பாஜக எம்எல்ஏ மீது அவதூறு வழக்கு தொடர அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்

பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி குறித்து பாஜக எம்எல்ஏ ராஜேஷ் சவுத்ரி தெரிவித்த கண்ணியமற்ற கருத்துக்காக அவர் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெள்ளிக்கிழமை ஒரு செய்தி தொலைக்காட்சியின் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், உத்தரப் பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தின் மன்ட் தொகுதியின் பாஜக எம்எல்ஏ ராஜேஷ் சவுத்ரி, “மாயாவதி உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக நான்கு முறை இருந்துள்ளார் என்பதில் சந்தேகமே இல்லை. நாங்கள் தான் அவரை முதல் முறையாக முதல்வராக்கிய தவறைச் செய்தோம். உத்தரப் பிரதேசத்தின் மிகவும் ஊழல் நிறைந்த முதல்வர் மாயாவதியே” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக எம்எல்ஏவின் இந்தக் கருத்தை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டித்துள்ளார். இதுகுறித்து இந்தியில் வெளியிட்டுள்ள பதிவில், “உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் பெண் முதல்வருக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ பயன்படுத்தி இருக்கும் தவறான சொற்கள் பாஜக தலைவர்கள் பெண்களுக்கு, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட பிரிவுகளில் இருந்து வருபவர்களுக்கு எதிராக எவ்வாளவு கசப்பைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

அரசியலில் வேறுபாடுகளுக்கு இடம் உண்டு, ஆனால் ஒரு பெண்ணாக அவரது கண்ணியத்தைக் கெடுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அவரை முதல்வராக உருவாக்கி தவறு செய்துவிட்டதாக பாஜக தெரிவித்திருக்கிறது. இது ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்துக்களை அவமதிக்கும் செயலாகும். மேலும் அவர் ஊழல் நிறைந்த முதல்வர் என்று ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது. பொதுவெளியில் இப்படி ஒரு கருத்தினை தெரிவித்ததற்காக பாஜக எம்எல்ஏ மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும்.

இப்படியான எம்எல்ஏக்களுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம், பாஜக பெண்களின் கண்ணியத்தினை புண்படுத்துகிறது. இதுபோன்றவர்கள் மீது பாஜக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது ஒரு தனிப்பட்ட எம்எல்ஏவின் தனிப்பட்ட கருத்து இல்லை, ஒட்டுமொத்த பாஜகவின் கருத்து என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.” என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

தலித் பெண் துப்பாக்கி முனையில் ஏழு பேர் கொண்ட கும்பல் பாலியல் கொடுமை..!

இந்தியாவில் உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீகார், டெல்லி, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் ஒரு மணி நேரத்துக்கு 4 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டம் கோட்வாலி கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான இளம் பெண் ஒருவர் தனது வாழ்வாதாரத்திற்காக கால்நடைகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை கிராமத்திற்கு அருகே உள்ள வயல்வெளிக்கு தான் வளர்க்கும் மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக சென்று உள்ளார். அப்போது அங்கு வந்த ஆண் நண்பருடன் அவர் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கண்டு அங்கு வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் அந்தப் பெண்ணை வழிமறித்துள்ளனர். மேலும் அவரது ஆண் நண்பரை கொடூரமாக தாக்கி அங்கிருந்து விரட்டி அடித்ததோடு தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணை கொலை செய்து விடுவதாக மிரட்டியது மட்டுமல்லாது அவரது ஆடைகளை அகற்றுமாறு துப்பாக்கி முனையில் மிரட்டி ஏழு பேரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும், இந்த கொடூர செயலை அவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர் சிறிது நேரத்திற்கு பிறகு அந்த கும்பலிடம் இருந்து தப்பிய அந்த இளம் பெண் கிராமத்திற்குள் வந்து தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தங்களது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான அவர்கள் இது குறித்து முஸாபஹா நகர் காவல் துறையினர் புகார் அளித்தனர் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இளம் பெண்ணுக்கு துப்பாக்கி முனையில் பாலியல் தொல்லை கொடுத்த ஏழு பேரை கைது செய்துள்ளதோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.