நிர்மலா சீதாராமனை கண்டித்து விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்..!

நாகப்பட்டினத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோயம்புத்தூர் வருகை புரிந்திருந்தார். அப்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிர்மலா சீதாராமன், “விஸ்வகர்மா குலத்தொழில் இல்லை” எனக் கூறியதாகவும், “விஸ்வகர்மாவில் 18 தொழில்காரர்களை சேர்ப்பதாக” தெரிவித்திருந்தார்.

நிர்மலா சீதாராமனின் இந்த கருத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து எதிரிப்பும் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாகப்பட்டினத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏந்த ஆர்ப்பாட்டத்தில் 300- கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் அதிமுக மனிதச் சங்கிலி போராட்டம்..!

தமிழகத்தில் மின் கட்டணம், குடிநீர், கழிவு நீர் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பத்திர பதிவு கட்டணம் உயர்வு,சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதன்படி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் தலைமையில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது. மாநகராட்சிக்குட்பட்ட வட்டங்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் இன்று காலை 10.30 மணி அளவில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் திரண்டு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினார்கள்.

நாம் தமிழர் கட்சி இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்..!

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் தொடர்ந்து விலகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளரும், நாம் தமிழர் கட்சியின் தலைமையில் நிர்வாகியுமான பிரபாகரன் மற்றும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகுவதாக தெரிவித்தார். அவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சாட்டினார்.

இவர்கள் விலகல் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சீமான், இருக்குற வரைக்கும் இருப்பாங்க. திடீர்னு அதிருப்தி வரும். திருப்தி இருக்குற இடத்துல போய் சேர்ந்துக்கற வேண்டியதுதான். அது ஒரு பெரிய சிக்கல் இல்லை. இது நாட்டுக்கும், மக்களுக்கும் பிரச்சனை ஒன்னும் இல்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், நாம் தமிழர் கட்சியில் கடந்த 9 ஆண்டுகளாக என்னால் முடிந்த வரை அனைத்து கட்சி பணிகளும் சிறப்பாக செய்தேன்.

2016 இல் முதன்முதலாக ஒரத்தூர் கிளை செயலாளராக நியமிக்கப்பட்டு 2018 விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆகவும் 2019 ல் விக்கிரவாண்டி தொகுதி செயலாளர் 2021 விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் ஆகவும் 2024 விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் ஆகவும் மற்றும் 2021 உள்ளாட்சி தேர்தலில் நானும் என் மனைவியும் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளராகவும் இருந்தோம்.

இரண்டு நாடாளுமன்றத் தேர்தல் இரண்டு சட்டமன்றத் தேர்தல் ஒரு உள்ளாட்சித் தேர்தல் இரண்டு இடைத்தேர்தல் என அனைத்து தேர்தலிலும் நாம் சிறப்பாக வேலை செய்தோம். இதல் உள்ளாட்சி தேர்தலைத் தவிர்த்து வேறு எந்த வேட்பாளருமே எங்கள் மாவட்டமோ எங்கள் தொகுதியோ சார்ந்தவர் கிடையாது.

அதேபோல உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சின்னத்தில் போட்டியிட்ட நான்கு மாவட்ட கவுன்சிலர் உட்பட அனைத்து இடங்களிலும் 75% வேட்பாளரை நிரப்பினோம், கட்சியின் அனைத்து ஒன்றிய பொறுப்புகளை முடிந்த அளவு இதுவரை நிரப்பி அண்ணனிடம் கையொப்பமும் வாங்கினோம், மாவட்டத்தின் சிறந்த தொகுதியாக செயல்பட்டு வந்தோம்.

இது நாள் வரை நாம் செய்த செயல்கள், உடல் உழைப்பு மற்றும் பண விரயம் இவை எவையும் அவர் பொருட்படுத்தும் படி இல்லை. இது அனைத்து பொறுப்பாளருக்கும் சமம். இந்த தொகுதியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது மற்றும் நீங்கள் என்னிடம் கேள்வியும் கேட்க கூடாது என் இஷ்டப்படி தான் நான் செய்வேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் உங்களை யாரும் போஸ்டர் ஒட்டவும் சொல்லவில்லை செலவு செய்யவும் கூறவில்லை என்று கூறினார்.

பலமுறை பேசியும் நான் செய்வது தான் செய்வேன் நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என்று கூறியதன் அடிப்படையில் மேலும் 2026 தேர்தலுக்கு இப்பொழுதே முகம் தெரியாத வேட்பாளரை அறிவிக்க வேண்டியதேவை என்ன? அண்ணா நாங்கள் உங்களிடம் கேட்டது பணமோ பொருளோ அல்ல எங்களுக்கான மரியாதை மற்றும் எங்களுக்கான அங்கீகாரம் இதுவே உங்களால் தர முடியவில்லை.

எனவே மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன் நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுகின்றேன். இதுநாள் வரை என்னுடன் பணியாற்றிய அனைத்து பொறுப்பாளர்களுக்கும் மற்றும் உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெயக்குமார்: உலகத்திலேயே அரசு நிகழ்ச்சிக்கு டி சர்ட் போட்டு செல்வது உதயநிதிதான்..!

உலகத்திலேயே அரசு நிகழ்ச்சிக்கு டி சர்ட் போட்டு செல்வது உதயநிதிதான். T – shirt போடுவதை நான் குறை சொல்லவில்லை கட்சி நிகழ்ச்சிக்கு மட்டும் போட்டு செல்லுங்கள் என ஜெயக்குமார் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் சட்டை போடாமல் T – shirt போட்டு, அதில் கட்சி சின்னத்தை பதிவு செய்து வருகிறார். அவரிடம் சட்டை அவரிடம் சட்டை இல்லையா..? சட்டை இல்லை என்றால் நாங்கள் வாங்கி தருகிறோம் என தெரிவித்தார்.

டி சர்ட் போட்டுக்கொண்டு அதில் அவரது கட்சியின் சின்னத்தை பொறித்துக்கொண்டு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது ஏற்புடையது இல்லை. கட்சி நிகழ்ச்சிக்கு எப்படி வேண்டுமானாலும் போங்கள், அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அரசு நிகழ்ச்சி என்றால் அதற்கு என்று சில விதிகள் உள்ளன.

2019 -ஆம் ஆண்டில் போடப்பட்ட உத்தரவில், அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கண்ணியமான உடையை அணிய வேண்டும். ஆண்களாக இருந்தால் சட்டை, ஃபார்மல் பேண்ட், வேட்டி என தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

T – shirt பாரம்பரிய உடையா? வீட்டில் நடைப்பயிற்சி செல்லும் போது T – shirt போடுவோம்.. அரசு நிகழ்ச்சிக்கு யாராவது T – shirt போட்டு செல்வார்களா? உலகத்திலேயே அரசு நிகழ்ச்சிக்கு T – shirt போட்டு செல்வது உதயநிதிதான்.  T – shirt போடுவதை நான் குறை சொல்லவில்லை கட்சி நிகழ்ச்சிக்கு மட்டும் போட்டு செல்லுங்கள்.

கண்ணியம் என ஒன்று இருக்கிறது. அதை பின்பற்ற வேண்டும். அதிலும் தப்பு பண்ணக்கூடாது. கட்சியின் சின்னத்தை போட்டு கொடியை போடுவது ஏற்புடையது அல்ல. உடை விஷயத்தை உதயநிதி இப்படியே தொடர்ந்தால் அதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்.” என ஜெயக்குமார் தெரிவித்தார்.

R.S.பாரதி: கும்பகோணத்தில் 2 பேர் குளித்த போது 100 பேர் இறக்கவில்லை..!

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நேற்று நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.  இந்த சம்பவம் குறித்து மக்கள் கூட்டத்தை கண்காணிக்க தமிழக காவல் துறை தவறியதாக அதிமுகவும், பாஜகவும் குற்றம் சாட்டியுள்ளன.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக அமைப்பு செயலாளர் R.S.பாரதி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில், கும்பகோணத்தில் கூட தான் 2 பேர் குளித்த போது 100 பேர் இறந்தார்கள். ” ஜெ. தேர்தல் பிரச்சாரத்தில் கூட 6 பேர் இறந்தார்கள்.. குடிநீர் வசதி ஏற்படுத்தி தான் கொடுத்திருந்தோம். உடல்நிலை சரியில்லாதவர்கள் போயிருக்க கூடாது. அஜாக்கிரதையால் ஏற்பட்டது தான் இந்த உயிரிழப்பு என தெரிவித்தார்.

ஜெயக்குமார்: துணை முதலமைச்சரிடம் சட்டை இல்லை என்றால் நாங்கள் வாங்கி தருகிறோம்..!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் சட்டை போடாமல் T – shirt போட்டு, அதில் கட்சி சின்னத்தை பதிவு செய்து வருகிறார். அவரிடம் சட்டை அவரிடம் சட்டை இல்லையா..? சட்டை இல்லை என்றால் நாங்கள் வாங்கி தருகிறோம் என தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் சட்டை போடாமல் T – shirt போட்டு, அதில் கட்சி சின்னத்தை பதிவு செய்து வருகிறார். அவரிடம் சட்டை அவரிடம் சட்டை இல்லையா..? சட்டை இல்லை என்றால் நாங்கள் வாங்கி தருகிறோம் என தெரிவித்தார்.

டி சர்ட் போட்டுக்கொண்டு அதில் அவரது கட்சியின் சின்னத்தை பொறித்துக்கொண்டு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது ஏற்புடையது இல்லை. கட்சி நிகழ்ச்சிக்கு எப்படி வேண்டுமானாலும் போங்கள், அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அரசு நிகழ்ச்சி என்றால் அதற்கு என்று சில விதிகள் உள்ளன.

2019 -ஆம் ஆண்டில் போடப்பட்ட உத்தரவில், அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கண்ணியமான உடையை அணிய வேண்டும். ஆண்களாக இருந்தால் சட்டை, ஃபார்மல் பேண்ட், வேட்டி என தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

T – shirt பாரம்பரிய உடையா? வீட்டில் நடைப்பயிற்சி செல்லும் போது T – shirt போடுவோம்.. அரசு நிகழ்ச்சிக்கு யாராவது T – shirt போட்டு செல்வார்களா? உலகத்திலேயே அரசு நிகழ்ச்சிக்கு T – shirt போட்டு செல்வது உதயநிதிதான்.  T – shirt போடுவதை நான் குறை சொல்லவில்லை கட்சி நிகழ்ச்சிக்கு மட்டும் போட்டு செல்லுங்கள்.

கண்ணியம் என ஒன்று இருக்கிறது. அதை பின்பற்ற வேண்டும். அதிலும் தப்பு பண்ணக்கூடாது. கட்சியின் சின்னத்தை போட்டு கொடியை போடுவது ஏற்புடையது அல்ல. உடை விஷயத்தை உதயநிதி இப்படியே தொடர்ந்தால் அதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்.” என ஜெயக்குமார் தெரிவித்தார்.

வருவாய் கோட்டாட்சியர் உட்பட போலி சான்றிதழ் மூலம் அரசு பணியில் அமர்ந்த 9 பேர் மீது வழக்குப்பதிவு

தமிழ் வழி கல்வியில் பயின்றதாக போலி சான்றிதழ் பெற்று அரசு பணியில் சேர்ந்த 4 அதிகாரிகள் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் தொலைதூர கல்வியில் நடந்த முறைகேடு பற்றி 2020-ல் துணைவேந்தர் உயர்கல்வித்துறை செயலருக்கு அறிக்கை அனுப்பினார். அறிக்கையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அந்த விசாரணையில் போலி ஆவணங்கள் மூலம் அரசு பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மதுரை உயர்நீதிமன்ற கிளை இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டது. 2012 முதல் 2019 ஆண்டு வரை தொலைதூர கல்வி முலம் 4 பேர் தமிழ் வழி கல்வியில் பயின்றதாக போலியான பட்டம் பெற்றது தெரிய வந்தது. வணிகவரி உதவி ஆணையர் சொப்னா, காவல்துறை உதவி கண்காணிப்பாளர் சதீஷ்குமார், வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி மீது வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் என்.ஏ.சங்கீதா மீதும் லஞ்சஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. உடந்தையாக இருந்த தொலைதூர கல்வி நிலைய அதிகாரிகள் சத்தியமூர்த்தி, புருஷோத்தமன் உள்பட 9 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்: குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக அரசியல் செய்யாதீர்..!

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நேற்று நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து மக்கள் கூட்டத்தை கண்காணிக்க தமிழக காவல் துறை தவறியதாக அதிமுகவும், பாஜகவும் குற்றம் சாட்டியுள்ளன.

இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது, நேற்று வெயிலின் தாக்கம் மிக கொடூரமாக இருந்தது. 5 பேரும் இறந்த பின்னர் தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பின் சிகிச்சை பலனின்றி யாரும் உயிரிழக்கவில்லை. 5 பேர் உயிரிழந்தது மிகுந்த வருத்தம் தருகிறது.

இதில் அரசியல் செய்ய நினைக்கக்கூடாது. சாகச நிகழ்ச்சியின்போது வெயிலின் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 102. விமானப்படை கேட்ட அனைத்து உதவிகளும் செய்யப்பட்டன. ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேரும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 3 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

குடிநீர், குடை உள்ளிட்டவற்றை எடுத்து வருமாறு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தோம். தேவையான அளவு குடிநீர் வசதி, கழிப்பிடம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்திருந்தோம். அரசு மருத்துவமனைகளில் 4000 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அரசு சார்பில் மருத்துவ முகாம், மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் என அனைத்தும் தயார் செய்யப்பட்டிருந்தது.

7500 காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக அரசியல் பேசுவதை தவிர்க்குமாறு மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கள்ளக்காதலியை அதிகாரி என கூறி தொழிலதிபர்களை ஏமாற்றி ரூ.15 கோடிக்கு மேல் சொத்து வாங்கி குவித்த ஏட்டு..!

கள்ளக்காதலியை அரசு அதிகாரி என கூறி 30 தொழிலதிபர்களை ஏமாற்றி போலீஸ் ஏட்டு ரூ.15 கோடிக்கு மேல் சொத்து வாங்கி குவித்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம், வீ.கே.புதூர் பகுதியைச் சேர்ந்த முருகராஜ் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் ஏட்டுவாக பணிபுரிந்து வருகிறார். இவர் ஓசூரைச் சேர்ந்த வளர்மதியை மதுரை டிஆர்ஓ எனக்கூறி மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சசிகுமார் என்பவருக்கு அறிமுகப்படுத்தி பட்டா வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் பெற்று மோசடி செய்து உள்ளார்.

இதுகுறித்து சசிகுமார் அளித்த புகாரின்பேரில், நெல்லை சந்திப்பு கவலை நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ஏட்டு முருகராஜ் மற்றும் வளர்மதியை கைது செய்து விசாரித்தனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில், முருகராஜின் சொந்த ஊரான வீ.கே.புதூர் அருகே கலங்கல் கிராமத்தை சேர்ந்த வளர்மதி. சில ஆண்டுகளுக்கு முன்பு, வளர்மதி தனது தந்தையுடன் ஓசூருக்கு இடம் பெயர்ந்தார்.

அதன் பின்னர், அவ்வப்போது சொந்த ஊருக்கு செல்லும்போது முருகராஜூடன் அவர் பழக ஆரம்பித்து கள்ளக்காதலாக மாறியது. சொகுசு வாழ்க்கை வாழ இருவரும் ஆசைப்பட்டனர். அதன் விளைவாக வளர்மதி, தன்னை டிஆர்ஓ மற்றும் டாக்டர் என கூறியும், முருகராஜ் தன்னை இன்ஸ்பெக்டர் எனக்கூறியும் 30க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக மோசடியில் சிக்கினால் புகார் கொடுக்க தயங்கும் சில தொழில் அதிபர்களை குறிவைத்து முருகராஜ், தனது மனைவி டிஆர்ஓ என்றும் தான் பிரச்னை இல்லாமல் வேலையை முடித்து விடுவதாகவும் கூறி அணுகி உள்ளார். அதன் பின்னர் வளர்மதி அந்த நபர்களிடம் டிஆர்ஓ தோரணையில் பேசி ஒவ்வொருவரிடமும் பல லட்சங்களை மோசடி செய்து உள்ளனர். வளர்மதி தனது பெயரில் 5-க்கும் மேற்பட்ட வங்கிகளில் புதிதாக கணக்கு தொடங்கி உள்ளார்.

அதில் சில வங்கி கணக்குகளில் முருகராஜ் பெயரை தனது கணவர் என்று அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளார். அதிகாரப்பூர்வமாக கிடைத்த 2 வங்கி கணக்குகளில் மட்டுமே கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இவர்களது வங்கி கணக்கில் சுமார் ரூ.15 கோடிக்கு பணப்பரிவர்த்தனை நடந்து உள்ளது.

மேலும் வளர்மதியை நெல்லை சந்திப்பு காவல்துறை கைது செய்த பின்னர் அவரது வீட்டில் சென்று சோதனையிட்டு அங்கு ஏராளமான சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். அந்த ஆவணங்கள் அனைத்தும் வளர்மதியிடம் இருந்து முருகராஜிக்கு மாற்றி எழுதிக் கொடுக்கப்பட்ட சொத்து ஆவணங்கள் ஆகும். அந்த ஆவணங்களில் ஓசூரில் 9 சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது.

சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் 240 பேர் மயக்கம்..! சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழப்பு..!

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நேற்று நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.

சென்னை மெரினா கடற்கரையில் தற்காலிக முகாமில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 93 பேர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி, ஓமந்தூரார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 10-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் கார்த்திகேயன், தினேஷ்குமார், ஜான் பாபு, சீனிவாசன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் மெரினா காமராஜர் சாலை அருகே மயங்கி கிடந்த 55 வயது நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படாமல் இருக்க போக்குவரத்து காவல்துறை போக்குவரத்தில் மாற்றங்கள் செய்திருந்தனர். குறிப்பாக மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக வேறு சாலைகளை பயன்படுத்த காவல்துறை அறிவுறுத்தியிருந்தனர். ஆனாலும், சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விமான சாகச நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே போக்குவரத்து நெரிசல் படிப்படியாக உயர்ந்தது. 11 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி 1 மணிக்கு முடிந்தது. அதன்பின், ஒரே நேரத்தில் பொதுமக்கள் கிளம்பியதால் மெரினா காமராஜர் சாலை, சாந்தோம், பட்டினப்பாக்கம், அடையார் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ரத்னா கபே, ஐஸ்அவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, வி.எம்.தெரு, மந்தைவெளி, மயிலாப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் நெரிசலால் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடினர். உட்புற சாலைகளை பயன்படுத்தலாம் என சென்ற வாகனங்கள் நெரிசலில் சிக்கின. தொடர் வாகன நெரிசலால் அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், வேப்பேரி, சென்ட்ரல், பாரிமுனை என மொத்தத்தில் சென்னையே வாகன நெரிசலால் ஸ்தம்பித்தது.

ரயில்கள், பேருந்துகளில் கூட்ட நெரிசலில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த மக்களின் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் ‘மோசமான ஏற்பாடு’ என்று தலைப்பிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை ‘டேக்’ செய்து பலர் பதிவிட்டு வருகின்றனர். அந்த போட்டோக்களும், வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.