அன்புமணி ராமதாஸ்: திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நாள் வெகு தொலைவில் இல்லை..!

கடந்த 17-ஆம் தேதி இரவு 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் செய்யப்பட்டு சிறுமிக்காக நீதிகேட்டு ஒவ்வொரு காவல் நிலையங்களின் வாசற்படி ஏறி கடைசியாக காவல் கண்காணிப்பாளருக்கு புகார் கொடுத்து நீதியை மீட்டெடுத்த பெற்றோர். இந்த சம்பவம் குறித்து அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், வேலூரில் 13 வயது சிறுமி மது போதையில் இருந்த மிருகங்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை: ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நாள் வெகு தொலைவில் இல்லை!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி அப்பகுதியைச் சேர்ந்த மது போதையில் இருந்த 3 மனித மிருகங்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. திராவிட மாடல் ஆட்சியில் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பற்ற சூழல் உருவாக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

இரவு நேரத்தில் இயற்கையின் அழைப்புக்காக வீட்டிற்கு அருகில் உள்ள புதர் பகுதிக்கு சென்ற சிறுமியை அங்கு மது அருந்திக் கொண்டிருந்த மூவர் தூக்கிச் சென்று அருகில் உள்ள கல்குவாரியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியைக் காணாமல் தேடிய அவரது தந்தை அருகில் உள்ள கல்குவாரியிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடிச்சென்று காப்பாற்றியுள்ளார்.

இது குறித்து அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் சிறுமியின் தந்தை அளிக்க புகாரை வாங்க மறுத்த காவலர்கள், இன்னொரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறியுள்ளனர். அங்கும் புகார் பெற்றுக் கொள்ளப்படாத நிலையில், சிறுமியின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதற்கு பிறகு தான் முதல் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டுள்ளது.

திராவிட மாடல் ஆட்சியில் அரசு மருத்துவமனையின் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை, நீதிமன்றங்களில் வழக்காடும் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இவை அனைத்தையும் கடந்து 13 வயது சிறுமிக்கு அவர் வாழும் வீட்டுக்கு அருகிலேயே பாதுகாப்பு இல்லை என்றால் தமிழ்நாட்டில் எவ்வளவு மோசமான ஆட்சி நடைபெறுகிறது? அதை விடக் கொடுமை என்னவென்றால், இத்தகைய குற்றச்சம்பங்கள் நடக்காமல் தடுத்திருக்க வேண்டிய காவல்துறை, சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்த புகாரைக் கூட வாங்காமல் அவரது குடும்பத்தினரை அலைக்கழித்திருக்கிறது.

அனைத்துக் குற்றங்களுக்கும் மூல காரணம் மது மற்றும் போதைப்பழக்கங்கள் தான்; அதனால் அவற்றுக்கு முடிவு கட்டுங்கள் என்று தமிழக அரசை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஒருபுறம் போதையின் பாதையை தவிருங்கள் என்று கூறிக் கொண்டு இன்னொரு புறம் மது வணிகத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது தான் மக்கள் நலன் காக்கும் அரசுக்கான இலக்கணமா? என்பது தெரியவில்லை. சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தருவதுடன், மதுக்கடைகளை உடனடியாக மூடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. கூட்டுப் பாலியல் வன்கொடுமையிலிருந்து சிறுமியை பாதுகாப்பதற்குக் கூட திறனற்ற அரசு தொடர்ந்து பதவியில் நீடிக்க எந்தத் தகுதியும் இல்லை. தமிழக அரசுக்கு எதிராக மக்கள் பொறுமையிழந்து கொண்டிருக்கின்றனர். வெகு விரைவிலேயே அவர்கள் கொதித்தெழுவார்கள் அரியலூர் ரயில் விபத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அன்றைய ரயில்வேத் துறை அமைச்சர் அழகேசனுக்கு எதிராக திமுகவினர் முழக்கிய வாசகங்களை இன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் முழங்குவார்கள். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என அன்புமணி ராமதாஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வழக்கில் தலைமறைவாகிய மூன்று பேரை தனிப்படை கைது..!

திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டதில் நடந்த இச்சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், 13 வயது சிறுமி ஒருவர் கடந்த 17-ஆம் தேதி இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டின் அருகே உள்ள புதர் பகுதிக்கு சென்றுள்ளார். ஆனால் 13 வயது சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் மகளை தேடி சிறுமியின் தந்தை சென்றுள்ளார்.

அப்போது கல்குவாரி அருகே மகளின் அலறல் சத்தம் கேட்க அந்த இடத்தை நோக்கி சிறுமியின் தந்தை சத்தமிட்டபடி ஓடியுள்ளார். இதனை அறிந்த அந்த மர்ம ஆசாமிகள், சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். அவர்களை பிடிக்க முடியாமல் திரும்பி வந்து மகளை பார்த்தபோது மகளின் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளார். இந்த சம்பவம் இது வெளியே தெரிந்தால் தனது குடும்பத்துக்கு அவமானம் என நினைத்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்காமல் உறவினர் வீட்டுக்கு தனது மகளை அனுப்பி வைத்துள்ளார்.

உறவினர் வீட்டில் சிறுமிக்கு உடல்நிலை சரியாகாமல் இருந்ததால் உறவினர்கள் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் சம்பவம் வேப்பங்குப்பம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி நடந்துள்ளது ஆகையால் நீங்கள் வேப்பங்குப்பம் காவல் நிலையத்திற்கு செல்லுங்கள் என கூறியுள்ளனர்.

ஆனால் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போது அவர்கள் பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு திரும்ப அனுப்பியுள்ளனர். இப்படி பள்ளிகொண்டா காவல் நிலையமும் வேப்பங்குப்பம் காவல் நிலையம் மாறி மாறி அலைக்கழித்து உள்ளனர்.

செய்வதறியாது சிறுமின் உறவினர்கள் இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணனுக்கு தகவல் தெரிந்த பின் அவர் உத்தரவின் பேரில் சிறுமியின் தந்தை வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வேலூர் அனைத்து மகளிர் காவல்துறை தேடுவதை தொடர்ந்து குற்றவாளிகள் தலைமறைவு ஆகினர்.

இதன் தொடர்ச்சியாக, துணைக் காவல் கண்காணிப்பாளர் சாரதி தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் சித்தூர் பகுதியில் பதுங்கி இருப்பது தனிப்படைக்கு தகவல் கிடைக்க சித்தூர் விரைந்த தனிப்படை சின்ராஜ், வீரப்பன், இளமதன் ஆகிய மூன்று பேரை கைது செய்து வேலூர் அனைத்து மகளிர் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து, ஆய்வாளர் காஞ்சனா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றம் சுமத்தப்பட்ட மூன்று பேரையும் வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.

உடல் முழுக்க சிகரெட் சூடு..! 15 வயது சிறுமியை சித்ரவதை செய்து கொன்ற தம்பதி..!

16 வயது சிறுமியை உடல் முழுவதும் சிகரெட் சூடு வைத்து சித்ரவதை செய்து கொன்ற கணவன் – மனைவி கைது செய்யப்பட்டனர். சென்னை அமைந்தகரை பகுதியில் வீட்டில் பணிபுரிந்து வந்த 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அந்த சிறுமியின் உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டு, அடித்து தாக்கப்பட்டிருந்த காயங்கள் இருந்தது. இந்நிலையில் வீட்டு உரிமையாளர் மற்றும் அவரது மனைவி உள்பட 3 பேர் தான் சிறுமியை அடித்து கொலை செய்தது தெரிவர அவர்களை காவல்துறை கைது செய்துள்ளனர்.

சென்னை அமைந்தகரை மேத்தாநகர் சதாசிவம் தெருவில் உள்ள man and soil அடுக்குமாடி குடியிருப்பில் நாபியா மற்றும் முகமது நவாஸ் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் தஞ்சாவூரை சேர்ந்த 16 வயது சிறுமி பணிப்பெண்ணாக ஓராண்டுக்கு மேலாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், தீபாவளி அன்றும் சிறுமி அவரது வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முகமது நவாஸ் வீடு பூட்டிக் கிடந்தது. வீட்டில் பணிபுரிந்த சிறுமியை காணவில்லை என காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் பேரில் காவல் துறை அந்த வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். இதில் வீட்டின் கழிவறையில் மர்ம முறையில் சிறுமி பிணமாக கிடந்தார். இதையடுத்து அவரது உடலை மீட்ட காவல்துறை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு தப்பி ஓடியிருந்த கணவன் மனைவி இருவரையும் காவல்துறை பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கழிவறையில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்துவிட்டதாக கூறினர். ஆனால் காவல்துறை அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். காவல்துறை நடத்திய விசாரணையில் உறைய வைக்கும் தகவல் வெளியானது. அதாவது, கணவன் மனைவி மற்றும் அவர்களது நண்பர் ஆகிய 3 பேரும் சேர்ந்து தான் சிறுமியை சித்ரவதை செய்து கொலை செய்தது தெரியவந்தது.

சிறுமியை மிரட்டி உல்லாசம்..! எனக்கு இருக்கும் நோயை நீயும் எடுத்துக்கோ..!

ஹெராயின் போதைக்கு அடிமையான 17 வயது சிறுமியை மிரட்டி உல்லாசமாக இருந்த 19 இளைஞர்களுக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்போதுவரை மருந்து கண்டுபிடிக்காத உலகில் மிகவும் கொடிய தொற்று HIV ஆகும். HIV தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதை தடுக்க முடியாமல் போனாலும் மருந்துகளை சரியாக எடுத்துக் கொண்டால், நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ முடியும் மருத்துவ உலகம் கூறுகின்றது. ஆனாலும், HIV -யுடன் வாழ்வது என்பது, மிகப்பெரிய போராட்டம் ஆகும். இப்படிபட்ட சூழ்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில், போதைக்கு அடிமையான சிறுமியை மிரட்டி உல்லாசமாக இருந்த 19 இளைஞர்கள் HIV தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலம் நானிடால் மாவட்டத்திலுள்ள ராம் நகர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் ஹெராயின் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சிறுமியுடன் பழகிய இளைஞர்கள் சிலர், போதை பொருள் வேண்டும் என்றால் தன்னுடன் நெருக்கமாக பழக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருக்கின்றனர். இப்படி 17 வயது சிறுமியை 19 பேருக்கும் அதிகமான இளைஞர்களால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார். இந்த இளைஞர்களில் ஒரு சிலருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், தீராத உடல் சோர்வு என உடல்நலப் பிரச்சனை ஏற்பட்ட இவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்து உள்ளனர்.

இவர்களின் ரத்த மாதிரியை பரிசோதித்தபோது, இவர்களுக்கு HIV தொற்று பாதிப்பு இருந்தது தெரிய வந்திருக்கிறது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் அனைவரும் அந்த சிறுமியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தொற்று யார் மூலம் பரவியது என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் ஜார்க்கண்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்து சாலையில் வீசிச் சென்ற கொடூரம்..!

இந்தியாவில் உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீகார், டெல்லி, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் ஒரு மணி நேரத்துக்கு 4 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு மகாராஷ்ட்டிராவில் ஜல்னா நகரத்தில் உள்ள சாந்தாஞ்ஹிரா சாலையில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். அவரை பார்த்த வழிப்போக்கர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில், விரைந்து வந்த காவல்துறை சிறுமி மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமானதாக உள்ளதால் அங்கிருந்து மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ஒருவன் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து சிறுமியை தூக்கிச்சென்று பலாத்காரம் செய்துவிட்டு சாலையில் வீசிச் சென்றுள்ளான். சிறுமியின் நிலையறிந்து உள்ளூர்வாசிகள் போராட்டம் நடத்திய பின்னர் குற்றவாளி மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் நால்வரையும் காவல் துறை கைது செய்துள்ளது.

6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கொடூரனிடம் இருந்து காப்பாற்றிய குரங்கு கூட்டம்

6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரின் முயற்சியை குரங்குகள் கூட்டம் சரியான நேரத்தில் வந்து தடுத்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தில் உள்ள தௌலா கிராமத்தில் கடந்த வெள்ளியன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட குற்றவாளி இப்போது தப்பி ஓடிவிட்டார், மேலும் அவரைப் பிடிக்க காவல்துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, சம்பவ இடத்திற்கு வந்த குரங்குகள் அவரை தாக்கியது. குரங்கின் தாக்குதலுக்கு பயந்து அவர் சிறுமியை விட்டுவிட்டு ஓடினார் என தெரிவித்தனர்.

சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடுவதைக் கண்டதும், தன்னுடன் வரும்படி அவர் சிறுமியை வற்புறுத்தி அழைத்து சென்றுள்ளார். பழைய கட்டிடத்திற்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். அந்த நபரின் பலாத்கார முயற்சியின்போது அந்த இடத்திற்கு கூட்டமாக வந்த குரங்குகள் தாக்குதல் நடத்தியது. குரங்குகளின் தாக்குதலுக்கு பயந்து அந்த நபர் சிறுமியை விட்டுவிட்டு ஓடி உள்ளார்.

இதையடுத்து சிறுமி தனது வீட்டிற்கு ஓடிச்சென்று பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, எதிர்ப்பு தெரிவித்தால் சிறுமியின் குடும்பத்தினரை கொன்று விடுவதாக அந்த நபர் மிரட்டியதாகவும் சிறுமியின் பெற்றோர் கூறி உள்ளனர்.

அந்த கிராமத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் குற்றவாளி, சிறுமியை தன்னுடன் அழைத்துச் செல்வது பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டுள்ளனர்.

உடல் முழுக்க ரத்தத்துடன் தண்ணி கொடுங்கள்..! ஆடையின்றி வீடு வீடாக சென்ற போன சிறுமி..!

மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜையினில் இருந்து 15 கிமீ தூரத்தில் இருக்கும் பாத்நகர் என்ற பகுதியில் 12 வயது சிறுமி உடையின்றி உறுப்பில் ரத்தத்தோடு மட்டுமின்றி உடல் முழுக்க ரத்தத்தோடு நடந்து சென்றுள்ளார். அந்த சிறுமி 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் கதவை தட்டி உதவி கேட்டுள்ளார்.

எனக்கு ஆடை இல்லை. உடலில் ரத்தமாக இருக்கிறது. அதனால் என்னை காப்பாற்றுங்கள். எனக்கு கஷ்டமாக இருக்கிறது. எனக்கு உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அனைத்து சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த சிறுமி உதவி கேட்ட எல்லா வீட்டிலும் உள்ள ஆண்கள், பெண்கள் என அனைவரும் நீ உள்ளே வரக்கூடாது. வெளியே போ என்று துரத்தி அடித்துள்ளனர். மேலும் சிலர் அந்த சிறுமியிடம் பேசாமல் . சூ.. சூ என்று துரத்தி அடித்துள்ளனர்.

சிறுமி எனக்கு உதவி வேண்டாம். எனக்கு தண்ணீர் கொடுங்கள் என கதற இரக்கமில்லா மனித மிருகங்கள் விரட்டியடிக்க 8 கிமீ பரிதவித்த சிறுமி கடையில் ஆசிரமத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். ஆசிரமத்தில் இருந்த சாமியார் சிறுமியை ஒரு துண்டுடன் மூடி, மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

மாவட்ட மருத்துவமனையில் சிறுமியின் மருத்துவப் பரிசோதனையில் கூட்டு பலாத்காரம் அவர் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் சிறுமியின் வாய் உடைக்கப்பட்டு பேச முடியவில்லை. இதனால் கஷ்டப்பட்டு பேசி உள்ளார். சிறுமிக்கு ரத்தம் கொடுக்க கூட யாரும் வராத நிலையில் காவல்துறையினர் சிறுமிக்கு ரத்தம் கொடுத்தனர் என்ற சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.