உலக நாடுகளில் அமைதியை ஏற்படுத்த முடிகின்ற பிரதமர் மோடி..! வன்முறையால் பாதித்த மணிப்பூரில் ஏன் அதை செய்யவில்லை?

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், புருனேவுக்கு வரலாற்று பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கிருந்து சிங்கப்பூர் செல்கிறார். இப்படி அடிக்கடி விமானத்தில் பறக்கும் அவர் எப்போது மனிதாபிமான பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பதற்றமான மணிப்பூருக்கு அவர் செல்வாரா? மணிப்பூரில் வன்முறை வெடித்து இன்றுடன் சரியாக 16 மாதங்கள் ஆகிவிட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் வாழ்கின்றனர். அங்கு தவிக்கும் மக்களையும், சமூக குழுக்களையும், அரசியல் கட்சிகளையும் சந்தித்து பேசவும் மணிப்பூர் செல்லவும் இன்னமும் பிரதமர் மோடிக்கு நேரம் கிடைக்கவில்லை என்பது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. போர் சூழல் நிறைந்த உலக நாடுகளில் அமைதியை ஏற்படுத்த முடிகின்ற பிரதமர் மோடியால் வன்முறையால் பாதித்த மணிப்பூரில் மட்டும் ஏன் அதை செய்ய முடியவில்லை? என ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கே.எல்.ராகுல் ‘எக்ஸ்’ பதிவு: காவிரி எப்போதும் நமதே…, “காவிரி முழு கர்நாடகத்தின் சொத்து”

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து நேற்று பெங்களூருவில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு நடிகர், நடிகைகள் உட்பட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கர்நாடகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கே.எல்.ராகுலும் காவிரி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக கே.எல்.ராகுல் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:- ‘காவிரி எப்போதும் நமதே, காவிரி கர்நாடகத்தில் உற்பத்தியாகி அதிகளவு தண்ணீர் இங்கு குவிகிறது. ஆனால் அந்த தண்ணீரை பயன்படுத்த ஒவ்வொரு ஆண்டும் கன்னடர்கள் சட்ட போராட்டத்துடன் வீதியில் இறங்கி போராட வேண்டியுள்ளது. இதுதான் எங்களின் சோகம். காவிரி முழு கர்நாடகத்தின் சொத்து’ என கே.எல்.ராகுல் பதிவிட்டுள்ளார்.