அம்பேத்கரின் 134-வது பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடித்த அண்ணல் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் 134-வது பிறந்தநாளை ஒட்டி தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் “சமத்துவ நாள் உறுதிமொழி” ஏற்கப்பட்டது.

திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், அம்பேத்கர் பிறந்தநாளான, சமத்துவ நாளினையொட்டி தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வபெருந்தகை, மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், தமிழச்சிதங்பாண்டியன், மாவட்டச் செயலாளர்கள் நே.சிற்றரசு, த.வேலு, மாதவரம் சுதர்சனம், திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, துணை அமைப்புச் செயலாளர் எஸ்.ஆஸ்டின் , திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, மருத்துவர் எழிலன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா. செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பெரியார், அம்பேத்கர் கருத்துகளை வளப்படுத்துபவர்” திருமாவளவன்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் தனது ட்விட்டர் பதிவில், “இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் – புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“நான் தலித்”: சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆகியும் என்ன பயன்..!?

எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது என்று அண்ணல் அம்பேத்கர் 1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது முன் வைத்த கருத்துகள்.

அதாவது ஆங்கிலேயர்களிடம் விடுதலைபெற்ற இந்தியா சாதி, மத அடக்குமுறையிலிருந்து என்றுதான் விடுதலை பெறுமோ என்ற ஏக்கம் இன்னும் கோடானகோடி தலித் மக்களிடையே பரவி கிடக்கிறது. நாடு சுதந்திரம் அடையும் முன்பே அண்ணல் அம்பேத்கர் மகாத்மா காந்தியிடம் முன் வைத்த கருத்துகள் இன்று நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கொண்டாடும் தினத்தில், தேசியக் கொடிக்கான விதிகள் மாறினாலும், குடியரசுத் தலைவர்களாக பல பட்டியலின மக்கள் வந்தாலும், இங்கு நிலவும் தலித் மக்கள் மீதான சாதிய ஒடுக்குமுறைகள் மாறவில்லை என்பதற்கு கள்ளக்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவி சுதா வரதராஜின் கடிதம் ஒரு உதாரணம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள எடுத்தவாய்நத்தம் கிராமம். இங்கு ஊராட்சி மன்றத் தலைவராக சுதா வரதராஜி என்பவர் பதவி வகித்து வருகிறார். சுதா வரதராஜி அவர்கள் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், “நான் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர். எங்கள் கிராமத்தில் எனக்கு முன்னாள் 10 ஊராட்சி மன்ற தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு மற்றும் சுதந்திர தின விழாவின்போது தேசியக் கொடியேற்றி வைத்து உள்ளனர்.

என்னை பட்டியலினப் பெண் தலைவர் என்பதால் சென்ற குடியரசுத் தின விழாவின்போது கொடியேற்றக் கூடாது என்று அப்போது பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக இருந்த அ.அருண்குமார் மற்றும் துணைத் தலைவர் த.கண்ணன் ஆகியோர் தடுத்துவிட்டனர். இந்த 75 -வது சுதந்திர தினத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொடியேற்ற வாய்ப்பளித்து தக்க பாதுகாப்பு வழங்கிய பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று எடுத்தவாய்நத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் சுதா வரதராஜி சுதந்திர தினத்தன்று கொடியேற்ற பாதுகாப்பு வழங்குமாறு மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதி இருப்பது அம்பேத்கர் 1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது முன் வைத்த கருத்து 75 -வது சுதந்திர தினத்தை மத்திய அரசு அமுத பெருவிழாவாக கொண்டாட தயாராகி வரும் நிலையிலும் ஜாதிய கொடுமைகள் சாகவில்லை என்பதை உணர்த்திக் கொண்டுள்ளது.

அதாவது, சுதந்திர தின விழாவுக்காக தேசியக்கொடி விதிமுறைகளில் கைத்தறி பருத்தி துணியால் மட்டுமே தேசிய கொடிகளை பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருந்த நிலையில், எந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பாலிஸ்டர், காட்டன், கம்பளி, பட்டு போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகளை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை செய்து அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், நாட்டின் பல கிராமங்களில் வாழும் தலித் மக்கள் ஜாதிய கொடுமைகளில் மீளமுடியாமல் இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார். அன்றே, அண்ணல் அம்பேத்கர் மகாத்மாக்கள் பலபேர் வருவார்கள் போவார்கள், ஆனால் நமது வாழ்க்கை நிலை அப்படியே தான் இருக்கிறது என்று கூறிய வார்த்தை இன்னமும் உறங்காமல் இருக்கின்றது என்பது நிதர்சனமான உண்மை.