எஸ். வி. சேகர்: கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க உதவிய தமிழக காவல்துறையினருக்கு வாழ்த்துக்கள்..!

நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கிய நீதியரசர், தமிழக காவல்துறை, அரசு வழக்கறிஞர் ஆகியோருக்கு எஸ். வி. சேகர் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் தெரிவித்தார். தமிழகத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட கஸ்தூரிக்கு மனிதாபிமான அடிப்படையில் சென்னை காவல்துறை காட்டிய பெருந்தன்மையால் சென்னை எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட கஸ்தூரிக்கு மனிதாபிமான அடிப்படையில் சென்னை காவல்துறை காட்டிய பெருந்தன்மையால் சென்னை எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் மைதானத்தில் சமூகப் பாதுகாப்பு கோரி பிராமணர்கள் சங்கம் சார்பில் கடந்த 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசுகையில், நான் ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்து 4 வருஷம் ஆகுது.. இங்க சினிமாவை விடுங்க.. தொலைக்காட்சிகளில் நடுவர் ஆக கூட எனக்கு வாய்ப்பு தரக் கூடாது என மேலிடத்தில் இருந்து பிரஷர் தருவதாக சொல்கின்றனர்.

சுதந்திரப் போராட்டத்தில் உயிரைக் கொடுத்தவர்கள் பெரும்பாலானவர்கள் அந்தணர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ் அந்தணர்கள். தமிழர்கள். ஆரிய வந்தேறி.. ஆரிய வந்தேறி என்கிறார்கள்.. யார் ஆரிய வந்தேறி? கைபர் போலன் வழியாக பல மதத்தினர் வந்தாங்க.. அதை எல்லாம் பேச ஆரம்பிச்சா உங்க ஓட்டுதானே குறையும்.. 4,000 வருஷத்துக்கு முன்னாடி வந்ததாக சொல்லப்படுவதைப் பற்றி சொல்றீங்களே..

ஆரியர்கள் இங்கே வருகை தந்த போது ஷத்ரியர்கள் இடத்தில் வன்னியர்கள் இணைந்து கொண்டார்களோ, வைசியர் பாகுபாட்டில் செட்டியார்கள், முதலியார்கள், வேளாளர்கள் இணைந்து கொண்டார்களோ கோவில் பணிகளைச் செய்கிறவர்களில் சிவாச்சாரியார்கள், ஐயர்கள், ஐயங்கார்கள் , பண்டாரங்கள் போன்றவர்கள் இணைந்து கொண்டார்கள்.

300 வருஷம் முன்னாடி ஒரு ராஜாவுக்கு கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளிரோ சேவைகள் செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்?. அதனால்தானே தமிழர் முன்னேற்றக் கழகம்னு பெயர் வைக்க முடியமலை.. திராவிடர்கள் பெயர் கண்டுபிடிச்சீங்க என்றார். மேலும் ஜம்மு காஷ்மீர் போல தமிழ்நாட்டில் பிராமணர்கள் இனப்படுகொலை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது என கஸ்தூரி பேசியிருந்தார்.

இந்த கஸ்தூரியின் பேச்சுக்கு பலர் தனிநபர் தாக்குதல்கள் நடத்திய நிலையில், கஸ்தூரி மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இது தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் அடிப்படையில், நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் போலீசார் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 192, 196(1),(ஏ), 353(1)(பி) மற்றும் 353(2) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பினர். ஆனால், கஸ்தூரியை காவல்துறை விசாரிக்க உள்ளதை அறிந்த அவர் காவல்துறை சம்மன் அளிக்க வருவதற்குள் போயஸ் கார்டன் வீட்டை பூட்டிக் கொண்டு செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். அதேநேரம் மதுரை திருப்பரங்குன்றம் காவல் நியைத்தில் அளித்த புகாரின்படி, நடிகை கஸ்தூரி மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அதேபோல் கோயம்புத்தூர் மாநகர காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் மீதும் நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே நடிகை கஸ்தூரி எந்த நேரத்திலும் காவல்துறை தம்மை கைது செய்யலாம் என கருதி முன்ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், நடிகை கஸ்தூரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து நடிகை கஸ்தூரியை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவுப்படி எழும்பூர் ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையில் பெண் காவலர்கள் கொண்ட 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் கடந்த ஒருவாரமாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பஞ்சகுட்டா என்ற இடத்தில் பிரபல சினிமா தயாரிப்பாளர் பாலகிருஷ்ணா என்பவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் கஸ்தூரி பதுங்கி இருப்பதை தனிப்படையினர் உறுதி செய்தனர்.

இதைத்தொடர்ந்து தனிப்படையினர் நேற்று முன்தினம் ஐதராபாத்தில் முகாமிட்டு தயாரிப்பாளர் பாலகிருஷ்ணாவின் பண்ணை வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது கஸ்தூரி, காவல்துறையினர் வருவதை அறிந்து, பண்ணை வீட்டில் ரகசிய அறை ஒன்றில் பதுங்கியதாக கூறப்படுகிறது. தனிப்படையினர் பண்ணை வீடு முழுவதும் தேடியும் கஸ்தூரி கிடைக்கவில்லை. அதேநேரம், பண்ணை வீட்டில் உள்ள ரகசிய அறையை திறந்து சோதனை செய்த போது, அங்கும் கஸ்தூரி இல்லை எனத் தெரிந்து திடுக்கிட்டனர்.

இதையடுத்து பெண் காவலர் உதவியுடன் மீண்டும் ரகசிய அறையினுள் சென்று அங்கிருந்த படுக்கை அறையை பார்த்தபோது அந்த அறை முழுவதும் ‘மல்லிகைப் பூ சென்ட் வாசம் வீசியது’. இதனால் தனிப்படையினருக்கு நடிகை கஸ்தூரி இங்கேதான் பதுங்கி இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். பிறகு பெண் காவலர் படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் சோதனை செய்து பார்த்தனர். அப்போது, நடிகை கஸ்தூரி போர்வையை தன்மீது போர்த்திக் கொண்டு படுத்திருந்தைக் கண்டுபிடித்து கஸ்தூரியை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கஸ்தூரியை தனிப்படை ஐதராபாத்தில் இருந்து சாலை மார்க்கமாக 13 மணி நேரம் நீண்ட பயணத்திற்கு பிறகு நேற்று 12 மணிக்கு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதற்கு முன்பாக நடிகை கஸ்தூரிக்கு தனிப்படையினர் இரவு உணவுக்காக அவரிடம், அசைவம் உணவு வேண்டுமா அல்லது சைவ உணவு வேண்டுமா என்று கேட்டு அவர் விரும்பிய உணவை வாங்கி கொடுத்தனர்.

பிறகு நள்ளிரவு 1 மணி மற்றும் அதிகாலை 5 மணிக்கு சூடாக ஒரு கப் காபியையும் காவல்துறையினர் வாங்கி கொடுத்தனர். பிறகு காலை ஒரு செட் பூரி மற்றும் மசால் வடையை வாங்கி கொடுத்து அவரை பத்திரமாக சென்னைக்கு அழைத்து வந்தனர். உணவு அருந்திய ஓட்டலிலேயே நடிகை கஸ்தூரி உதட்டுச் சாயம் மற்றும் முகத்தில் பவுடரை பூசிக் கொண்டு தன்னை அழகுப்படுத்தி கொண்டார். பிறகு வாகனம் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் வந்தடைந்ததும், கேமராக்கள் முன்பு முகமலர்ச்சியுடன் வணக்கம் செலுத்தியபடி கஸ்தூரி காவல் நிலைத்திற்குள் போஸ் கொடுத்தபடி சென்றார்.

பின்னர் கஸ்தூரியிடம் எழும்பூர் உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் 1 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தெலுங்கு மக்களுக்கு எதிராக பேசியது குறித்து விளக்கம் அளித்தார். அதை காவல்துறை வழக்கு மூலமாக பதிவு செய்து கொண்டனர். அதைத்தொடர்ந்து கஸ்தூரியை பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவப் பரிசோதனை செய்தனர். அதன் பிறகு கஸ்தூரியை எழும்பூர் 5-வது நீதிமன்ற நடுவர் ரகுபதி ராஜா முன்பு ஆஜர்படுத்தினர்.

அவரை நீதிமன்ற நடுவர் ரகுபதி ராஜா வரும் 29-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நடிகை கஸ்தூரியை வாகனத்தில் அழைத்து சென்று புழல் மத்திய சிறையில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர். இதையடுத்து கஸ்தூரி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நடிகை கஸ்தூரி தான் ஒரு சிங்கிள் மதர். மேலும் ஆட்டிஸம் பாதித்த ஸ்பெஷல் குழந்தையின் தாயாராக இருப்பதை சுட்டிக்காட்டி ஜாமீன் கோரினார். இந்த மனு இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் மதியம் 12 மணிக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது கஸ்தூரியின் குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் காவல்துறை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்குவதை எதிர்க்கவில்லை. இதையடுத்து இந்த வழக்கில் மாலையில் நீதிமன்றம் கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு இருந்தது. நடிகை கஸ்தூரி மீது இன்னும் பல காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் காவல்துறை எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் அவருக்கு நிபந்தனை ஜாமீன் என்பது கிடைக்காமல் இருந்திருக்கும். ஒருவேளை ஜாமீன் கிடைத்தாலும் கூட காவல்துறை அடுத்த வழக்குகளில் உடனடியாக கைது செய்யலாம். ஆனால் காவல்துறை பெருந்தன்மையுடனும், மனிதாபிமான அடிப்படையிலும் கஸ்தூரியின் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது.

இந்நிலையில் நடிகர் எஸ். வி. சேகர் அவர்கள் தனது எக்ஸ் பக்கத்தில், சட்டத்துடன் மனிதாபிமானத்தையும் மனதில் கொண்டு ஜாமீன் வழங்கிய நீதியரசருக்கும் தமிழக காவல்துறைக்கும், அரசு வக்கீலுக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் பதிவிட்டுள்ளார்.

கஸ்தூரி ஜாமீன் வழக்கை கருணையுடன் அணுக வேண்டும் என காமாட்சி சுவாமிநாதன் வேண்டுகோள்..!

கஸ்தூரி ஜாமீன் விஷயத்தில் அவரது ஆட்டிஸம் பாதித்த சிறப்பு குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு முடிவு எடுக்க வேண்டும் என சக்ஷம் அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவர் காமாட்சி சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் மனைவி காமாட்சி சுவாமிநாதன் சக்ஷம் என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவரான உள்ளார்.

இவர் விடுத்துள்ள அறிக்கையில், அவதூறு வழக்கில் கைதாகியுள்ள நடிகை கஸ்தூரியின் குழந்தைக்காக ஒரு கோரிக்கை. நடிகை கஸ்தூரிக்கு எதிரான குற்றவியல் வழக்கு குறித்து நான் கருத்து கூறுவது முறையாக இருக்காது. அதேசமயம் அவருக்கு ஆட்டிஸம் பாதிப்போடு கூடிய ஒரு மகன் இருக்கிறார் என்றும் அவர் ஒரு தனி ஆளாக அக்குழந்தையை போராடி வளர்த்து வருகிறார் என்றும் அறிந்துகொண்டேன். இப்பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கும் அவர் தம் பெற்றோருக்கும் அன்றாட வாழ்க்கை என்பதே ஒரு நித்திய சவால்.

நானும் கஸ்தூரியைப் போல ஒரு சிறப்பு அம்மாதான். (Special Mother) எனக்கும் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மகன் இருக்கிறான். இதன் அடிப்படையில் எனக்கும் என்னைப்போன்ற ஏனைய தாய்மார்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கத் தோன்றுகிறது. கஸ்தூரி ஜாமீன் விஷயத்தில் நீதிமன்றங்கள் அவரது குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு அணுக வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

ஒரு மாற்றுத் திறனாளியின் தாயாக கஸ்தூரிக்கு என் உடன் நிற்றலை தார்மீக கடமையென நினைத்து இதை நான் பதிவிடுகிறேன் என காமாட்சி சுவாமிநாதன் அவர்கள் வெளியிட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்லிகைப் பூ வாசம் கட்டிலுக்கு அடியிலிருந்த ஆபாச நடிகை கஸ்தூரி காட்டிக் கொடுத்தது..!

மல்லிகைப் பூ சென்ட் வாசம் ஆபாச நடிகை கஸ்தூரி கட்டிலுக்கு அடியில் போர்வையை போர்த்திக் கொண்டு படுத்திருந்தைக் காட்டி கொடுத்ததை தொடர்ந்து ஐதராபாத்தில் கைது செய்து வரும் 29-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் மைதானத்தில் சமூகப் பாதுகாப்பு கோரி பிராமணர்கள் சங்கம் சார்பில் கடந்த 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசுகையில், நான் ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்து 4 வருஷம் ஆகுது.. இங்க சினிமாவை விடுங்க.. தொலைக்காட்சிகளில் நடுவர் ஆக கூட எனக்கு வாய்ப்பு தரக் கூடாது என மேலிடத்தில் இருந்து பிரஷர் தருவதாக சொல்கின்றனர்.

சுதந்திரப் போராட்டத்தில் உயிரைக் கொடுத்தவர்கள் பெரும்பாலானவர்கள் அந்தணர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ் அந்தணர்கள். தமிழர்கள். ஆரிய வந்தேறி.. ஆரிய வந்தேறி என்கிறார்கள்.. யார் ஆரிய வந்தேறி? கைபர் போலன் வழியாக பல மதத்தினர் வந்தாங்க.. அதை எல்லாம் பேச ஆரம்பிச்சா உங்க ஓட்டுதானே குறையும்.. 4,000 வருஷத்துக்கு முன்னாடி வந்ததாக சொல்லப்படுவதைப் பற்றி சொல்றீங்களே..

ஆரியர்கள் இங்கே வருகை தந்த போது ஷத்ரியர்கள் இடத்தில் வன்னியர்கள் இணைந்து கொண்டார்களோ, வைசியர் பாகுபாட்டில் செட்டியார்கள், முதலியார்கள், வேளாளர்கள் இணைந்து கொண்டார்களோ கோவில் பணிகளைச் செய்கிறவர்களில் சிவாச்சாரியார்கள், ஐயர்கள், ஐயங்கார்கள் , பண்டாரங்கள் போன்றவர்கள் இணைந்து கொண்டார்கள்.

300 வருஷம் முன்னாடி ஒரு ராஜாவுக்கு கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளிரோ சேவைகள் செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்?. அதனால்தானே தமிழர் முன்னேற்றக் கழகம்னு பெயர் வைக்க முடியமலை.. திராவிடர்கள் பெயர் கண்டுபிடிச்சீங்க என்றார். மேலும் ஜம்மு காஷ்மீர் போல தமிழ்நாட்டில் பிராமணர்கள் இனப்படுகொலை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது என கஸ்தூரி பேசியிருந்தார்.

இந்த கஸ்தூரியின் பேச்சுக்கு பலர் தனிநபர் தாக்குதல்கள் நடத்திய நிலையில், கஸ்தூரி மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இது தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் அடிப்படையில், நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் போலீசார் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 192, 196(1),(ஏ), 353(1)(பி) மற்றும் 353(2) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பினர். ஆனால், கஸ்தூரியை காவல்துறை விசாரிக்க உள்ளதை அறிந்த அவர் காவல்துறை சம்மன் அளிக்க வருவதற்குள் போயஸ் கார்டன் வீட்டை பூட்டிக் கொண்டு செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். அதேநேரம் மதுரை திருப்பரங்குன்றம் காவல் நியைத்தில் அளித்த புகாரின்படி, நடிகை கஸ்தூரி மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அதேபோல் கோவை மாநகர காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் மீதும் நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே நடிகை கஸ்தூரி எந்த நேரத்திலும் காவல்துறை தம்மை கைது செய்யலாம் என கருதி முன்ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், நடிகை கஸ்தூரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து நடிகை கஸ்தூரியை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவுப்படி எழும்பூர் ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையில் பெண் காவலர்கள் கொண்ட 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் கடந்த ஒருவாரமாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பஞ்சகுட்டா என்ற இடத்தில் பிரபல சினிமா தயாரிப்பாளர் பாலகிருஷ்ணா என்பவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் கஸ்தூரி பதுங்கி இருப்பதை தனிப்படையினர் உறுதி செய்தனர்.

இதைத்தொடர்ந்து தனிப்படையினர் நேற்று முன்தினம் ஐதராபாத்தில் முகாமிட்டு தயாரிப்பாளர் பாலகிருஷ்ணாவின் பண்ணை வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது கஸ்தூரி, காவல்துறையினர் வருவதை அறிந்து, பண்ணை வீட்டில் ரகசிய அறை ஒன்றில் பதுங்கியதாக கூறப்படுகிறது. தனிப்படையினர் பண்ணை வீடு முழுவதும் தேடியும் கஸ்தூரி கிடைக்கவில்லை. அதேநேரம், பண்ணை வீட்டில் உள்ள ரகசிய அறையை திறந்து சோதனை செய்த போது, அங்கும் கஸ்தூரி இல்லை எனத் தெரிந்து திடுக்கிட்டனர்.

இதையடுத்து பெண் காவலர் உதவியுடன் மீண்டும் ரகசிய அறையினுள் சென்று அங்கிருந்த படுக்கை அறையை பார்த்தபோது அந்த அறை முழுவதும் ‘மல்லிகைப் பூ சென்ட் வாசம் வீசியது’. இதனால் தனிப்படையினருக்கு நடிகை கஸ்தூரி இங்கேதான் பதுங்கி இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். பிறகு பெண் காவலர் படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் சோதனை செய்து பார்த்தனர். அப்போது, நடிகை கஸ்தூரி போர்வையை தன்மீது போர்த்திக் கொண்டு படுத்திருந்தைக் கண்டுபிடித்து கஸ்தூரியை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கஸ்தூரியை தனிப்படை ஐதராபாத்தில் இருந்து சாலை மார்க்கமாக 13 மணி நேரம் நீண்ட பயணத்திற்கு பிறகு நேற்று 12 மணிக்கு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதற்கு முன்பாக நடிகை கஸ்தூரிக்கு தனிப்படையினர் இரவு உணவுக்காக அவரிடம், அசைவம் உணவு வேண்டுமா அல்லது சைவ உணவு வேண்டுமா என்று கேட்டு அவர் விரும்பிய உணவை வாங்கி கொடுத்தனர்.

பிறகு நள்ளிரவு 1 மணி மற்றும் அதிகாலை 5 மணிக்கு சூடாக ஒரு கப் காபியையும் காவல்துறையினர் வாங்கி கொடுத்தனர். பிறகு காலை ஒரு செட் பூரி மற்றும் மசால் வடையை வாங்கி கொடுத்து அவரை பத்திரமாக சென்னைக்கு அழைத்து வந்தனர். உணவு அருந்திய ஓட்டலிலேயே நடிகை கஸ்தூரி உதட்டுச் சாயம் மற்றும் முகத்தில் பவுடரை பூசிக் கொண்டு தன்னை அழகுப்படுத்தி கொண்டார். பிறகு வாகனம் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் வந்தடைந்ததும், கேமராக்கள் முன்பு முகமலர்ச்சியுடன் வணக்கம் செலுத்தியபடி கஸ்தூரி காவல் நிலைத்திற்குள் போஸ் கொடுத்தபடி சென்றார்.

பின்னர் கஸ்தூரியிடம் எழும்பூர் உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் 1 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தெலுங்கு மக்களுக்கு எதிராக பேசியது குறித்து விளக்கம் அளித்தார். அதை காவல்துறை வழக்கு மூலமாக பதிவு செய்து கொண்டனர். அதைத்தொடர்ந்து கஸ்தூரியை பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவப் பரிசோதனை செய்தனர். அதன் பிறகு கஸ்தூரியை எழும்பூர் 5-வது நீதிமன்ற நடுவர் ரகுபதி ராஜா முன்பு ஆஜர்படுத்தினர்.

அவரை நீதிமன்ற நடுவர் ரகுபதி ராஜா வரும் 29-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நடிகை கஸ்தூரியை வாகனத்தில் அழைத்து சென்று புழல் மத்திய சிறையில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர்.

முன்னதாக கஸ்தூரியை நீதிமன்ற வளாகத்தில் இருந்து புழல் சிறைக்கு அழைத்து செல்ல காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்து வந்த போது, கேமராக்களை கண்டதும் ‘நீதி வெல்லட்டும்….’ என கோஷம் எழுப்பினார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரியை மதுரை திருப்பரங்குன்றம் மற்றும் கோயம்புத்தூர் காவல்துறை அடுத்தடுத்த வழக்குகளில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கஸ்தூரி கோஷம்: அரசியல் அராஜகம் ஒழிக..! நீதி வெல்லட்டும்..!

அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும் என நீதிமன்ற வளாகத்தில் இருந்து காவல் பாதுகாப்புடன் வெளியே வந்த நடிகை கஸ்தூரி காவல்துறை வாகனத்தில் ஏறும் போது கோஷமிட்டார். பிராமணர்கள் பாதுகாப்பு கோரி சென்னை எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசுகையில், நான் ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்து 4 வருஷம் ஆகுது.. இங்க சினிமாவை விடுங்க.. தொலைக்காட்சிகளில் நடுவர் ஆக கூட எனக்கு வாய்ப்பு தரக் கூடாது என மேலிடத்தில் இருந்து பிரஷர் தருவதாக சொல்கின்றனர்.

சுதந்திரப் போராட்டத்தில் உயிரைக் கொடுத்தவர்கள் பெரும்பாலானவர்கள் அந்தணர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ் அந்தணர்கள். தமிழர்கள். ஆரிய வந்தேறி.. ஆரிய வந்தேறி என்கிறார்கள்.. யார் ஆரிய வந்தேறி? கைபர் போலன் வழியாக பல மதத்தினர் வந்தாங்க.. அதை எல்லாம் பேச ஆரம்பிச்சா உங்க ஓட்டுதானே குறையும்.. 4,000 வருஷத்துக்கு முன்னாடி வந்ததாக சொல்லப்படுவதைப் பற்றி சொல்றீங்களே.. ஆரியர்கள் இங்கே வருகை தந்த போது ஷத்ரியர்கள் இடத்தில் வன்னியர்கள் இணைந்து கொண்டார்களோ, வைசியர் பாகுபாட்டில் செட்டியார்கள், முதலியார்கள், வேளாளர்கள் இணைந்து கொண்டார்களோ கோவில் பணிகளைச் செய்கிறவர்களில் சிவாச்சாரியார்கள், ஐயர்கள், ஐயங்கார்கள் , பண்டாரங்கள் போன்றவர்கள் இணைந்து கொண்டார்கள்.

300 வருஷம் முன்னாடி ஒரு ராஜாவுக்கு கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளிரோ சேவைகள் செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்?. அதனால்தானே தமிழர் முன்னேற்றக் கழகம்னு பெயர் வைக்க முடியமலை.. திராவிடர்கள் பெயர் கண்டுபிடிச்சீங்க என்றார். மேலும் ஜம்மு காஷ்மீர் போல தமிழ்நாட்டில் பிராமணர்கள் இனப்படுகொலை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது என கஸ்தூரி பேசியிருந்தார்.

இந்த கஸ்தூரியின் பேச்சுக்கு பலர் தனிநபர் தாக்குதல்கள் நடத்திய நிலையில், கஸ்தூரி மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கஸ்தூரியை காவல்துறை விசாரிக்கவுள்ளதை அறிந்த அவர் காவல்துறை சம்மன் அளிக்க வருவதற்குள் போயஸ் கார்டன் வீட்டை பூட்டிக் கொண்டு செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

இதையடுத்து கஸ்தூரியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதனிடையே மதுரை திருநகர், ஆண்டிப்பட்டி காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கஸ்தூரிக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து அவருடைய ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து கஸ்தூரியை கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டி வந்தனர். கடந்த ஒரு வாரமாக கஸ்தூரியை தேடி வந்த நிலையில் அவர் ஹைதராபாத்தில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தனிப்படை காவல்துறை அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

அவரை சாலை மார்க்கமாக சென்னை அழைத்து வரப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு எழும்பூர் 5-ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி ராஜா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நடிகை கஸ்தூரியை வரும் 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அப்போது கஸ்தூரி, நீதிபதியிடம், நான் சிங்கிள் மதர், எனது இரு குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும். சொந்த ஜாமீனில் என்னை விடுவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஆனால் அவருக்கு ஜாமீன் தர நீதிபதி மறுத்துவிட்டார். இதையடுத்து புழல் சிறைக்கு அழைத்து செல்வதற்காக போலீஸ் வாகனத்தில் ஏறும் போது அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும் என கோஷமிட்டார்.

எஸ்.வி.சேகர்: கஸ்தூரி மீது ஆந்திராவிலும் வழக்கு போட்டாச்சு..! இனிமேல் தனிக்கட்சி ஆரம்பிக்கலாம்..!

தமிழ்நாட்டில் குஷ்பு போல் நமக்கு எதிர்காலம் இருக்கும் என்று கஸ்தூரி இப்படி பேசி இருக்கலாம், தமிழ்நாடு பாஜகவில் கஸ்தூரிக்கு கதவு மூடப்பட்டு விட்டது, ஆந்திராவிலும் வழக்கு போட்டுவிட்டார்கள், கஸ்தூரி இனிமேல் தனி கட்சி ஆரம்பித்தால் வேண்டுமானால் எதிர்காலம் இருக்கும் என எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

சென்னை மந்தைவெளியில் உள்ள எஸ்.வி சேகர் இல்லத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.அப்போது, “தமிழ்நாட்டில் பாஜக 25 ஆண்டுகள் ஆனாலும் ஆட்சிக்கு வரவே முடியாது. ஒழுங்காக படிக்காத காரணத்தால் தான் அண்ணாமலை அரசியலுக்கு வந்தார். இங்கு சரியாக இல்லை என்று தான் வெளிநாடு படிக்க சென்று இருக்கிறார். அண்ணாமலை வாயை திறந்தால் பொய். தமிழகத்தில் ஒரு பிராமணர் கூட இல்லாமல் அனைவரையும் ஒழித்துக் கட்டிவிட்டார்.

சும்மா திமுகவை திட்டிக் கொண்டிருந்தால் அவர்களால் வளரவே முடியாது. திமுக ஒழுங்காக ஆட்சி செய்யவில்லை என்றால் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள்? அனைத்து ஓட்டுகளையும் திமுகவினரே போட்டார்களா? பிராமணர் சமூகத்தை யாரும் பெரிய வாக்கு வங்கியாக பார்க்கவில்லை. பிராமணர்கள் 7 சதவீதம் இருக்கிறார்கள்.

ஆனால், 3 சதவீதம் என்கிறார்கள். பிராமணர்களில் 50 சதவிகிதம் பேர் கையில் செல்போன் கூட இல்லாமல் உள்ளார்கள். தினசரி கூலி வேலை, கட்டிட வேலை, புரோகிதம் போன்ற பணிகளை தான் செய்கிறார்கள். EWS எந்த இட ஒதுக்கீட்டுக்கும் எதிரானது அல்ல. தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில், 7 பேராவது பிராமண எம்.எல்.ஏ.க்கள் இருக்க வேண்டும். ஜெயலலிதா இருந்தவரை ஒரு 3 பேர் இருந்தார்கள். இப்போது ஒருவர் கூட இல்லை.

பிராமணர் நல வாரியம் அமைப்போம் என்று நாளை திமுக அறிவித்தால், அவர்களுக்காக பிரச்சாரம் செய்வேன். ஆனால் எந்தக் கட்சியிலும் சேர மாட்டேன். எந்த கட்சி இதைச் சொன்னாலும் அதற்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்வேன். யாராக இருந்தாலும் தனது சமூகத்திற்காக பேசுவது சரி. ஆனால் எந்தக் காரணத்திற்காகவும் மற்ற சமூகத்தை குறைத்து பேசுவது தவறான அயோக்கியத்தனமான செயல். இருவிதமான பிராமணர்கள் தமிழகத்தில் உள்ளார்கள்.

பாஜக என்ன சொன்னாலும் சரி என்று சொல்லும் ஒரு முட்டாள்தனமான பிரிவு இருக்கிறார்கள். ஜாதி, சடங்கு, சம்பிரதாயம் எல்லாவற்றையும் வீட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும். வெளியில் வந்தால் தமிழ்நாட்டுக்காரன், இந்தியன் என்று இருக்க வேண்டும். எல்லா இடத்திலும் சாதியை தூக்கிக்கொண்டு அலைய முடியாது. தமிழக பாஜகவில் ஒரு பிராமணர்கள் கூட இல்லாத நிலையை அண்ணாமலை கொண்டு வந்துள்ளார். நான் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இல்லை.

ஆனால், அவர் பிரதமர் என்பதால் மோடியின் புகைப்படங்கள் என் வீட்டில் இருக்கிறது. என் வீட்டில் வந்து பாருங்கள் ஜெயலலிதா, கலைஞர் புகைப்படமும் தான் இருக்கிறது. எப்போது பள்ளிக்கூடத்தில் நீ என்ன சாதி என்று கேட்பதை நிறுத்துகிறார்களோ, அதுவரை சாதியை நிறுத்த முடியாது இது உண்மை. சமூகத்திற்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்து, அது எனக்கு தவறாக முடிந்துவிட்டது. என்னை கட்சி அரசியலுக்கு கொண்டு வந்தது ஜெயலலிதா தான். வேற்றுமையை பெரிதாக்கி வெறுப்பை வளர்த்தால் வாழ்வு சுமூகமாக இருக்காது.

பொதுவெளியில் பேசும்போது, என்ன பேச வேண்டும் என்பதை விட, எதை பேசக்கூடாது என்பதை தெரிந்திருக்க வேண்டும். மைக்கை பார்த்ததும் வாந்தி எடுப்பது போல் பேசக்கூடாது. கஸ்தூரி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்க செயல். தமிழ்நாட்டில் குஷ்பு போல் நமக்கு எதிர்காலம் இருக்கும் என்று கஸ்தூரி இப்படி பேசி இருக்கலாம். தனக்கு அண்ணாமலை வாய்ப்பு கொடுப்பார் என நினைத்திருக்கலாம். ஆனால் அது ரிவர்ஸில் வொர்க் அவுட் ஆகிவிட்டது.

ஆனால், சுதாகர் ரெட்டி போன்ற பாஜக தலைவர்களே அதனை எதிர்த்துவிட்டார்கள். தமிழ்நாடு பாஜகவில் கஸ்தூரிக்கு கதவு மூடப்பட்டு விட்டது. ஆந்திராவிலும் வழக்கு போட்டுவிட்டார்கள். கஸ்தூரி இனிமேல் தனி கட்சி ஆரம்பித்தால் வேண்டுமானால் எதிர்காலம் இருக்கும். ஏனென்றால் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம்.” என எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

ஆ.ராசா கண்டனம்: ஒட்டுமொத்த பெண்களை நடிகை கஸ்தூரி கேவலப்படுத்தி இருக்கிறார்..!

ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதா? என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆ.ராசா வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘பிராமண சமுகம் ஒடுக்கப்படுகிறது’ என்ற பெயரில் சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டு இருக்கிறது. ஊடகத்தின் கவனத்தை ஈர்க்க திராவிட இயக்கத் தலைவர்களைக் குறிப்பாகத் தந்தை பெரியார், டாக்டர் கலைஞர் உள்ளிட்டவர்களை அந்த ஆர்ப்பாட்டத்தில் இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார்கள். ‘பிராமணர்கள் பாதுகாப்பு வலியுறுத்தல்’ என்ற போர்வையில் திமுக அரசுக்கு எதிராகக் களங்கத்தை உருவாக்கத் திட்டமிட்டடு இருக்கிறார்கள்.

பண்பாட்டு அடிப்படையில் விந்திய மலைக்கு வடக்கே ஒரு வாழ்க்கை முறையும், விந்திய மலைக்கு தெற்கே ஒரு வாழ்க்கை முறையும் இருந்தது என்ற வரலாறு ஏன் இவர்களுக்குத் தெரியவில்லை? வானவியல், கணிதம், கட்டக்கலை, சிற்பம், ஓவியம் போன்ற நுண்கலைகளில் பழந்தமிழர் சிறந்து விளங்கிக் கொண்டிருந்த காலத்தில், கி.மு. 3000-ஆம் ஆண்டில் மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் தங்கள் ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சல் இடம் தேடி கைபர் போலன் கணவாய் வழியே உள்ளே நுழைந்தனர். கொஞ்சக் காலத்தில் பிராமணர்கள் மதத் தலைமையைக் கைப்பற்றினார்கள்.

இவர்களின் மனுதர்மம் வடக்கே உள்ள வாழ்வியல் முறையை வகுத்துத் தந்தது. பிறப்பால் மக்கள் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று பிரிக்கப்பட்டனர். கடவுளிடம் நேரடித் தொடர்பு கொண்டவர்கள் பிராமணர்கள் என்றும், அரசாளப் பிறந்தவர்கள் சத்திரியர்கள் என்றும், வணிகம் செய்யப் பிறந்தவர்கள் வைசியர்கள் என்றும் இந்த மூன்று தரப்பினருக்கும் சேவை செய்யப் பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்றும் மனுதர்மம் கூறுகிறது.

அந்த மனுதர்மம் மூலம் பிராமணர்கள் மற்ற சமூகத்தினரை அடக்கி ஒடுக்கி கீழ்நிலைக்குத் தள்ளினார்கள். சூத்திரர்கள், உயர் சாதியினர் வாழும் பொதுத் தெருக்களில் நடக்க உரிமை மறுக்கப்பட்டது. கல்வி கற்கும் உரிமையும் பறிக்கப்பட்டது. கோயில்களின் உள்ளே சென்று வழிபடவும் உரிமை இல்லை. பொதுக் குளங்கள், கிணறுகளில் நீர் எடுக்கவும் உரிமை இல்லை 61601 மனுதர்மம் பெயரில் தீண்டாமை கொடுமைகள் அரங்கேற்றப்பட்டன. தமிழர்கள் சமத்துவ வாழ்வியல் முறையைக் கடைப்பிடித்தார்கள்.

வள்ளுவர் தனது குறளில், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான்’ என்று குறிப்பிடுகிறார். சங்க காலம்தொட்டு, ஏறத்தாழ பத்தாம் நூற்றாண்டு வரை தமிழர்கள் சமத்துவ வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். ஆண், பெண் சமத்துவம் தமிழர் வாழ்வில்மேலோங்கியிருந்தது. ஆனால், பிராமணர்கள் கடவுளின் பெயரால் மற்றவர்களை உயர்ந்தவர்கள் என்று சொல்வதுதான் இன்றைய பிரச்னைக்கு காரணமாக விளங்குகிறது.’மனிதராகப் பிறந்த அனைவரும் சமமானவர்களே’ என்ற அறிவியல் உண்மைக்கு மாறாக தம்மை உயர் சாதியினராகக் காட்டிக் கொள்ளக் குறிப்பிட்ட வகுப்பினர் இப்போதும் முயன்று கொண்டிருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடுதான் அவர்கள் நடத்தியிருக்கும் ஆர்ப்பாட்டம். அது பாதுகாப்பு வலியுறுத்தல் ஆர்ப்பாட்டம் அல்ல.

தன் சமூக பெருமையை நிலைநாட்ட நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்.பிரதமர் மோடி ஆட்சியில் ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் செயலாளராக இருப்பவர்களின் 90 விழுக்காட்டுக்கும் மேலானோர் பிராமணர்கள். மற்ற பிரிவினர் இவர்களைக் காட்டிலும் தகுதி பெற்றவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத் துறைகளை நிர்வகிக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. அதுபோலவே, நீதியரசர்களில் மிகப் பெரும்பான்மையினர் உயர் ஜாதியினராக உள்ள நிலை பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து வருவதை உயர் பொறுப்பில் உள்ளோரே சுட்டிக்காட்டும் நிலை உள்ளது..

தமிழ்நாடு அரசுப் பணிகளில் இட ஒதுக்கீட்டு முறையை சட்டப்படி நடைமுறைப்படுத்தி மனிதர்கள் யாராயினும் அவர்களுக்கு பாரபட்சம் காட்டாமல், கல்வித் தகுதிக்கு ஏற்ப பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தென்னகத்தில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் பிராமணர்கள் தங்களை உயர் சாதியினராகவும், மற்றவர்கள் தங்களைவிடத் தாழ்ந்தவர்களாகவும் எண்ணிச் செயல்படுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?இந்து மதத்தில் ஏறத்தாழ 90 சதவிகித மக்கள் பிற்படுத்தப்பட்டவர்களாக பட்டியலினத்தவராகப் புறக்கணிக்கப்பட்ட நிலையில், 1916ஆம் ஆண்டு தொடங்கிய நீதிக்கட்சி, திமுக போன்ற திராவிட இயக்கங்கள் இந்த 90 சதவிகித மக்களின் சுயமரியாதைக்காகப் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

திராவிட இயக்கம், தென்னிந்திய நல உரிமைச் சங்கம், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், தந்தை பெரியார் முன்னெடுத்து நடத்திய போராட்டங்களாலும் வேள்விகளாலும்தான் இன்றைக்கு ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேறி வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், “பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம். ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்’ என முழக்கமிட்டார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

ஒடுக்கப்பட்டவர்கள் உயர்வுக்கு வருவதைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல்தான் அவர்கள் மீது இன்றைக்கும் களங்கத்தை வீசுகிறார்கள்.”பிராமணர் அல்லாதார் பதவிகளுக்கு வந்தால் லஞ்சம் வாங்குவார்கள்’எனச் சொல்லி ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை மிக மோசமாகஇழிவுபடுத்தியிருக்கிறார் முன்னாள் நடிகை கஸ்தூரி. டிவி விவாதநிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நடிகை கஸ்தூரி, ‘திறமை அடிப்படையில் பிராமணர் அல்லாதார் பதவிகளுக்கு வந்ததால் லஞ்சம் வாங்குகின்றனர்என்று பேசி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சமூகத்தினர் என ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அனைவரையும் மிக மோசமானவர்களாகச் சித்தரிக்க முயன்றிருக்கிறார்.

பிராமணர் சமூகம் உயர்வானது நிலைநிறுத்த, ஒடுக்கப்பட்ட சமூகத்தினரைக் ‘குற்றப்பரம்பரை’ வர்ணம் அடித்திருக்கிறார்.”தெலுங்கர்கள் அந்தப்புரத்துச் சேவகர்கள்” எனச்சர்ச்சை கருத்தைச் சொல்லிவிட்டு, “அப்படி சொல்லவில்லை’ என வியாக்கியானம்பேசுகிறார். சினிமாவில் மார்க்கெட் போன பிறகு தன்னை நிலைநிறுத்திக்கொள்ளஊடக வெளிச்சம் தன் மீது விழ…அதன் மூலம் அரசியல் அங்கீகாரம் பெற..பிற சமுதாயத்துக்கு பெண்களையும் அதிகாரிகளையும்கேவலமாகச் சித்தரிப்பதை அனுமதிக்கவே முடியாது. இது இன்னொரு ஆரிய ஆதிக்க உணர்வின் வெளிப்பாடு. அதனைத் திராவிட மாடல் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. ஆரியத்தை எப்போது தலைதூக்க விடமாட்டோம்.

தெலுங்கர்களை மட்டுமல்ல.. பெண்களையே கஸ்தூரி கேவலப்படுத்தியிருக்கிறார். ‘அந்தப்புரத்து சேவகர்கள்’ என்று ஒரு பெண்ணே பெண் இனத்தையே கேவலமாகச் சித்தரிப்பவர்களுக்கு மற்ற இனத்தைப் பற்றி என்ன கவலை இருக்கப் போகிறது? இந்து கோயில்களுக்குப் பெண்களை நேர்ந்து விடுவதைச் சட்டத்துக்குப் புறம்பானதாக அறிவித்து, தேவதாசி ஒழிப்புச் சட்டத்தைச் சென்னை மாகாண சட்டமன்றத்தில் 1947-ல் நிறைவேற்றி தேவதாசிகளுக்குத் திருமணம் செய்யும் உரிமையைத் பெற்றுத் தந்த மண் தமிழ்நாடு. இங்கே ஆரியம் வெற்றி பெறாது.

“பட்டியலின மக்களுக்கு இருப்பதுபோல, பிராமணர்களைப் பாதுகாக்கச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்” என அந்த ஆர்ப்பாட்டத்தில் முழங்கியிருக்கிறார்கள். பட்டியலினத்தவரை மிகவும் கீழ் சாதியினராக நினைப்பவர்கள், அவர்களுக்கு இருப்பது போலவே சிறப்புச் சட்டம் வேண்டும் என்பதைக் கேட்டு சிரிக்கத்தான் தோன்றுகிறது. எல்லா சமூகத்தினரைப் போலவே பிராமண சமுகமும் எந்த பிரச்னையும் இல்லாமல் இங்கே வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஏதோ நாளும் அநீதி இழைக்கப்படுவதாகவும், அவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு ஒடுக்கப்படுவதாகவும்கூறி பொய்யான தோற்றத்தைக் கட்டமைக்க ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

அரசுத் துறை உயர் பதவிகள் என்றாலும் தனியார்த் துறை பணிகள்என்றாலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளாக இருந்தாலும் அனைத்து உயர் அதிகாரங்களையும் அனுபவித்துக் கொண்டு, தங்களுக்கு பாதுகாப்பு இல்லை,ஒதுக்கி வைக்க முயற்சி நடக்கிறது என்றெல்லாம் கூப்பாடு போடுவது,பட்டியல் சமூக மக்களுக்கான சிறப்புச் சட்டங்களைக் கேலி செய்யும் முயற்சி.அனைத்து சமுகத்தினரும் பாதுகாப்பாக வாழ்வதற்கோ, விரும்பிய தொழிலை நிம்மதியாக செய்வதற்கோ எந்தவொரு தடையும் தமிழ்நாட்டில் இல்லை என்பது நாடறிந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ஆட்சி அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்துச் செல்கிறது. சாதி மோதல்களோ மதக் கலவரமோ இல்லாமல், ‘எல்லோருக்கும்

“எல்லாம்” என்ற கொள்கையைக் கடைப்பிடித்துச் செல்கிறது. சமாதான சகவாழ்வு, சமத்துவ நல்லிணக்கம் என்ற அடிப்படையில் இயங்கி வருகிறது. சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் தமிழ் மண்ணில் சமூக அமைதியைக் குலைக்க, ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் அவதூறு பிரசாரத்தை மேற்கொண்டு பீதியைக் கிளப்புவது உள்நோக்கம் கொண்டது.பிராமண சமூகத்தினருக்கு எதிராக எந்த சிறு வன்முறையும் தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளில் நடைபெறவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்புக்கான சட்டத்தை நீர்த்துப் போக வைப்பதற்காகவோ அல்லது தங்கள் சமூகம் மோசமாகப் பாதிக்கப்படுவது போல ஒரு தோற்றத்தை உருவாக்கவோ திட்டமிடுகிறார்கள் என்பது அப்பட்டமாகவே வெளிப்பட்டிருக்கிறது.

திமுகவின் ஐம்பெரும் முழக்கங்களிலேயே ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்; வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம் என்றிருக்கிறது; அவற்றில் திமுக என்றும் உறுதியாக இருக்கிறது. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து அதனை நிறைவேற்றியும் வருகிறது. திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை. திராவிட மாடல் ஆட்சியின் முதன்மையான இலக்கு ‘அனைவருக்கும் அனைத்தும்; எல்லோருக்கும் வளர்ச்சி; எளியோருக்கும் ஏற்றம்’ என்பதுதான். வாய்ப்புகளை உருவாக்கி, புறந்தள்ளப்பட்ட மக்களுக்கு அந்த வாய்ப்புகள் சென்றடையச் செய்யவே நாளும் பாடுபட்டு வருகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு. வன்முறையிலோ வெறுப்பு அரசியலிலோ என்றைக்கும் நம்பிக்கையற்ற அரசு இது! வெறுப்பின் பெயரால் அரசியல் ஆதாயம் தேடவும் திராவிட மாடல் ஆட்சிக்குக் களங்கம் கற்பிக்கவும் எடுக்கப்படும் முயற்சிகள் ஒருபோதும் இம்மண்ணில் வெற்றி பெறாது என ஆ.ராசா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஸ்தூரி திடீர் சவால்: இன்று முதல் நான் தெலுங்கானா சாரி.. ஆந்திரா பாலிட்டிக்ஸிலும் குதிக்கிறேன்…!

சென்னை போயஸ் தோட்டத்தில் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, தம்மை தெலுங்கு மக்களிடம் இருந்து பிரிக்க நினைப்பவர்களுக்கு பதிலடியாக ஆந்திரா அரசியலில் தாம் குதிக்கப் போவதாக நடிகை கஸ்தூரி சொடக்குப் போட்டு ஆவேசமாக பேசினார்.

பிராமணர்களை வந்தேரிகள் எனக் கூறும் நபர்கள் தமிழர்களா என்றுதான் நான் பேசினேன். என் மாமியார் வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள்தான். என்னை தெலுங்கு பேசும் மக்கள் மருமகளாகவும் அவர்கள் வீட்டு மகளாகவும் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழும் தெலுங்கும் எனக்கு இரு கண்கள் போன்றது. பொய்யான குற்றச்சாட்டுக்கு ஓடி ஒளியும் ஆள் நான் இல்லை. எனக்கு குடிப்பழக்கமே கிடையாது. என்னை ஓசி குடி என்கிறார்கள், குடிகாரி என சித்தரிக்கிறார்கள். எத்தனையோ பொய்களை பார்த்துவிட்டேன் என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கோரி நேற்றைய தினம் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசுகையில், நான் ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்து 4 வருஷம் ஆகுது.. இங்க சினிமாவை விடுங்க.. தொலைக்காட்சிகளில் நடுவர் ஆக கூட எனக்கு வாய்ப்பு தரக் கூடாது என மேலிடத்தில் இருந்து பிரஷர் தருவதாக சொல்கின்றனர். சுதந்திரப் போராட்டத்தில் உயிரைக் கொடுத்தவர்கள் பெரும்பாலானவர்கள் அந்தணர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ் அந்தணர்கள். தமிழர்கள். ஆரிய வந்தேறி.. ஆரிய வந்தேறி என்கிறார்கள்.. யார் ஆரிய வந்தேறி? கைபர் போலன் வழியாக பல மதத்தினர் வந்தாங்க..

அதை எல்லாம் பேச ஆரம்பிச்சா உங்க ஓட்டுதானே குறையும்.. 4,000 வருஷத்துக்கு முன்னாடி வந்ததாக சொல்லப்படுவதைப் பற்றி சொல்றீங்களே.. ஆரியர்கள் இங்கே வருகை தந்த போது ஷத்ரியர்கள் இடத்தில் வன்னியர்கள் இணைந்து கொண்டார்களோ, வைசியர் பாகுபாட்டில் செட்டியார்கள், முதலியார்கள், வேளாளர்கள் இணைந்து கொண்டார்களோ கோவில் பணிகளைச் செய்கிறவர்களில் சிவாச்சாரியார்கள், ஐயர்கள், ஐயங்கார்கள் , பண்டாரங்கள் போன்றவர்கள் இணைந்து கொண்டார்கள்.

300 வருஷம் முன்னாடி ஒரு ராஜாவுக்கு கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளிரோ சேவைகள் செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்?. அதனால்தானே தமிழர் முன்னேற்றக் கழகம்னு பெயர் வைக்க முடியமலை.. திராவிடர்கள் பெயர் கண்டுபிடிச்சீங்க என்றார். மேலும் ஜம்மு காஷ்மீர் போல தமிழ்நாட்டில் பிராமணர்கள் இனப்படுகொலை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது என கஸ்தூரி பேசியிருந்தார்.

இந்நிலையில் இவருடைய பேச்சுக்கு தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வீடியோ மூலம் கண்டனம் தெரிவித்து தனது கருத்தை திரும்ப பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அது போல் பாஜக அமர் பிரசாத் ரெட்டியும், நடிகை கஸ்தூரி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து சென்னை போயஸ் தோட்டத்தில் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, பிராமணர்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்லும் திக, திமுக, திமுகவுடன் வெட்கமே இல்லாமல் சேர்ந்திருக்கும் கட்சிகளைத்தான் அப்படி சொன்னேன். தெலுங்கு மொழி பேசும் மக்களை அப்படி நான் சொல்லவே இல்லை. நான் பேசியதை திரித்து எனக்கு எதிராக தெலுங்கு மக்களை திருப்பிவிட முயற்சிக்கின்றனர் என்றார்.

மேலும் இன்று முதல் நான் தெலுங்கானா சாரி.. ஆந்திரா பாலிட்டிக்ஸிலும் குதிக்கிறேன். நான் தமிழக பாலிட்டிக்ஸில் இன்னும் அறிவிக்கவில்லை. அதுக்கு முன்னாடி நான் ஆந்திரா பாலிட்டிக்ஸில் குதிக்கிறேன். என்னை ஏன் தெலுங்கு மக்கள் கிட்ட இருந்து பிரிக்க முயற்சி செய்தீங்கதானே.. ரொம்ப தேங்க்ஸ். வாய்ப்புக்கு நன்றி எனகஸ்தூரி தெரிவித்தார்.

கஸ்தூரி கேள்வி: நான் சொன்னது என்ன, நீங்கள் திரித்து போட்ட தலைப்பு என்ன..!

சென்னை போயஸ் தோட்டத்தில் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நான் பேசிய கருத்து நான் சொன்னது என்ன, நீங்கள் திரித்து போட்ட தலைப்பு என்ன? என நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார்.

பிராமணர்களை வந்தேரிகள் எனக் கூறும் நபர்கள் தமிழர்களா என்றுதான் நான் பேசினேன். என் மாமியார் வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள்தான். என்னை தெலுங்கு பேசும் மக்கள் மருமகளாகவும் அவர்கள் வீட்டு மகளாகவும் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழும் தெலுங்கும் எனக்கு இரு கண்கள் போன்றது. பொய்யான குற்றச்சாட்டுக்கு ஓடி ஒளியும் ஆள் நான் இல்லை. எனக்கு குடிப்பழக்கமே கிடையாது. என்னை ஓசி குடி என்கிறார்கள், குடிகாரி என சித்தரிக்கிறார்கள். எத்தனையோ பொய்களை பார்த்துவிட்டேன் என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கோரி நேற்றைய தினம் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில்  ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசுகையில், நான் ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்து 4 வருஷம் ஆகுது.. இங்க சினிமாவை விடுங்க.. தொலைக்காட்சிகளில் நடுவர் ஆக கூட எனக்கு வாய்ப்பு தரக் கூடாது என மேலிடத்தில் இருந்து பிரஷர் தருவதாக சொல்கின்றனர். சுதந்திரப் போராட்டத்தில் உயிரைக் கொடுத்தவர்கள் பெரும்பாலானவர்கள் அந்தணர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ் அந்தணர்கள். தமிழர்கள். ஆரிய வந்தேறி.. ஆரிய வந்தேறி என்கிறார்கள்.. யார் ஆரிய வந்தேறி? கைபர் போலன் வழியாக பல மதத்தினர் வந்தாங்க..

அதை எல்லாம் பேச ஆரம்பிச்சா உங்க ஓட்டுதானே குறையும்.. 4,000 வருஷத்துக்கு முன்னாடி வந்ததாக சொல்லப்படுவதைப் பற்றி சொல்றீங்களே.. ஆரியர்கள் இங்கே வருகை தந்த போது ஷத்ரியர்கள் இடத்தில் வன்னியர்கள் இணைந்து கொண்டார்களோ, வைசியர் பாகுபாட்டில் செட்டியார்கள், முதலியார்கள், வேளாளர்கள் இணைந்து கொண்டார்களோ கோவில் பணிகளைச் செய்கிறவர்களில் சிவாச்சாரியார்கள், ஐயர்கள், ஐயங்கார்கள் , பண்டாரங்கள் போன்றவர்கள் இணைந்து கொண்டார்கள்.

300 வருஷம் முன்னாடி ஒரு ராஜாவுக்கு கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளிரோ சேவைகள் செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்?. அதனால்தானே தமிழர் முன்னேற்றக் கழகம்னு பெயர் வைக்க முடியமலை.. திராவிடர்கள் பெயர் கண்டுபிடிச்சீங்க என கஸ்தூரி பேசினார்.

இந்நிலையில் இவருடைய பேச்சுக்கு தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வீடியோ மூலம் கண்டனம் தெரிவித்து தனது கருத்தை திரும்ப பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அது போல் பாஜக அமர் பிரசாத் ரெட்டியும், நடிகை கஸ்தூரி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இப்படியாக கஸ்தூரியின் பேச்சுக்கு தொடர்ந்து எதிர்ப்பு வந்த நிலையில் அவரது தனது ட்விட்டர் பக்கத்தில் கூட இது பொய். நான் சொன்னது என்ன, நீங்கள் திரித்து போட்ட தலைப்பு என்ன? தமிழகத்தில் வந்தேறி தெலுங்கர் சிலர் தமிழினம் என்று சொல்லிக் கொண்டு பிராமணரை தமிழரில்லை என்கிறார்கள் என சில ஊடகங்களில் போட்ட செய்தியை சுட்டிக் காட்டி கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

கஸ்தூரி வீட்டு முன்பு திரண்ட திமுக..! முட்டி நிக்குது முட்டி வரை சாக்கடை தண்ணி..!

சென்னையில் எப்போது மழை வந்தாலும், திமுக அரசை குற்றஞ்சாட்டி, நடிகை கஸ்தூரியின் காரசாரமான விமர்சனங்கள் எழுவது வாடிக்கையானஒன்றாகும். அந்தவகையில், தற்போது சென்னையில் மழை வெளுத்து கட்டிவரும் நிலையில், மறுபடியும் புத்தம் புதிய விமர்சனங்களுடன் கஸ்தூரி வந்திருக்கிறார்.

கடந்த வருடம் பெய்த மழை அளவுக்கு, சென்னை பாதிக்கப்பட்டு விடுமோ? என்ற கலக்கம் சென்னைவாசிகளை கவ்வி வந்தது. ஆனால், 20 செ.மீ. அளவுக்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பில்லை, சென்னை ஆபத்திலிருந்து தப்பிவிட்டது என்று வானிலை ஆய்வாளர்கள் கணிப்புகளை சொல்லி வருகிறார்கள்.

இது ஒருவகையில் சென்னை மக்களுக்கு ஆறுதலாக இருக்கிறது என்றாலும், சாலைகளில் தேங்கியிருக்கும் வெள்ளநீர் எப்போது வடியும் என்ற கவலையிலும் ஆழ்ந்துள்ளனர். 3 நாளைக்கு சென்னைக்கு ரெட் அலர்ட் என்றதுமே, அரசு இயந்திரம் மும்முரமாக களமிறங்கியது.. எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழக அரசு 2 தினங்களுக்கு முன்பே முடுக்கிவிட்டது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது சம்பந்தமாக தலைமை செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். வெள்ள பாதிப்பு பகுதிகளை நேரடியாகவே சென்று பார்வையிட்டார். மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் மீட்பு பணிகளிலும், நிவாரண பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து அதிருப்திகளை தெரிவித்து வருகின்றன. அதேசமயம், தமிழக அரசு முன்னெடுத்துள்ள நிவாரண நடவடிக்கைகளை திமுக கூட்டணி கட்சிகள் பாராட்டி வருகின்றன.

அந்தவகையில், திமுக ஆதரவாளரும், விசிகவின் முக்கிய பிரமுகருமான டாக்டர் ஷர்மிளா ட்வீட் ஒன்றினை பதிவிட்டிருக்கிறார். அதில், “மழையை பற்றி ஓவரா பேசிப் பேசி ஒரு பீதியை கிளப்ப முயற்சி பண்றாங்களோன்னு தோணுது… முன்எச்சரிக்கையுடன் இருங்க.. பாதுகாப்பா செயல்படுங்க… ஆனா மழையை ரசிக்க மறந்துடாதீங்க… நமக்கு வருஷத்துல ரெண்டு மாசம் தான் இந்த வாய்ப்பு கிடைக்கும்” என்று பதிவிட்டிருக்கிறார்.

ஷர்மிளாவின் இந்த பதிவை பார்த்தமே நடிகை கஸ்தூரி டென்ஷன் ஆகிவிட்டார்.. இதையடுத்து, ஷர்மிளாவுக்கு பதிலடி தந்துள்ளார். கஸ்தூரி தன்னுடைய ட்வீட்டில், “ரோம் நகரம் எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். இந்தம்மா மழைய ரசிக்க சொல்லுது. எங்க வீட்லல்லாம் முட்டி வரை சாக்கடை தண்ணி முட்டி நிக்குது. பழைய பில்டிங். மழைய ரசிக்க முடியல . உங்க மாடி வீட்டுல இருக்கவச்சு சூடா டீ சம்சா குடுத்தீங்கன்னா நாங்களும் ரசிப்போம்” என்று கிண்டலடித்துள்ளார்.

இதைக்கண்ட திமுக தொண்டர்களோ, பதிலுக்கு ஓடிப்போய் கஸ்தூரி வீட்டு வாசலில் நின்று ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளனர்.. அந்த வீடியோவில் சாலைகளில் எங்குமே தண்ணீர் தேங்கவில்லை.. மழை பெய்தற்கான அறிகுறியே அதில் தென்படவில்லை.. முட்டிவரைக்கும் சாக்கடை தண்ணீர் இருப்பதாக கஸ்தூரி சொன்ன நிலையில், திமுகவினர் இப்படியொரு வீடியோவை எடுத்து கஸ்தூரிக்கு பதிலடி தந்துள்ளனர்.