நாஞ்சில் சம்பத்: சீமான் சாக்கடை ஜென்மம்.. பைத்தியத்தை கைது செய்ய சட்டத்தில் இடமில்லை..!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, சாக்கடை ஜென்மம் என்றும் பைத்தியங்களை கைது செய்ய சட்டத்தில் இடமில்லை என்றும் திராவிடர் இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார். கோயம்புத்தூரில் நடைபெற்ற பெரியார் குறித்த கருத்தரங்கில் நாஞ்சில் சம்பத் பேசினார்.

அப்போது, இச்சை வந்தால் தாய், மகளுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என பெரியார் பேசியதாக சீமான் பேசினார். அப்போதே சமூக வலைதளத்தில், தாம் செய்வதை எல்லாம் பெரியார் சொன்னதாக பேசுகிறார் சீமான் என பதிவிட்டிருந்தேன்.

தந்தை பெரியாரை இழிவாகப் பேசும் சீமானை ஏன் திராவிட மாடல் அரசு கைது செய்யாமல் இருக்கிறது என என்னிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, பைத்தியங்களை கைது செய்ய சட்டத்தில் இடம் இல்லை என்று பதில் தந்தேன். அத்தகைய பைத்தியத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை உறவினர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சீமான் பேசுவதைப் போல தடித்தனமான, தாறுமாறான விமர்சனங்களை பெரியாரின் சீடர்கள் உள்வாங்கி இருக்கிறார்கள்; எதிர்கொண்டு இருக்கிறார்கள்.

பெரியாரை கொச்சைப்படுத்துவதற்கு பாஜக ஒரு வேலைத் திட்டம் வைத்துள்ளது. அந்த வேலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குறைந்த கூலிக்கான நபர்தான் சீமான். சீமானுக்கு மேடை போட்டுக் கொடுத்த பாவிகள் இருவர்; ஒருவர் கோவை ராமகிருட்டிணன் மற்றொருவர் கொளத்தூர் மணி. விடுதலைப் புலிகளிடமே மதுவை வாங்கி வர சொன்ன சீமான், தன்னையே விற்பனை செய்யக் கூடியவர்தான்; ஆனால் தமிழா! நீ உன்னை விற்காதே என மேடைகளில் பேசுவார் சீமான்.

மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் ஏன் தமிழ்நாடு என்ற பெயர் இடம் பெறவில்லை? ஏன் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும் தரவில்லை? எங்கள் தருகிற நிதியில் எங்களுக்கான பங்கை ஏன் தரவில்லை? தேர்தல் வருகிறது என்பதற்காக பீகாருக்கு சலுகை காட்டும் மத்திய அரசு ஏன் தமிழ்நாட்டுக்கு நிதி தர மறுக்கிறீர்கள்? திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பே அணியமாட்டேன் என சபதம் எடுத்திருக்கிறார் அண்ணாமலை. அவர் சாகும் வரை நிச்சயம் காலில் செருப்பு அணியவே முடியாது; திமுக ஆட்சியை அகற்றவே முடியாது என நாஞ்சில் சம்பத் பேசினார்.

கஸ்தூரி வீட்டு முன்பு திரண்ட திமுக..! முட்டி நிக்குது முட்டி வரை சாக்கடை தண்ணி..!

சென்னையில் எப்போது மழை வந்தாலும், திமுக அரசை குற்றஞ்சாட்டி, நடிகை கஸ்தூரியின் காரசாரமான விமர்சனங்கள் எழுவது வாடிக்கையானஒன்றாகும். அந்தவகையில், தற்போது சென்னையில் மழை வெளுத்து கட்டிவரும் நிலையில், மறுபடியும் புத்தம் புதிய விமர்சனங்களுடன் கஸ்தூரி வந்திருக்கிறார்.

கடந்த வருடம் பெய்த மழை அளவுக்கு, சென்னை பாதிக்கப்பட்டு விடுமோ? என்ற கலக்கம் சென்னைவாசிகளை கவ்வி வந்தது. ஆனால், 20 செ.மீ. அளவுக்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பில்லை, சென்னை ஆபத்திலிருந்து தப்பிவிட்டது என்று வானிலை ஆய்வாளர்கள் கணிப்புகளை சொல்லி வருகிறார்கள்.

இது ஒருவகையில் சென்னை மக்களுக்கு ஆறுதலாக இருக்கிறது என்றாலும், சாலைகளில் தேங்கியிருக்கும் வெள்ளநீர் எப்போது வடியும் என்ற கவலையிலும் ஆழ்ந்துள்ளனர். 3 நாளைக்கு சென்னைக்கு ரெட் அலர்ட் என்றதுமே, அரசு இயந்திரம் மும்முரமாக களமிறங்கியது.. எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழக அரசு 2 தினங்களுக்கு முன்பே முடுக்கிவிட்டது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது சம்பந்தமாக தலைமை செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். வெள்ள பாதிப்பு பகுதிகளை நேரடியாகவே சென்று பார்வையிட்டார். மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் மீட்பு பணிகளிலும், நிவாரண பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து அதிருப்திகளை தெரிவித்து வருகின்றன. அதேசமயம், தமிழக அரசு முன்னெடுத்துள்ள நிவாரண நடவடிக்கைகளை திமுக கூட்டணி கட்சிகள் பாராட்டி வருகின்றன.

அந்தவகையில், திமுக ஆதரவாளரும், விசிகவின் முக்கிய பிரமுகருமான டாக்டர் ஷர்மிளா ட்வீட் ஒன்றினை பதிவிட்டிருக்கிறார். அதில், “மழையை பற்றி ஓவரா பேசிப் பேசி ஒரு பீதியை கிளப்ப முயற்சி பண்றாங்களோன்னு தோணுது… முன்எச்சரிக்கையுடன் இருங்க.. பாதுகாப்பா செயல்படுங்க… ஆனா மழையை ரசிக்க மறந்துடாதீங்க… நமக்கு வருஷத்துல ரெண்டு மாசம் தான் இந்த வாய்ப்பு கிடைக்கும்” என்று பதிவிட்டிருக்கிறார்.

ஷர்மிளாவின் இந்த பதிவை பார்த்தமே நடிகை கஸ்தூரி டென்ஷன் ஆகிவிட்டார்.. இதையடுத்து, ஷர்மிளாவுக்கு பதிலடி தந்துள்ளார். கஸ்தூரி தன்னுடைய ட்வீட்டில், “ரோம் நகரம் எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். இந்தம்மா மழைய ரசிக்க சொல்லுது. எங்க வீட்லல்லாம் முட்டி வரை சாக்கடை தண்ணி முட்டி நிக்குது. பழைய பில்டிங். மழைய ரசிக்க முடியல . உங்க மாடி வீட்டுல இருக்கவச்சு சூடா டீ சம்சா குடுத்தீங்கன்னா நாங்களும் ரசிப்போம்” என்று கிண்டலடித்துள்ளார்.

இதைக்கண்ட திமுக தொண்டர்களோ, பதிலுக்கு ஓடிப்போய் கஸ்தூரி வீட்டு வாசலில் நின்று ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளனர்.. அந்த வீடியோவில் சாலைகளில் எங்குமே தண்ணீர் தேங்கவில்லை.. மழை பெய்தற்கான அறிகுறியே அதில் தென்படவில்லை.. முட்டிவரைக்கும் சாக்கடை தண்ணீர் இருப்பதாக கஸ்தூரி சொன்ன நிலையில், திமுகவினர் இப்படியொரு வீடியோவை எடுத்து கஸ்தூரிக்கு பதிலடி தந்துள்ளனர்.