டாய வசூலிப்பு நடைமுறைகளில் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் அடுத்தடுத்து புகார் அளித்தனர். இந்நிலையில், வலுக்கட்டாய கடன் வசூலிப்பு முறைகளில் இருந்து பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்கும் வகையில் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமுன்வடிவு தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு தலைமையில் சபை கூடிய நிலையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த சட்ட முன் வடிவை தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். இந்த சட்டத் திருத்தத்தின் படி,”தனிநபர்கள், தனி நபர்கள் குழு, சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றிற்கு கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பணக்கடன்கள் வழங்கும் நிறுவனங்களின் வலுக்கட்டாய வசூலிப்பு முறைகளால் பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.

இந்த சட்டத் திருத்தத்தின் படி, கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்துவைக்க குறை தீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம். கடன் வழங்கிய நிறுவனம் கடன் பெற்றவரோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது.

கடன் பெற்றவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ வலுக்கட்டாயமாக வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். வலுக்கட்டாய நடவடிக்கைகளால் கடன் பெறுபவர் அல்லது அவரது உறுப்பினர்கள் எவரேனும் தற்கொலை செய்து கொண்டால் கடன் கொடுத்த நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படுவார்கள். இச்சட்ட முன் வடிவின் படி தண்டனைக்குரிய குற்றங்களில் கைது செய்யப்படுவோர் பிணையில் வெளி வர முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்: செந்தில் பாலாஜி சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டா சிறை சென்றார்…!

செந்தில் பாலாஜி சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டா சிறை சென்றார். தியாகி என்று கூறுவதற்கு? என பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் பக்கத்தில், செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டது தற்போதைய முதல்வர்…. எதிர்க்கட்சியில் இருக்கும் பொழுது துரோகி தன் கட்சிக்கு வந்தவுடன் தியாகியா ?

சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டா சிறை சென்றார். தியாகி என்று கூறுவதற்கு? INDI… கூட்டணி இந்த ஜாமீனை கொண்டாடுகிறது இது ஜாமீன் தானே தவிர விடுதலை அல்ல .

காவல் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டுமென்று வழக்காடு மன்றம் சொன்னவரை மந்திரி ஆக்கி கையெழுத்து இட வைக்கலாமா? என சிந்திக்கிறது திமுக. முறைகேடு செய்வதில் உறுதியாக இருந்தவரை சிறையில் உறுதியாக இருந்தார் என்று பாராட்டுகிறார் முதல்வர். 471 நாட்கள் சிறையில் வைத்திருந்தது பலமுறை வழக்காடு மன்றத்தினால் ஜாமீன் மறுக்கப்பட்டதனால். மத்திய அரசினால் அல்ல .

எமர்ஜென்சி காலத்தில் கூட இந்த அடக்குமுறை இல்லை என முதல்வர் சொல்கிறார் எமர்ஜென்சி அடக்குமுறை கொண்டு வந்தவரோடு கூட்டணியில் இருந்து கொண்டு. ஆக ஒட்டுமொத்தமாக முறைகேடு வழக்கில் கைதான வரை உறுதியானவர் என்றும் பாராட்டுவது வேடிக்கை என தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சீமான் கடுமையான விமர்சனம்: செந்தில் பாலாஜி சிறை செல்ல காரணமே திமுக தான்..!

செந்தில் பாலாஜிக்கு எதிராக அதிமுக ஆட்சியில் திமுக தொடர்ந்த வழக்கில்தான், அவர் சிறை சென்று வந்துள்ளார். அவரை சிறைக்கு அனுப்பியதே திமுகதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது, “நமது நாட்டில் எதுதான் பரபரப்பு இல்லை. லட்டு பரபரப்பு. ஜிலேபி பரபரப்பு. பஞ்சாமிர்தம் பரபரப்பு. ஜாமீன் கிடைப்பது பரபரப்பு, என்று பரபரப்புக்கு பஞ்சமே இல்லை.” என சீமான் பரபரப்பாக பேசினார்.

அப்போது செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்து முதல்வர் ஸ்டாலின், தியாகம் பெரிது, உறுதி அதனினும் பெரிது என்று கூறியிருப்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, “திருடுவது, கமிஷன் வாங்குவது, லஞ்சம் பெறுவது, டாஸ்மாக் சரக்கை கூடுதலாக விலைவைத்து விற்பனை செய்வது, 10 ரூபாயைக் கூட்டி விற்பது, நேரம்காலம் இல்லாமல் விற்பனை செய்வது, கள்ளச்சரக்கு ஓட்டுவது, இவையெல்லாம் தியாகத்தில் வருகிறது. எனவேதான், அவருடைய தியாகத்தைப் போற்றியுள்ளார்.

நாட்டின் விடுதலைக்காக, வ.உ.சி போல சிறையில் செக்கிழுத்தவர்கள், 9-10 ஆண்டுகளாக சிறையில் செத்து மடிந்து, தூக்கில் தொங்கியவர்கள் நினைத்துதான் எனக்கு கோபம் வருகிறது. செந்தில் பாலாஜி பிணையில் வந்ததற்கு பெயர் தியாகம் என்றால், நம் முன்னோர்கள் செய்ததற்கு பெயர் என்ன? இந்த நாட்டில் மணல் அள்ளி விற்பது, மலையைக் குடைந்த விற்பது, சாராயம் காய்ச்சுவது எல்லாம் தியாகத்தில் வருகிறது.

வீரதீர செயல்களில் பெருமைமிக்க செயல்களில் இவையெல்லாம் வருகிறது. இந்த வழக்கை போட்டது யார்? திமுக. அதிமுக ஆட்சியில் திமுக தொடர்ந்த வழக்கில் தான் செந்தில் பாலாஜி சிறை சென்று வந்துள்ளார். எனவே, அவரை சிறைக்கு அனுப்பியவர்களும் திமுகதான். இப்போது ஜாமீனில் வரும்போது, வருக வருக, வீரதீர தியாக செயல் என்று கூறுவதும் திமுகதான்.

திமுகவில் இருந்தால் தியாகம். அடுத்தக் கட்சியில் இருந்தால் அது ஊழல் குற்றச்சாட்டாகிவிடும். அவர் அமைச்சராக எந்த தடையும் இல்லை என்பதால், திமுக அவரை மீண்டும் அமைச்சர் ஆக்குவார்கள். யார் அதிகமாக வசூலித்து கப்பம் கட்டுகிறார்களோ அவர் நல்ல அமைச்சர், அவ்வளவுதான்.” என சீமான் கடுமையான விமர்ச்சித்தார்.

சிறையில் கற்ற வித்தையை வெளியே காட்டி மீண்டும் சிறைக்கு சென்ற பலே கைதி..!

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூபேந்திர சிங் தாகாட். இவர் மீது கொலை உள்ளிட்ட 11 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் கடைசியாக சிறையில் இருந்தபோது, ​​சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்ட பிறகு சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைவதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு தொழிற்பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக ஆஃப்-செட் பிரிண்டிங் மற்றும் ஸ்கிரீன் பிரிண்டிங் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இருப்பினும், பூபேந்திர சிங் தாகாட் தனது புதிதாகப் பெற்ற அறிவை ஒரு சட்டவிரோத முயற்சியாக மாற்றினார். அக்டோபர் 2003 இல் விதிஷா, ராஜ்கர், ரைசன், போபால் மற்றும் அசோக் நகர் மாவட்டங்களின் எல்லைகளில் இருந்து அவர் ஓராண்டுக்கு வெளியேற்றப்பட்டாலும், எப்படியோ இங்கேயே தங்கி போலி நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டுள்ளார்.

இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல்துறை பூபேந்திர சிங் தாகாட்யை கைது செய்து அவரிடமிருந்து 200 ரூபாய் கள்ள நோட்டுகள் 95-ஐ பறிமுதல் செய்தனர். மேலும்தவிர, ஒரு கலர் பிரிண்டர், ஆறு மை பாட்டில்கள் மற்றும் மிருதுவான போலி நோட்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட காகிதம் ஆகியவை மீட்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.