அண்ணாமலை சவால்: தற்குறிகள் உதயநிதிக்கு தைரியம் இருந்தால் கெட் அவுட் மோடி என சொல்லட்டும் பார்ப்போம் ..!!

தற்குறிகள் உதயநிதிக்கு தைரியம் இருந்தால் கெட் அவுட் மோடி கெட் அவுட் மோடி என சொல்லட்டுமே! உலகத் தலைவரை மதிக்கத் தெரியாத நபராக உதயநிதி இருக்கிறார் என அண்ணாமலை தெரிவித்தார். மத்திய அரசின் 2025 பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் கரூரில் நடைபெற்றது. இந்த பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தீயசக்தி திமுகவை வேரோடு அகற்ற வேண்டும் என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். கள்ளை குடித்த குரங்கு திமுகவின் ஆட்சி எப்படி இருக்கிறது என்றால் ஒரு பானையில் இருந்த கள்ளை குரங்கு குடித்து விடுகிறது. இதனால் தடுமாடிக் கொண்டிருந்த போது அதனை தேள் கொட்டி விடுகிறது. கள்ளை குடித்த குரங்கை தேள் கடித்துவிட்டால் அந்த குரங்கு எப்படி நடந்து கொள்ளுமோ அப்படித்தான் திமுக ஆட்சி இருக்கிறது.

தற்குறிகள் திமுகவின் உதயநிதி, அன்பில் மகேஷ் போன்ற தற்குறிகளை போல் அதே பாணியில் நான் பேச போகிறேன். நீ சூரியனை 11.30 மணிக்கு பார்க்கிறவன், நாங்கள் அதிகாலை 3 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்துவிட்டு 5 மணிக்கு கோப்புகளை எடுத்து பார்ப்பவர்கள். பிரதமர் மோடியை பார்த்து குற்றம்சாட்டுகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார்..

பிரதமர் மோடி முன்பு தமிழ்நாடு வந்தால், நாங்கள் கோ பேக் மோடி என்றோம். இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்கிறார்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நான் சொல்கிறேன்.. நீ சரியான ஆளாக இருந்தால்.. உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடினு சொல்லிப் பாரு.. எங்க அப்பா முதலமைச்சர்.. எங்க தாத்தா முதலமைச்சர்னு சொல்லி பாரு.. பார்க்கலாம் என தெரிவித்தார்.

இதுவரையில் எந்த மேடையிலும் நான் யாரையும் அவமரியாதையாக பேசியதே இல்லை. ஆங்கிலத்தில் பேசிய மோடி 2026 -ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் மீண்டும் திமுக வென்று ஆட்சி அமைத்தால் பஞ்சம் பிழைப்பதற்காக நாம் எல்லாரும் மாநிலத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்படும். பிரதமர் மோடி இந்தியை எங்கே திணிக்கிறார், தமிழகத்திற்கு அவர் வந்தால் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்.

விஜய் வித்யாஸ்ரம் பள்ளி உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்கு மூன்று மொழிகளை படிக்க வையுங்கள் என்பதைத்தான் மோடி சொல்கிறார். அவர் இந்தியை திணிக்கவில்லை. அன்பில் மகன் பிரெஞ்ச் படிக்கிறார். நடிகர் விஜய், படூரில் சொந்தமாக விஜய் வித்யாஸ்ரம் நடத்தி வருகிறார் என அண்ணாமலை தெரிவித்தார்.

EVKS. இளங்கோவன்: தந்தையின் உறுதி, தாத்தாவின் கடும் உழைப்பு உதயநிதியிடம் இருக்கிறது..!

துணை முதலமைச்சராகும் உதயநிதியிடம் தந்தையின் உறுதியும், தாத்தாவின் உழைப்பும் உள்ளது என, காங்கிரஸ் மூத்த தலைவர் EVKS. இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் காங்கிரஸ் தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி மறைந்த கோவிந்தராஜன் சிலை திறப்பு விழா நடந்தது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, துணை முதலமைச்சராக பதவியேற்கும் உதயநிதிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எந்த பொறுப்பைக் கொடுத்தாலும் சிறப்பாக செய்யக்கூடியவர். கலைத் துறையில் சிறப்பாக பணியாற்றி, அமைச்சரான ஓராண்டில் சிறப்பாக பணி செய்தார்.

ஃபார்முலா 4 கார் பந்தயத்தை சென்னை மாநகரில் நடத்திக் காட்டிய பெருமை கொண்டவர். துணை முதலமைச்சராக அவர் பதவியேற்றால் சிறந்த முறையில் பணியாற்றுவார். உதயநிதி ஸ்டாலினுக்கு அவரது தந்தை முக. ஸ்டாலின் உறுதியும், தாத்தா கலைஞரின் கடுமையான உழைப்பும் உள்ளது. உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன கருத்துக்கு தேர்தலின்போது, இந்தியளவில் எதிர்ப்பு வந்தது. சனாதானத்தை பற்றி மிகத் தெளிவாக, வீரமாக பேசிய துணிச்சல் மிக்க இளைஞராக உதயநிதி இருந்தார்.

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவது குறித்து விமர்சனம் இரண்டு புறமும் இருக்கலாம். 471 நாள் சிறையில் ஜாமீன் கூட கொடுக்காமல், மத்திய அரசு பழிவாங்கும் செயலை செய்தது. உடல்நிலை சரியின்றி இதய பிரச்சினையில் இருந்த அவரை மத்திய அரசு வஞ்சித்தது. டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை தேர்தல் நேரத்தில் சிறையில் அடைத்தது போன்று எதிர்க்கட்சியில் தலைவர்களை சிறையில் வைத்தால் அடங்கி விடுவார்கள் என, மத்திய அரசு நினைக்கிறது.

இந்திய மக்கள் ஒரு மனதாக மோடியை தூக்கி எறியவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். அந்த எண்ணம் மோடிக்கு புரிந்ததால் அவரின் முகத்தில் உற்சாகம் கொஞ்சமும் இல்லை. வெளிநாடு செல்லும்போது, மட்டும் சிரிக்கிறார்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது அனைத்து கட்சியினரின் விருப்பம் தான். அது இப்போது சாத்தியம் இல்லை என்பது அனைத்துக் கட்சிகளும் சொல்லி இருக்கின்றனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் இது பற்றி தெளிவாக சொல்லியிருக்கிறார். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. கூட்டணி முன்பை விட வலுவாக இருக்கிறது.

திமுக பவள விழாவில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். இக் கூட்டணி எண்ணிக்கைக்காக இன்றி கொள்கைக்காக சேர்ந்தவர்கள். கூட்டணி ஒன்றுபட்டு இருக்கும். தமிழக காங்கிரஸ் செயல்பாடு நடந்து கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு வேலை கொடுக்கின்றனர். இன்னும் கொஞ்சம் தீவிர படுத்தவேண்டும் என EVKS இளங்கோவன் தெரிவித்தார்.