பெண் துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இன்று சாலை மறியலை தடுக்க முயன்ற பெண் துணைக் காவல் கண்காணிப்பாளரின் தலை முடியைப் பிடித்து இழுத்து சிலர் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் கண்ணன் நேரடி விசாரணை நடத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டியைச் சேர்ந்த மினி லார் ஓட்டுநர் காளிகுமார் நேற்று தனது மினி லாரியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் குழாய் பதிப்பதற்கான உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு திருச்சுழி நோக்கி வந்து கொண்டிருந்தார். திருச்சுழி – ராமேஸ்வரம் சாலையில் கேத்தநாயக்கன்பட்டி விலக்கு அருகே வந்தபோது, 2 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் 5 பேர் மினி லாரியை நிறுத்தி காளிகுமாரை சரமாரியாத் தாக்கி அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இதையடுத்து காளிகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, காளீஸ்வரன், அருண்குமார், லட்சுமணன், பாலமுருகன், வீரசூரன், வேல்முருகன் ஆகிய 6 பேர் மீது திருச்சுழி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் காளிகுமாரின் உடல் செவ்வாய்க்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்படவிருந்த நிலையில், அவரது உறவினர்கள் ஏராளமானோர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் இன்று காலை குவிந்தனர். கொலையாளிகளை உடனே கைது செய்யக்கோரி அவர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

அப்போது அவர்களை அருப்புக்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் காயத்ரி தலைமையிலான காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சிலர் துணைக் காவல் கண்காணிப்பாளர் காயத்ரியை தள்ளிவிட்டு, அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்து தாக்கினர். இதனால், காவல்துறையினரும் மறியலில் ஈடுபட முயன்றவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரை கண்டித்து திருச்சுழி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த காவல் கண்காணிப்பாளர் கண்ணன் சம்பவ இடத்துக்கு வந்து நேரடி விசாரணை நடத்தினார். துணைக் காவல் கண்காணிப்பாளர் தாக்கப்பட்டது தொடர்பாக குமார், பொன்குமார் உள்ளிட்ட 4 பேரை பிடித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், துணைக் காவல் கண்காணிப்பாளர் காயத்ரி மீது தாக்குதல் நடத்திய ராமநாதபுரம் அருகே உள்ள நெல்லிகுளத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை கைது செய்தனர். மேலும், மினி லாரி ஓட்டுநர் காளிகுமார் கொலை வழக்கில் காளீஸ்வரன், அருண்குமார், லட்சுமணன், பாலமுருகன் ஆகியோரையும் காவல்துறை இன்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வீரசூரன், வேல்முருகன் ஆகிய இருவரையும் காவல்துறை தேடி வருகின்றனர்.

முன் பதிவு கவுண்டரிலும் யாரும் இல்ல… பயணி சரமாரி கேள்வி ..!?

சென்னை மயிலாப்பூர் ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யும் கவுண்டர்களில், ஒருவர் மட்டுமே பணியில் இருந்ததால் டிக்கெட் எடுக்க வந்த பயணி ஒருவர் பணியில் இருந்த ஊழியரிடம் சரமாரி கேள்வி

காஞ்சிபுரம் மாநகராட்சி முடங்கியது..! திமுக கவுன்சிலர்களின் உட்கட்சிப் பூசல் காரணமா..!?

காஞ்சிபுரம் மாநகராட்சி முடங்கியது..! திமுக கவுன்சிலர்களின் உட்கட்சிப் பூசல் காரணமா..!?

பி.எட். கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து..! ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை..!

வகுப்புகளுக்கு மாணவர்கள் வராமல் தேர்வெழுத வைக்கும் பி.எட். கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் காலங்களில் பி.எட். கல்லூரிகளில் முன்னறிவிப்பின்றி கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வெளிமாநில மையங்கள் மூலம் மாணவர்களை சேர்த்து வகுப்புக்கு வராமலே தேர்ச்சி வழங்குவதாகப் புகார் கூறப்படுகிறது.

வடிவேலு வழக்கில் சிங்கமுத்து 2 வாரம் கால அவகாசம் நீதிமன்றம் உத்தரவு..!

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு தாக்கல் செய்த மனுவில், 300 படங்களில் நடித்துள்ளேன். எனது நகைச்சுவை காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. சமூக வலைத்தளங்களில் எனது நகைச்சுவை காட்சிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நடிகர் சிங்கமுத்துவும் நானும் கடந்த 2000 முதல் இணைந்து நடித்து வருகிறோம். நாங்கள் சேர்ந்து நடித்த படங்கள் பெரும் வெற்றி படங்களாகும்.

இந்நிலையில் எனது வளர்ச்சியை பார்த்து பொறாமை அடைந்த சிங்கமுத்து எனக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார். இருவருக்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்னை ஏற்பட்டு அது தொடர்பான வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை யூடியூப் சேனல்களில் என்னை மிகவும் தரக்குறைவாக சிங்கமுத்து பேசியுள்ளார். இதனால், எனக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள நல்ல பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனக்கு மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

எனவே, எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்த சிங்கமுத்து எனக்கு நஷ்டஈடாக ரூ.5 கோடி தருமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது 2 வாரங்களுக்குள் பதில் தருமாறு சிங்கமுத்துவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது; பதில்மனு தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்து அவகாசம் கோரினார். நடிகர் சிங்கமுத்து தரப்பு கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு இட்டார்.

EMI கட்டாததால் போனை ஹேக் செய்த ‘IDFC BANK’… நடுத்தெருவில் கதறும் பெண்..!

சென்னை அண்ணாநகரில் ஈவன்ட் ஆர்கனைஸன் நடத்திவரும் அனிதா. சென்னை அண்ணாநகரில் உள்ள ஐசிஎஃப்சி வங்கியில் 6.90 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். கடந்த ஓராண்டாக எனக்கு கால் உடைந்து லிகமென்ட் கிழிந்து விட்டது. ஆகையால் கழிப்பறை சென்றாலும் நான் வாக்கர் வைத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும் அவரால் தனியாக நடக்க முடியாது. அனிதா கால் உடைந்து நான் படுத்தபடுக்கையாக இருந்ததால் அவரால் வாங்கிய கடனுக்காக தவணையை கட்ட முடியவில்லை.

ஒவ்வொரு முறையும் அவர்கள் போன் செய்து என்னிடம் இஎம்ஐ கேட்டால், “அடுத்த மாதம் எப்படியாவது முயற்சி செய்து கட்டி விடுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே வந்தேன். ஆனால் கடைசி 6 மாதங்களில் கூகுள் கான்டாக்ட்டில் உள்ள என் உறவினர்கள், என் கிளைண்டுகள் உள்ளிட்டோரின் மொபைல் எண்களை எடுத்து அனைவருக்கும் போன் செய்து, “நான் கடன் வாங்கி தவணையை கட்டவில்லை. எங்களிடம் ரூ 20 லட்சம், 25 லட்சம் பெற்றுவிட்டு ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டார்கள் ” என பேசிவிட்டார்கள்.

ஆனால் நான் கொடுக்க வேண்டியது வெறும் ரூ 2.70 லட்சம்தான். செலிபிரிட்டிகளுக்கு மேக்கப் செய்யும் ஒரு கலைஞருக்கு போன் செய்து “அனிதா ரூ 25 லட்சம் தர வேண்டும். அதை உங்களிடம் வாங்கிக் கொள்ள சொன்னார்” என வங்கி தரப்பு பொய் கூறியுள்ளது. இதையடுத்து அவர் உடனே எனக்கு போன் செய்து விஷயத்தை கேட்டார் . “நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை” என சொன்னேன்.

நான் யாருடைய போன் நம்பரையும் கொடுக்கவில்லை. என்னுடைய போனை ஹேக் செய்து கூகுள் கான்டாக்ட்டில் இருந்து கான்டாக்ட்களை எடுத்துவிட்டனர். நான் குடியிருக்கும் தெருவில் ஒவ்வொரு வீடாக கதவை தட்டி என் புகைப்படத்தை காட்டி ரூ 25 லட்சத்தை இந்த பெண் ஏமாற்றிவிட்டு இங்க குடியிருக்கிறார் என கூறியுள்ளனர். எனக்கு தெரிந்தவர் வீட்டுக்கு போய் “நான் அவரிடம் பணம் வாங்கிக்க சொன்னதாக” சொல்லி பிரச்சினை செய்ததால் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் பிரச்சினை வந்துவிட்டது.

நான் தங்கியிருக்கும் வீட்டின் ஓனரிடம் போய், “அனிதாவை உங்கள் வீட்டுக்குள் சேர்க்கக் கூடாது. மீறி சேர்த்தால் நோட்டீஸ் ஒட்டிவிடுவோம்” என மிரட்டியுள்ளனர். இதனால் வீட்டை காலி செய்யுமாறு ஓனர் வற்புறுத்துகிறார். 2 நாட்களாக மின் இணைப்பையும் ஓனர் துண்டித்துவிட்டார்.

கூகுள் கான்டாக்ட்டில் இருந்து போன் எண்களை எடுக்குமாறு எந்த ஆர்பிஐ விதிகளில் இருக்கிறது. நான் வாங்கிய கடனுக்கு எல்லோரிடமும் கேட்பதா, நான் வாங்கியதற்கு நான்தானே கட்ட வேண்டும். எனது காரை பறிமுதல் செய்ய 15 குண்டர்களை அனுப்பியுள்ளார்கள். நான் குடியிருக்கும் பகுதிக்கு வந்து யாரிடம் எல்லாம் நான் ரூ 25 லட்சம் வாங்கினேன் என சொல்லி என்னை அசிங்கப்படுத்தினார்களோ, அவர்களிடம் எல்லாம் வந்து ரூ 2.70 லட்சம்தான் தர வேண்டும் என வங்கித் தரப்பு சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் நான் போலீஸில் புகார் கொடுப்பேன். இவ்வாறு அந்த பெண் கண்ணீர் மல்க தெரிவித்து தமிழகமெங்கும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஃபார்முலா 4 எதிர்ப்பவர்கள் தற்சார்பு என மாடு மேய்க்க சொல்பவர்கள்..!

தெற்காசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் கடந்த சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் ஃபார்முலா -4 கார் பந்தயம் நடந்தது. அரசியல் ஆதாயத்திற்காக அரசியல்வாதிகள் வழக்கம்போல கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், ஃபார்முலா -4 பந்தயம் பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. அதே சமயம், இந்த கார் பந்தயத்திற்கு தொழிற்துறையினர் பெரும் வரவேற்பை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, இந்தியாவின் ‘டெட்ராய்ட்’ சென்னை என்றால் பெருமை கொள்பவர்கள் சொல்லும் காரணம், இங்கு அத்தனை ஆட்டோமொபைல் கம்பெனிகள் உள்ளன என்பதுதான். ஆட்டோமோபைல் துறையில் பல கம்பெனிகள் பல‌ விதமான ரேஸ்களில் கலந்து கொள்ள‌ தனித்தனியே அணிகளை வைத்துள்ளனர்.‌ ராலி, பார்முலா பந்தயங்கள், டிராக் ரேஸிங், மோட்டோகிராஸ், பைக் ரேஸிங் என‌ பலவிதமான பந்தயங்கள் உலகெங்கும் நடக்கின்றன. இந்த கம்பெனிகளின் சார்பாக பங்கேற்கும் டீம்கள், அவற்றில் முதலிடம் உள்பட பல வெற்றிகளை குவிப்பார்கள். ரேஸ்களில் வெற்றி பெற பல புதிய‌ கண்டுபிடிப்புகளையும் அறிமுகப்படுத்துவார்கள். அப்படி அறிமுகப்படுத்தப்பட்டது தான் ஸ்டியரிங் வீல்.

1894க்கு முன் காரில் ஸ்டியரிங் வீல் கிடையாது. அதுக்கு பதிலா ஒரு லீவர் இருக்கும். அதை பிடித்துதான் திருப்ப வேண்டும். ஆல்பிரட் வாசெரான் என்பவர் 1894ல் நடந்த பாரிஸ் ராலில ஸ்டியரிங் வீல் கொண்ட காரை ஓட்டினார். அவர் அந்த‌ பந்தயத்தில் வெல்லவில்லை. ஆனால்… அந்த ஸ்டியரிங் வீல் ஐடியா வென்றது. நமக்கு ஸ்டியரிங் வீல் கிடைத்தது.

1953ல் நடந்த ‘24 ஹவர்ஸ் ஆப் லீ மேன்ஸ் கிராண்ட் பிரீ’ பந்தயத்தில், ஜாகுவார் அணி புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட டிஸ்க் பிரேக் கார்களுடன் இறங்கியது. 1955ல் சிட்ரோயன் ரோடு கார்களுக்கு கொண்டு வந்தாங்க. இப்ப எல்லா கார்களிலும் இந்த பிரேக்குகள் தான். பத்தாண்டுகளுக்கு முன்பு ஹோண்டா சிட்டியில் ஆட்டோமேட்டிக் காரில் இருந்த பேடில் ஷிப்டர்ஸ் பேசு பொருளானது. இப்போது பல கார்களில் கிடைக்கிறது. இது 1989ல் ஃபெராரி அவர்களின் ரேசிங் காருக்கு கண்டுபிடித்தது. இப்போது பல கார்களில் உள்ளன.

கார்புரேட்டர் பயன்பாட்டில் இருந்த காலத்தில் 1954ல் மெர்சிடஸ்-பென்ஸ் F1 கார்களில் பயன்படுத்த ஆரம்பித்து பின்னர் அவர்களின் ரோட் கார் 300SL கல்விங்குக்கு‌ வந்தது. போஷ் இந்த சிஸ்டம் சப்ளை‌ செய்தது. பிறகு இப்ப‌ எல்லா கார்களிலும் இருக்கிறது. டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன்: போர்ஷே’ 80களில் அவர்களின் 962 ரேஸ் கார்ல சில மில்லி செகன்ட் நேரத்தை சேமிக்க அறிமுகப்படுத்தினார்கள். கிட்டத்தட்ட 2 மேனுவல் கியர்பாக்ஸ் மாதிரி அது வளர்ந்து இன்றைய டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆக‌ உள்ளது. டூயல் கிளட்ச் அடுத்த‌ பத்தாண்டுகளில் ரோடு‌ கார்களுக்கு வந்தது. முதலில் ஃபோக்ஸ்வாகன் மற்றும் ஆடி கார்களில் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று பல கார்களில் உள்ளது.

இந்த இன்ஜின் டிசைன் ஜார்ஜஸ் பாய்லாட் என்பவரால் 1912ல் பிரெஞ்ச் கிராண்ட் பிரீ பந்தயத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று கிட்டத்தட்ட எல்லா சாதாரண கார்களிலும் இதே‌ இன்ஜின் டிசைன்தான். மெக்லாரென் முதன்‌ முதலில் அறிமுகப்படுத்திய இது ரேஸ் கார்களின் எடையை அதன் வலிமை குன்றாமல் குறைத்து, வேகத்தை அதிகரிக்க உபயோகப்படுத்தப்பட்டது. இப்போது பல‌ கார்களில் பல இடங்களில் உபயோகிக்கின்றனர். பிஎம்டபிள்யூ, பென்ஸ் கார்களின் டேஷ்போர்டு‌‌ முதல் பல இடத்தில் உபயோகம்.

டிவிஎஸ், ஹீரோ மோட்டார்ஸ் கூட‌ ரேசிங்‌ டீம் வச்சிருக்காங்க. அவங்க ரேஸ்ல பயன்படுத்தும் பல கண்டுபிடிப்புகள் பைக்ல இப்ப நாம் சாதாரணமாக பயன்படுத்துகிறோம். கார், பைக் ரேஸ்கள் ஏதோ சும்மா நடத்தப்படுபவை அல்ல. அதில் இன்று பல காம்ப்ளக்ஸ் இன்ஜினியரிங் பயன்படுத்தப்படுகிறது. அதனால் பல புதுப்புது கண்டுபிடிப்புகள் வருகின்றன.‌ இந்த புதிய தொழில்நுட்பங்கள் ரேஸில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் நாம் உபயோகிக்கும் கார், பைக்குக்கு வருகிறது.

சென்னையில் இத்தனை ஆட்டோமொபைல் கம்பெனிகள் இருக்கிறது என்றால் அவர்களுக்கு தேவையான மனிதவளம் இங்கே உள்ளது. இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ரேஸ் டிராக்குகள் 3ல் 2 தமிழ்நாட்டில் உள்ளது‌‌. அப்படி என்றால், இந்திய ரேசிங் சீன்ல தமிழ்நாடு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என‌ புரிந்துகொள்ளலாம்.‌ 70’களில் சோழவரம் ரேஸ் மிக பிரசித்தி. அங்கிருந்து இப்போது இருங்காட்டுக்கோட்டை டிராக்கில் உலகளவில் திறமையான பந்தய வீரர்கள் உருவாகின்றனர்.‌ கோவையில் இன்னொரு‌ டிராக்கும் கிட்டத்தட்ட தயாராகி விட்டது.

இந்தியாவில் உலகின் பல ஆட்டோமொபைல் கம்பெனிகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவுகள் சென்னையில் தான் செயல்படுகின்றன. இப்படிப்பட்ட ஊரில் அரசு சிறிய அளவில் பார்முலா 4 ஸ்ட்ரீட் டிராக் பந்தயத்தை நகரின் சாலையில் நடத்த முற்படும்போது அதை எதிர்ப்பது என்பது, அரசை எதிர்ப்பது அல்ல. நம் மக்களின் வேலை வாய்ப்பை, புதியவற்றை கண்டுபிடிக்கும் திறனை, மனித வளத்தை, தொழில் முன்னேற்றத்தை எதிர்க்கும் செயல். இதை எதிர்ப்பவர்கள் தற்சார்பு என மாடு மேய்க்க சொல்பவர்கள், நன்கு படித்தவர்கள் கூட ஏமாந்து இப்படி இவர்கள் பின்னால் செல்வது வேதனை.

சிங்கப்பூர் நைட்‌ரேஸ் மற்றும் மொனாகோவின் பார்முலா 1 உலகப்புகழ் பந்தயம் பற்றி தேடிப்பார்த்தால் ஓரளவுக்கு புரியும். யாராவது அஜர்பைஜானின் பார்முலா 1 ரேஸுக்கு‌ பிறகு ஏன்‌ நம்மூர்‌ சினிமா ஆட்கள் முதல் பலரும் அங்கு ஷூட்டிங் போகிறார்கள் என யோசித்தால் கார் பந்தயங்கள் எந்த அளவுக்கு சுற்றுலாவை மேம்படுத்துகின்றன என்பது புரிந்துவிடும். அதன்‌ மூலம் நீண்டகால வருவாய் ஈட்டும் முயற்சிகள் பல நடக்கின்றன என்றும் தெரியும்.

இப்போது சென்னையில் திட்டமிடப்பட்டுள்ளது 4-ம் வரிசை சாதாரண பார்முலா 4 ரேஸ்கள். இனி வரும் காலங்களில் பார்முலா 1 ஸ்ட்ரீட் டிராக்காக சென்னை வர வேண்டும் என கனவு காண வேண்டும்‌ நாம். எதிர்ப்பவர்கள் குரைத்துக்கொண்டே இருக்கட்டும். நாம் கண்டுகொள்ளாமல் அடுத்த கட்டத்துக்கு நகர்வோம் என்கின்றனர் தொழில் துறையினர்.

எதிர்காலத்தில் சென்னை ஃபார்முலா 1 ஸ்ட்ரீட் டிராக்காக வர வேண்டும்..!

மருத்துவக்கல்லூரியில் சீட் ரூ.88 கோடி மோசடி..! பாரிவேந்தன் மனு தள்ளுபடி..!

எஸ்.ஆர்.எம்.மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கு இடம் வாங்கி தருவதாக 142 பேரிடம் 88 கோடியே 66 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் வாங்கி மருத்துவக் கல்லூரியில் இடம் தராமல் ஏமாற்றிவிட்டதாக மாணவர்களின் பெற்றோர்கள் கடந்த 2016-ல் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் செய்தனர்.

இதையடுத்து, எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர், ஐஜேகே கட்சியை சேர்ந்த பாபு, வேந்தர் மூவீஸ் சுதிர் உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மோசடி மற்றும் மற்றவர்கள் சொத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் மதன் மற்றும் பாரிவேந்தர் ஆகியோர் கடந்த 2016-ல் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில், மோசடி செய்த தொகையை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே, மாணவர்களிடம் பெற்ற தொகையை பாரிவேந்தர் திரும்ப அளித்ததையடுத்து அந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பாரிவேந்தருக்கு 2017 மற்றும் 2022-ல் சம்மன் அனுப்பப்பட்டது. அவரது மகன் ரவி பச்சமுத்துவுக்கு 2023 ஜனவரி 19 மற்றும் ஜனவரி 30-ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. மேலும், அவரது குடும்பத்தினருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, தனக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு தடை கோரி பாரிவேந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், 88.66 கோடி ரூபாயை திரும்ப அளித்து வழக்கில் இருந்து விடுதலை ஆகியுள்ளதால் இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இந்த பணத்தை ஜாமீன் பெறுவதற்காக பயன்படுத்தியுள்ளனர்.

வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவர் மீதான மூல வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த பணத்தை வேறு விதமாக சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, மனுதாரருக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக்கூடாது என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணை அமைப்பு அதன் கடமையை செய்வதை தடுக்க முடியாது. மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோர முடியாது. அவர்களது விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறி பாரிவேந்தரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

காலில் தீக்காயங்களுடன் மதுரை ஆட்சியரிடம் புகார் அளித்த மூதாட்டி..!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட கச்சகட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் மனைவி பிச்சையம்மாள். பிச்சையம்மாள் இன்று காலையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார். அந்த புகார் மனுவில், ‘எனது வீட்டின் அருகிலுள்ள நபர்கள் எனக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்கவும், பணம் மற்றும் நகையை பறிக்கவும் திட்டமிடுகின்றனர். இதற்காக எனது வீட்டை அடித்து நொறுக்கி உடலில் மண்ணைண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்தனர். பலத்த தீக்காயங்களுடன் உயிர் தப்பினேன்.

இது தொடர்பாக வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, என்னை கொல்ல முயன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். எனக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என மூதாட்டி பிச்சையம்மாள் அந்த மனுவில் குறிப்பிடுள்ளார்.