கமல்ஹாசன்: இந்த மொழியைப் படி என்று திணித்தால் தூக்கி வீசிவிடுவார்கள்..!

தமிழக மக்கள் மீது இந்தி மொழியைத் திணிக்க முயற்சி செய்கிறார்கள். தங்களுக்கு என்ன மொழி வேண்டும், எந்த கல்வி வேண்டும் என்பது தமிழர்களுக்குத் தெரியும். ஏன் சிறு குழந்தைகூட அறியும். விருப்பமான மொழியை கற்பார்கள். ஆனால், இந்த மொழியைப் படி என்று திணித்தால் தூக்கி வீசிவிடுவார்கள் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று கொடியேற்றினார். பின்னர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசினார். அப்போது, உறவு என்பது நீடிக்கலாம், நீடிக்காமல் போகலாம்.

ஆனால், தமிழக மக்கள் என் மீது கொண்ட உறவு உணர்வாக, அன்பாக மாறி தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. நம் அனைவரையும் இணைப்பது தமிழ்மொழிதான். தமிழை எவராலும் கீழே இறக்கிவிட முடியாது. சிலர் என்னை தோற்றுப்போன அரசியல்வாதி என விமர்சனம் செய்கிறார்கள். தோல்வியில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், நான் 20 ஆண்டுகளுக்கு முன்னரே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் என்பதுதான்.

அவ்வாறு முன்கூட்டியே அரசியலுக்கு வந்திருந்தால் நான் நிற்கும் இடமும், நான் பேசும் வார்த்தையும் வேறாக இருந்திருக்கும். ரசிகர்கள் வேறு; வாக்காளர்கள் வேறு என்பதை எனது அரசியல் அனுபவத்தில் புரிந்துகொண்டேன். தமிழக மக்கள் மீது இந்தி மொழியைத் திணிக்க முயற்சி செய்கிறார்கள். தங்களுக்கு என்ன மொழி வேண்டும், எந்த கல்வி வேண்டும் என்பது தமிழர்களுக்குத் தெரியும். ஏன் சிறு குழந்தைகூட அறியும். விருப்பமான மொழியை கற்பார்கள்.

ஆனால், இந்த மொழியைப் படி என்று திணித்தால் தூக்கி வீசிவிடுவார்கள். மொழியைக் காரணம் காட்டி கல்விக்கான நிதியைத் தர மறுப்பது, மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க கைச்செலவுக்கு பணம் தரமாட்டோம் என்று சொல்வதற்கு சமம். மொழியும், கல்வியும் அனைவருக்கும் பொதுவானது. இந்த ஆண்டு நாடாளுமனறத்தில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும், அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் மநீமவின் குரல்கள் ஒலிக்கும். எனவே, அடுத்த ஆண்டு தேர்தலுக்கான உழைப்பை இப்போதே தொடங்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

கமல்ஹாசன் சூளுரை: நாடாளுமன்றத்தில் மநீம குரல் ஒலிக்கும்..!

நாடாளுமன்றத்தில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்கவிழாவில் கமல்ஹாசன் சூளுரைத்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று கொடியேற்றினார். பின்னர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசினார். அப்போது, உறவு என்பது நீடிக்கலாம், நீடிக்காமல் போகலாம்.

ஆனால், தமிழக மக்கள் என் மீது கொண்ட உறவு உணர்வாக, அன்பாக மாறி தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. நம் அனைவரையும் இணைப்பது தமிழ்மொழிதான். தமிழை எவராலும் கீழே இறக்கிவிட முடியாது. சிலர் என்னை தோற்றுப்போன அரசியல்வாதி என விமர்சனம் செய்கிறார்கள். தோல்வியில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், நான் 20 ஆண்டுகளுக்கு முன்னரே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் என்பதுதான். அவ்வாறு முன்கூட்டியே அரசியலுக்கு வந்திருந்தால் நான் நிற்கும் இடமும், நான் பேசும் வார்த்தையும் வேறாக இருந்திருக்கும். ரசிகர்கள் வேறு; வாக்காளர்கள் வேறு என்பதை எனது அரசியல் அனுபவத்தில் புரிந்துகொண்டேன்.

தமிழக மக்கள் மீது இந்தி மொழியைத் திணிக்க முயற்சி செய்கிறார்கள். தங்களுக்கு என்ன மொழி வேண்டும், எந்த கல்வி வேண்டும் என்பது தமிழர்களுக்குத் தெரியும். ஏன் சிறு குழந்தைகூட அறியும். விருப்பமான மொழியை கற்பார்கள். ஆனால், இந்த மொழியைப் படி என்று திணித்தால் தூக்கி வீசிவிடுவார்கள். மொழியைக் காரணம் காட்டி கல்விக்கான நிதியைத் தர மறுப்பது, மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க கைச்செலவுக்கு பணம் தரமாட்டோம் என்று சொல்வதற்கு சமம். மொழியும், கல்வியும் அனைவருக்கும் பொதுவானது.

இந்த ஆண்டு நாடாளுமனறத்தில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும், அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் மநீமவின் குரல்கள் ஒலிக்கும். எனவே, அடுத்த ஆண்டு தேர்தலுக்கான உழைப்பை இப்போதே தொடங்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின்: மதவாத – பிளவுவாத அரசியலை சரியான தளத்தில் நின்று எதிர்த்து வரும் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்..!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கலைஞானி என போற்றப்பட்ட திரையுலகின் பேராளுமை. திமுக தலைவரின் அன்பு நண்பராக – திமுகவோடு கரம் கோத்து ஓரணியாய் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் முற்போக்கு முகம்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மதவாத – பிளவுவாத அரசியலை சரியான தளத்தில் நின்று எதிர்த்து வரும் அவரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்!” உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசனுக்கு திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்கு என மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “பிறக்கின்ற புதுமைகளுக்கெல்லாம் இந்தியத் திரையுலகின் வாயிற்கதவுகளைத் திறக்கின்ற கலைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்கு – பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் அருமை நண்பர் – மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தொண்டு சிறக்க விழைகிறேன்!” மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கலைஞரின் நெஞ்சத்தில் தனக்கெனத் தனி இடம்பெற்றவர் கமல்ஹாசன்

கலைஞர் நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வர முடியாதது குறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில்; “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். முன்னரே ஒப்புக்கொண்ட பணிகளால் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை.

நவீனத் தமிழகத்தை நிர்மாணித்தவரும், இந்திய அரசியலில் மாபெரும் சக்தியாக விளங்கியவரும், வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காகவும், தமிழர் நலன்களுக்காகவும் அர்ப்பணித்த வரலாற்று நாயகருக்கு சிறப்பான முறையில் நூற்றாண்டு விழா நடத்தி, முத்தாய்ப்பாக நாணயம் வெளியாக பெருமுயற்சி எடுத்த நண்பர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பாராட்டு தெரிவித்தேன். அவரது வெளிநாட்டுப் பயணம் வெற்றி பெற வாழ்த்தினேன்” என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்; ” தலைவர் கலைஞரின் நெஞ்சத்தில் தனக்கெனத் தனி இடம்பெற்றவரும் என் மீது அளவற்ற அன்புகொண்டவருமான அருமை நண்பர் மக்கள் நீதிமய்யம் தலைவர் ‘கலைஞானி’ கமல்ஹாசன் அவர்களது வாழ்த்துக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்: வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காகவும், தமிழர் நலன்களுக்காகவும் அர்ப்பணித்த வரலாற்று நாயகன்

கலைஞர் நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வர முடியாதது குறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில்; “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். முன்னரே ஒப்புக்கொண்ட பணிகளால் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை.

நவீனத் தமிழகத்தை நிர்மாணித்தவரும், இந்திய அரசியலில் மாபெரும் சக்தியாக விளங்கியவரும், வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காகவும், தமிழர் நலன்களுக்காகவும் அர்ப்பணித்த வரலாற்று நாயகருக்கு சிறப்பான முறையில் நூற்றாண்டு விழா நடத்தி, முத்தாய்ப்பாக நாணயம் வெளியாக பெருமுயற்சி எடுத்த நண்பர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பாராட்டு தெரிவித்தேன். அவரது வெளிநாட்டுப் பயணம் வெற்றி பெற வாழ்த்தினேன்” என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

Kamal Haasan: தமிழகத்தில் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமையகத்தில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம், துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, ஆர்.தங்கவேலு மற்றும் நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், “கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் வெகு விரைவில் சில மாற்றங்களை கொண்டு வரவிருக்கிறேன். இதற்கான முன்னோட்டாம்தான் செயற்குழு கூட்டம்” என தெரிவித்தார். இக்கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் நேரத்தில், தமிழகத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும்.

`நம்மவர் நூலகம்’ அமைக்க உதவும் கட்சித் தலைவர், கமல் பண்பாட்டு மையம், வட அமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர் சி.ஆர்.மதுசூதன் ஆகியோருக்கு பாராட்டுகள். கருணாநிதிக்கு நாணயம் வெளியிட்டமைக்கு பாராட்டு. எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைத்த வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். நடுத்தர வர்க்கத்தினருக்கு மத்திய பட்ஜெட்டில் சலுகை அளிக்க வேண்டும்.

பருவமழையின்போது பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்டவற்றுக்கு தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்களை மத்திய, மாநில அரசுகள் அமைக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Annamalai: கமலஹாசனுக்கு மனநல மருத்துவர் ஆலோசனை அவசியம்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து, முகப்பேர் கலெக்டர் நகர் சிக்னல் அருகே கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM machine) ஒரே வேட்பாளர், ஒரே பட்டன் தான் இருக்கும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், தேசியக் கொடியின் மூவர்ணத்தை மாற்றி காவி நிறத்தை மட்டுமே நிறுவுவதுதான் பாஜகவின் நோக்கம் என்றும் சாடினார். திராவிட மாடல் என்பது நாடு தழுவியது எனவும் கமல்ஹாசன் கூறினார்.

இதேபோல வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து சென்னை ஓட்டேரியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, கட்சி தொடங்கிய நாளில் இருந்து வடசென்னைக்கு அதிக முறை வந்து செல்பவன் நான்.

என்னை போன்ற பலரின் கோரிக்கைக்கு இணங்க ரூ.1000 கோடி வடசென்னை வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. குடிசை மாற்று வாரியம் என்னும் வார்த்தையை கொண்டு வந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. குடிசையெல்லாம் மாற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்து 40 ஆண்டுகளாகின்றன. அதைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் மத்தியிலோ வெளிநாடுகளில் இருந்து யாரேனும் வந்தால் குடிசை மறைப்பு வாரியம் என்பது போல் குடிசையை திரை போட்டு மறைத்து விடுகின்றனர்.

அந்த ஏழ்மை அவர்களால் வந்ததுதானே. இங்கு இருப்பதைபோல பெண்களுக்கு உரிமைத் தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம் போன்றவை எத்தனை மாநிலங்களில் வழங்கப்படுகிறது என பார்க்க வேண்டும். குஜராத் மாடலில் இதெல்லாம் வழங்கப்படவில்லை. அவர்கள் 2050-ல் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இலக்கை, தமிழகம் இப்போதே அடைந்துவிட்டது. ஊழல் என பேசுபவர்கள் தேர்தல் பத்திரம் என்னும் உலக மகா ஊழலை சட்டத்தை வளைத்து செய்திருக்கின்றனர். 10 ஆண்டுகாலம் நடந்த ஆட்சி டிரெய்லர்தான்.

மெயின் படம் போட காத்துக் கொண்டிருக்கின்றனர். உணவு, உடை உள்ளிட்டவற்றை அவர்கள் முடிவு செய்வார்கள். அது நடக்கக் கூடாது. இது மக்களுடன் ஒன்றாத அரசு என கமல்ஹாசன் பேசினார்.

அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பிரச்சாரத்தில் மத்திய அரசு நாக்பூரை தேசிய தலைநகரமாக மாற்ற திட்டமிட்டு வருவதாகவும் அதனால், பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என கமல்ஹாசன் பேசி இருந்தார். இந்த விஷயம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் அண்ணாமலை குப்புசாமி, “அவரை மெண்டல் ஹாஸ்பிட்டலுக்கு போயி மூளையை சோதனை செய்யணும்.. அது கமல்ஹாசனாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் அவர்களுக்கு மூளை சோதனை செய்யப்படவேண்டும்… உண்மையில், அவர்கள் நன்றாக இருக்கிறார்களா? சரியாக சாப்பிடுகிறார்களா? சுய நினைவோடுதான் இருக்கிறார்களா? அவர்களுக்கு இருக்கும் இரண்டு மூளைகளும் வேலை பார்க்கிறதா?? என மருத்துவ ஆலோசனை அவருக்கு கொடுக்கணும்..

நல்ல உளவியல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று அவருக்கு ஆலோசனை கொடுக்க வேண்டும்..” என சீறினார். தொடர்ந்து பேசிய அவர், நாக்பூரை எப்படி இந்தியாவின் தலைநகராக மாற்றமுடியும் ?? என பதிலுக்கு கேள்வியைக் கேட்டார்.. மேலும், இந்தியாவின் ஒரு தலைநகராக சென்னையை கொண்டுவாருங்கள்.. தென் மாநிலத்திற்கு கொண்டுவாருங்கள் என்றால் அதனை நான் ஏற்றுக்கொள்வேன்..

கமல்ஹாசன், எங்கேயே இருந்துட்டு, நாக்பூரில் RRS அலுவலகம் இருக்கிறது.. அதனால், நாகபூரை தலை நகராக மாற்றிவிடுவார்கள் என பேசுகிறார். அதனால், கமலுக்கு கண்டிப்பாக மூளை பரிசோதனை வேண்டும்.. உண்மையில், சுயநினைவோடுதான் பேசுறாரா ?

ஆரோக்கியமான கருத்துக்களை பேசுகிறாரா? அல்லது, திமுகவிக்கு தன்னுடைய கட்சியை ஒரு ராஜ்ஜிய சபா சீட்டிற்காக விற்றதனால் இப்படி கூவவேண்டுமே என நினைக்கிறாரா?? என்பதனை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்” என அண்ணாமலை குப்புசாமி பேசினார்.

கமல்ஹாசன் சாப்பிடும் பருக்கையில் உதயநிதி ஸ்டாலின் பெயர்..

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வரும் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை கோயம்புத்தூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது. இந்த பாதயாத்திரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடன், கோயம்புத்தூர் தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பங்கேற்றார். ஏராளமான பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய அண்ணாமலை, “பாஜக ஒரு நாள் ஆட்சிக் கட்டிலில் அமரும். கோயம்புத்தூர் தேசியம், ஆன்மிகம், உண்மையின் பக்கம் இருக்கும் என்பதற்கு, கடந்த முறை கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் பாஜக பெற்ற வெற்றியே சாட்சியாக உள்ளது. கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜகவின் கோட்டை என்பதை நிரூபித்துக் காட்டுவோம். விக்ரம் படத்திற்கு கூட்டம் வருவதைப் போல நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு கூட்டம் சேரும் என கமல்ஹாசன் பேசியதை போல நான் பேசவில்லை.

1996-ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கோயம்புத்தூர் கோரமான தீவிரவாத தாக்குதலுக்குள்ளாகி 25 ஆண்டுகள் பின்னால் போனது. 2006 திமுக ஆட்சியில் வரலாறு காணாத மின்வெட்டால் தொழில்கள் பாதிக்கப்பட்டன. மீண்டும் நடக்க வேண்டியிருந்த மாபெரும் விபத்தில் இருந்து கோட்டை ஈஸ்வரன் நம்மைக் காப்பாற்றினார். அதை முதலமைச்சர் ஸ்டாலின் சிலிண்டர் விபத்து என்றார். தீவிரவாத செயலில் ஈடுபட்ட 13 பேரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது. வானதி சீனிவாசன் குரல் கொடுக்கவில்லை என்றால், இதில் உயிரிழந்த நபருக்கு 10 இலட்ச ரூபாய் கொடுத்து சுதந்திர போராட்ட தியாகி என்று சொல்லியிருப்பார்கள்.

திமுக வரும் போது கோயம்புத்தூருக்கு தீய சக்தி வந்தது போலாகி விடும். செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றதால் மற்றொரு ஆபத்தில் இருந்தும் கோயம்புத்தூர் மக்கள் தப்பியுள்ளார்கள். நாடாளுமன்ற தேர்தலில் திமுக என்ற தீய சக்தியை அப்புறப்படுத்த வேண்டும். மத்திய அரசு மற்றும் வானதி சீனிவாசன் என்ற டபுள் இன்ஜின் கோயம்புத்தூரை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இழுத்துக் கொண்டுள்ளது.

பாஜக ஆட்சிக்கு வரும்போது சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு வானதி சீனிவாசன் உதாரணம். சில அரசியல் தலைவர்களுக்கு வானதி சீனிவாசன் மீது தான் கண். 6 மாதத்திற்கு ஒருமுறை மக்கள் நீதி மய்யம் இங்கு ஆர்ப்பாட்டம் செய்ய வந்து விடுவார்கள். ஆடல் பாடல் நடத்தியும் மக்கள் ஏமாறவில்லை என்பதால், கோயம்புத்தூர் மீது கமல்ஹாசனுக்கு கண் உள்ளது. கமல்ஹாசனுக்கு காங்கிரசில் சேர்வதா? திமுக சேர்வதா? என்ற குழப்பத்திற்கு 6 மாதமாக விடை தேடிக் கொண்டிருக்கிறார்.

கமல்ஹாசன் சாப்பிடும் பருக்கையில் கூட உதயநிதி ஸ்டாலின் என்ற பெயர் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இது தான் கமல்ஹாசனின் வீரமா? தன்மானமா? நடிப்பிற்கு இலக்கணமாக உள்ள கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலினை பார்த்து பம்முகிறார். கமல்ஹாசனின் தோலை கோயம்புத்தூர் மக்கள் முழுமையாக உரித்து வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்கள் என தெரிவித்தார்.